9 வயதில் ஆப் டெவலப்பர்.. அசத்தும் இந்திய சிறுமிகள்.. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் , துபாயினை சேர்ந்த 9 வயதான சிறுமி ஹனாவுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

9 வயதிலான ஒரு குழந்தை வெப் டெவலப்பராக முடியுமா என்றால்? அது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மை தானா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் இது உண்மை தான்.

மிக இளம் வயது டெவலப்பரான ஹனா, இந்தியாவினை சேர்ந்தவராவார்.

ஆபிஸ் வரணுமா, வேலையே வேண்டாம்.. ஆப்பிள் உயர் அதிகாரி அறிவிப்பால் டிம் குக் அதிருப்தி..! ஆபிஸ் வரணுமா, வேலையே வேண்டாம்.. ஆப்பிள் உயர் அதிகாரி அறிவிப்பால் டிம் குக் அதிருப்தி..!

கோடிங் டீச்சர்

கோடிங் டீச்சர்

 

டிம் குக்கின் வாழ்த்து மெயிலால் நெகிழ்ச்சியடைந்த ஹனாவின் பெற்றோர், 10 வயதான ஹனாவின் அக்கா லீனா பாத்திமா 10 வயதானவர். இவர் தான் ஹனாவுக்கு கோடிங் டீச்சர் என்றும் தெர்வித்துள்ளனர்.

அதெல்லாம் சரி, அந்த குழந்தை அப்படி என்ன ஆப்பினை உருவாக்கியிருக்கிறார்? இந்த அளவுக்கு பிரபலமாக என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

என் ஆப் அது?

என் ஆப் அது?

9 வயதில் ஒரு குழந்தை ஆப்பினை உருவாக்கியிருக்கிறது என்பதே பாராட்டதக்க விஷயம் எனலாம். அதிலும் அந்த குழந்தை உருவாக்கியது குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஒரு ஆப் (hana's story) ஆகும்.

பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு சென்று விடுவதால், இதுபோன்ற வாய்ப்புகள் குழந்தைகளுக்கு கிடைக்காமலே போகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதற்காக பல ஆப்கள் வந்து விட்டன. ஆக குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு போட்டு காட்டலாம். அவர்களுக்கு கதைகளை இதன் மூலம் கூறலாம். ஆனால் இத்தகைய ஆப்பினை இரு குழந்தைகளும் இணைந்து உருவாக்கியுள்ளது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹனா - டீனா இணைந்து இணையதளம்

ஹனா - டீனா இணைந்து இணையதளம்

அப்படி ஒரு ஆப்பினை தான் ஹனாவும், டீனாவும் இணைந்து செய்துள்ளனர். இவர்களுக்கு இவர்களது பெற்றோரும் ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்து வந்துள்ளனர். முதல் ஆசிரியர்களான பெற்றோர், இரண்டு குழந்தைகளும் இணைந்து இப்படி ஸ்டோரி டெல்லிங் ஆப்பினை உருவாக்கியுள்ளனர். இதில் குழந்தைகளுக்கு வார்த்தைகள், வண்ணங்கள் மற்றும் விலங்குகள் பற்றியும் கற்று கொடுக்கிறது.

சகோதரிகளின் ஆர்வம்

சகோதரிகளின் ஆர்வம்

கேரளா வெள்ளத்தில் தத்தளித்த போது கேரளா முதல்வரின் நிதி திரட்டல் லிங்கினை தனது இணைய பக்கத்தில் ஹனா கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஹனா ஒரு நாள் டிம் குக்கிடம் பணிபுரியலாம், லீனா எதிர்கால படிப்புக்காக அமெரிக்கா செல்ல விரும்புகிறாள். ஏனெனில் கோடிங்கில் உள்ள சவால்களை தீர்க்கவும் அதனை கற்றுக் கொள்வதிலும் லீனா ஆர்வம் காட்டுவதாகவும், இந்த சகோதரிகளின் ஆர்வம், இன்றைய இளைய சமுதாயத்தை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

எது எப்படியோ 9 வயதில் கோடிங் கற்றுக் கொண்டு ஆப்பினை உருவாக்கியுள்ள இந்த சகோதரிகளுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: apple ஆப்பிள்
English summary

Hanas app: Apple CEO tim cook best wishes 9 year old Indian app developer

Hanas app: Apple CEO tim cook best wishes 9 year old Indian app developer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X