1,20,000 ரூபாய் போனஸ்.. கூகுள் அறிவிப்பால் ஊழியர்கள் செம குஷி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் அசத்தால் இந்த முடிவை ஆல்பபெட் மட்டும் அல்லாமல் உலகில் பெரும்பாலான டெக் சேவை நிறுவனங்கள் எடுத்துள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் ஆல்பபெட் இந்த வருடத்திற்கும் தனது ஊழியர்களின் முக்கிய நலனுக்காகக் கூடுதலான போனஸ் கொடுக்க முடிவு செய்துள்ளது.

 ஆல்பபெட் நிறுவனம்

ஆல்பபெட் நிறுவனம்

ஆல்பபெட் நிறுவனம் கடந்த வருடம் கொரோனா தொற்று பாதிப்பால் ஊழியர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், தங்களது பணியில் எவ்விதமான குறைபாட்டையும் ஏற்படுத்தவில்லை. இதன் வாயிலாக ஊழியர்களைப் பாராட்டும் விதமாகவும், அதேநேரத்தில் ஊழியர்களுக்கு நலனை மேம்படுத்துவதற்காகவும் Work From Home போனஸ் கொடுத்தது.

 ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

இந்நிலையில் இந்த வருடமும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ள காரணத்தால் உலகம் முழுவதும் இருக்கும் ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதற்குக் கூடுதலாக 1600 டாலர் மதிப்பிலான போனஸ் அளிப்பதாக அறிவித்துள்ளது.

 1600 டாலர் போனஸ்
 

1600 டாலர் போனஸ்

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 1600 டாலர் போனஸ்-க்கு இணையாகத் தத்தம் நாடுகளின் நாணயத்திற்கு இணையாகப் பணத்தைக் கொடுக்கப்படும் என ஆல்பெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 ஊழியர்கள் நல்வாழ்வு பாதிப்பு

ஊழியர்கள் நல்வாழ்வு பாதிப்பு

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்பபெட் செய்த ஆய்வில் இந்நிறுவனத்தின் ஊழியர்களின் நல்வாழ்வு (Well being) கடந்த ஒரு வருடத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது கூகுள் அறிவித்த பல்வேறு போனஸ் தொகைக்குப் பின்பு எடுக்கப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

 கூடுதலான போனஸ்

கூடுதலான போனஸ்

ஆல்பபெட் நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் ஊழியர்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட Work From Home கொடுப்பனவு மற்றும் இதர போனஸ் தொகைக்கும் கூடுதலான போனஸ் தொகையைத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் கூகுள் ஊழியர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google announced additional $1,600 staff bonus globally this year for employee wellbeing

Google announced additional $1,600 staff bonus globally this year for employee wellbeing 1,20,000 ரூபாய் போனஸ்.. கூகுள் அறிவிப்பால் ஊழியர்கள் செம குஷி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X