2 மாதத்தில் 10 கிராம் தங்கம் ரூ. 5,410 விலை ஏற்றம்! தங்கம் விலை நிலவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம். இந்தியர்களுக்கு ஆசை தீராத உலோகம். இந்தியாவில் இருக்கும் எல்லா வீடுகளிலும், சாதி மத பேதம் இல்லாமல் தங்கத்துக்கு என்று ஒரு சமூக அந்தஸ்தைப் பெற்று இருக்கிறது.

பல இடங்களில் தங்கத்துக்கு இருக்கும் மரியாதை, மனிதர்களுக்கு கூட கிடைப்பதில்லை.

அந்த அளவுக்கு தங்கத்தை நம் மக்களே உருகி உருகி நேசிக்கிறார்கள். சரி தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இன்றைய விலை நிலவரத்துக்கு வருவோம்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அமெரிக்கா கூட இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என அதிபர் ட்ரம்பே ஒப்புக் கொண்டது தான் தாமதம். பங்குச் சந்தைகள் எல்லாம் பரபரவென சரியத் தொடங்கிவிட்டது. இப்போது இந்த வைரஸால் உலக பொருளாதாரத்தோடு பல நாட்டு பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் சரிந்து கொண்டு இருக்கின்றன. கொரோனா வைரஸ் பயத்தால் பெரும்பாலான பங்குச் சந்தைகள் அதள பாதாளம் தொட்டுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா & ஐரோப்பா சந்தைகள்

அமெரிக்கா & ஐரோப்பா சந்தைகள்

நேற்று (மார்ச் 06, 2020) அமெரிக்காவின் நாஸ்டாக் 1.87 % சரிந்து இருக்கிறது. அதே போல லண்டனின் எஃப் டி எஸ் இ 3.62 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 4.14 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.37 % சரிவு என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் எல்லாமே சரிந்து இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

நேற்று மார்ச் 06, 2020, ஆசியாவில் அனைத்து சந்தைகளும் சரிவில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி இண்டெக்ஸ் 2.72 % சரிந்து இருக்கிறது. குறைந்த அளவு சரிவு கண்டு இருக்கும் சந்தை என்றால், அது சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தான். சீன சந்தை 1.21 % சரிந்து இருக்கிறது. இப்படி பங்குச் சந்தைகள் பயங்கரமாக சரியும் போது பாதுகாப்பு நடவடிக்கை போல, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலை ஏற்றம்

ஆகையால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த 01 ஜனவரி 2020-ல் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 40,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. நேற்று, 06 மார்ச் 2020-ல் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 46,160. ஆக இந்த இரண்டு மாத காலத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமாராக 5,410 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. இது போக டாலர் வேறு இந்திய தங்கத்தின் விலையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

பொதுவாக, அமெரிக்க டாலரில் தான் நாம் தங்கத்தை இறக்குமதி செய்வோம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். கடந்த ஜனவரி 06, 2020 அன்று ஒரு டாலர் = 71.94 ரூபாயாக இருந்தது. இப்போது ஒரு டாலருக்கு 73.78 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இதனால் எப்படி தங்கம் விலை அதிகரிக்கிறது என்று கேட்கிறீர்களா..?

உதாரணம் 1

உதாரணம் 1

கடந்த ஜனவரி 06, 2020 அன்று, ஒரு டாலர் = 71.94 ரூபாய். 100 கிராம் தங்கத்தை 1,000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 1,000 டாலர் 71,940 (71.94*1000) கொடுத்து வாங்குவோம். அதாவது 71,940 ரூபாய் கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 719 ரூபாய்.

உதாரணம் 2

உதாரணம் 2

இன்று மார்ச் 07, 2020, ஒரு டாலர் = 73.78 ரூபாய். அதே 100 கிராம் தங்கத்தை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 1000 டாலர் = 73,780 (73.78*1000) கொடுத்து வாங்குவோம். அதாவது 73,780 ரூபாய் கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 737 ரூபாய். ஆக இரண்டே மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை (737 - 719) 18 ரூபாய் அதிகரித்து விட்டது. இதற்கு முழு முதல் காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு தான்.

தங்கத்தின் விலை உயர்வு

தங்கத்தின் விலை உயர்வு

இப்படி தங்கத்தின் விலை உயர எல்லா சூழல்களும் இருக்கும் போது, இந்தியாவில், இரண்டே மாதத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை 5,400 ரூபாய் அதிகரிக்காமல் என்ன ஆகும். இப்படியே விலை அதிகரித்துக் கொண்டே போனால், ஒரு நாள் தங்கத்தை கண்காட்சியில் மட்டுமே பார்க்கக் கூடிய பொருளாகிவிடும் நிலை வரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price: 24 carat 10 gram gold price rise Rs 5410 in 2 months

Gold is in its race. The precious yellow metal is constantly rising towards high. Now 24 carat 10 gram gold price is Rs 46,160 as on March 06, 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X