இந்தியாவில் அதிகச் சம்பளம் கொடுக்கப்படும் துறைகளில் முதல் இடத்தில் இருக்கும் டெக் துறையில் CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்..
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பதால், இப்பிரிவை தாண்டி எந்தப் பிரிவில்.. யாருக்கு அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
டெக் துறை
டெக் துறையில் அதிகப்படியான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் சேவை அதிகரித்துள்ளதால், பல புதிய பிரிவுகள் உருவாகியுள்ளது, இதனால் டெக் துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஓரே நேரத்தில் பல துறையில் டிமாண்ட் அதிகமாகியுள்ள நிலையில் சில முக்கியமான பிரிவில் திறமையான ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது.
OTT தளங்கள்
தற்போது சந்தை நிலவரத்தின் படி OTT தள நிறுவனங்கள் 10 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் கொண்ட frontend தொழில்நுட்ப அதிகாரிகளுக்குத் தான் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இண்டர்நெட் சேவை நிறுவனத்தில் 6-10 வருட அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கும், food tech பிரிவில் இருக்கும் 2-5 வருடப் பணி அனுபவம் கொண்ட இளம் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது.
ஈகாமர்ஸ்
இதேபோல் துறை வாரியாகப் பிரித்தால் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் backend tech பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதேபோல் பின்டெக் பிரிவில் டேட்டா சைன்டிஸ்ட், குவிக் காமர்ஸ் பிரிவில் ஆப் டெவலப்பர்-களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது.
டேட்டா சையின்ஸ்
மேலும் பைதான் மொழியைக் காட்டிலும் டேட்டா சையின்ஸ் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது, மொபைல் பிரிவில் Android, frontend framework பிரிவில் React, frontend மொழிகள் பிரிவில் HTML மற்றும் CSS அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தி வருகிறது என Instahyre தரவுகள் காட்டுகிறது.
அதிக டெக் வல்லுனர்கள்
இந்தியாவில் அதிக டெக் வல்லுனர்கள் இருக்கும் நகரமாகப் பெங்களூர் விளங்குகிறது, கொரோனா தொற்றுக்குப் பின்பு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அதிகப்படியான டெக் வல்லுனர்கள் உருவாகியுள்ளனர். இதனால் கோவை, மதுரை, புனே, இந்தூர், அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளிலும் டெக் வல்லனர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications