நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. மெட்டா, டிவிட்டர் ஊழியர்களுக்கு குட்நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெட்டா, டிவிட்டர் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் அதிகளவிலான டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், புதிய பொருளாதாரமாகக் கூறப்படும் டிஜிட்டல் நிறுவன ஊழியர்கள் பழைய பொருளாதார நிறுவனங்கள் அழைக்கத் துவங்கியுள்ளது.

 

அடுத்தடுத்து பெரிய நிறுவனங்கள் டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவருவது மட்டும் அல்லாமல் புதிய ஊழியர்களைச் சேர்க்க வேண்டாம் எனப் பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ள காரணத்தால் வேலைவாய்ப்பு பெறுவது மிகவும் கடினம் எனப் பலரும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் மெட்டா, டிவிட்டர் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களைப் பிற துறை சார்ந்த முன்னணி டெக் நிறுவனங்கள் அழைத்துள்ளது.

புதிய சிஇஓ-வை தேடும் எலான் மஸ்க்.. அவ்வளவு தானா.. டிவிட்டர் ஊழியர்கள் கொண்டாட்டம்..! புதிய சிஇஓ-வை தேடும் எலான் மஸ்க்.. அவ்வளவு தானா.. டிவிட்டர் ஊழியர்கள் கொண்டாட்டம்..!

ஜாக்குவார் லேண்டு ரோவர்

ஜாக்குவார் லேண்டு ரோவர்

சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் ஆடம்பர பிரிவில் முக்கியமான நிறுவனமாக இருக்கும் ஜாக்குவார் லேண்டு ரோவர் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சுமார் 800 டெக் ஊழியர்களை ஆட்டானமஸ் டிரைவிங் முதல் செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, மெஷின் லேர்னிங் வரையில் பல துறையில் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Barclays நிறுவனம்

Barclays நிறுவனம்

இதேபோல் பிரிட்டன் நாட்டின் முன்னணி வங்கியான Barclays நிறுவனம் பின்டெக் வர்த்தகத்தைத் துவங்க உள்ள காரணத்தால் மெட்டா, டிவிட்டர் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் குறைந்தது 1000 பேருக்கு எங்களுடைய டெக் பிரிவில் சேர்க்க முடியும் என அறிவித்துள்ளது.

சிஓஓ Ashton-Rigby
 

சிஓஓ Ashton-Rigby

இதுகுறித்து Barclays நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Ashton-Rigby கூறுகையில் நான் எப்போது ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்பதை நம்புவேன். இந்த நிலையில் மெட்டா, டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்தால் கட்டாயம் Barclays அணுகலாம் என Ashton-Rigby தனது லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜாக்குவார் லேண்டு ரோவர் நிறுவனம், தான் பணியில் சேர்க்க விரும்பும் தொழில்நுட்ப ஊழியர்கள் அடுத்த தலைமுறை கார்களைத் தயாரிக்க அவசியமான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

800 புதிய டெக் ஊழியர்கள்

800 புதிய டெக் ஊழியர்கள்

ஜாக்குவார் லேண்டு ரோவர் நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்படும் 800 புதிய டெக் ஊழியர்களை இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, இந்தியா, சீனா மற்றும் ஹங்கேரி முழுவதும் பணியமர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

நவம்பர் மாதம் துவக்கம் முதல் பணிநீக்க அறிவிப்புகள் வெளியாகத் துவங்கியது. குறிப்பாகப் பெரிய டெக் நிறுவனங்கள் மத்தியில் அடுத்தடுத்து பணிநீக்க அறிவிப்புகள் வந்தது டெக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெட்டா, அமேசான், டிவிட்டர்

மெட்டா, அமேசான், டிவிட்டர்

இந்த நிலையில் நவம்பர் மாதத்தின் 16 நாட்களில் மட்டும் மெட்டா, அமேசான், டிவிட்டர் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டும் தனது உலகளவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 38000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக layoffs.fyi என்னும் டேட்டா அக்ரிகேட்டர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது.

மெட்டா

மெட்டா

இந்த நவம்பர் மாதத்தில் அதிகப்படியாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது என்றால் அது கட்டாயம் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா தான். நவம்பர் மாதம் 9 ஆம் தேதி செலவுகளைக் குறைக்க வேறு வழியே இல்லாமல் சுமார் 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

டிவிட்டர்

டிவிட்டர்

மொட்டா நிறுவனத்தைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி டிவிட்டர் 3700 ஊழியர்களையும், இதோடு டிவிட்டர் தனது ஒப்பந்த ஊழியர்கள் பிரிவில் சுமார் 4400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் ஈமெயில்

எலான் மஸ்க் ஈமெயில்

இது தவிர வியாழக்கிழமை முடிவில் எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சல் எதிரொலியாகச் சுமார் 1200க்கும் அதிகமான ஊழியர்கள் 3 மாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

அமேசான்.காம்

அமேசான்.காம்

லேட்டெஸ்ட் ஆக நவம்பர் 16ஆம் தேதி உலகின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமான அமேசான்.காம் தனது டிவைசஸ் மற்றும் டெக் பிரிவில் இருந்து சுமார் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. மெட்டா, அமேசான், டிவிட்டர் மட்டும் அல்லாமல் பல முன்னணி டிஜிட்டல் மற்றும் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news for Twitter, Facebook employee who lost jobs; 2 big companies ready to hire

Good news for Twitter, Facebook employee who lost jobs; 2 big companies ready to hire
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X