இன்று நாட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று பெட்ரோல் டீசல் விலை. ஏனெனில் அனுதினமும் உச்சம் தொட்டு வருகின்றது. சொல்லப்போனால் போகிற போக்கினை பார்த்தால் விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்போல் இருக்கிறதே.
இந்தளவுக்கு விலையேற்றம் கண்டு வரும் நிலையில், இந்த விலையேற்றத்திற்கு காரணம் குறைவான உற்பத்தி என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்களது உற்பத்தியினை குறைத்துள்ளன. ஆனால் தற்போது தேவை மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவதாக பிரதான் தெரிவித்துள்ளார்.
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!

இறக்குமதி அதிகம்
தற்போது தேவையானது அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்தளவுக்கு எண்ணெய் நாடுகளால் சப்ளை செய்ய இயலவில்லை. அதிலும் இந்தியாவில் 80 சதவீதம் கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம். இதனால் இது ஒரு சவாலான நிலையை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள், கொரோனாவினால் எண்ணெய்
உற்பத்தியினை குறைத்துள்ளன. சிலவை உற்பத்தியினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

நுகர்வு அதிகரிப்பு
இதனால் இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் நுகர்வு அதிகரித்து வருகின்றது. உலக அளவில் எரிபொருள் நுகர்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆக இந்த விலையேற்றம் மிக கவலையளிக்க கூடிய ஒரு விஷயமே. இதற்கிடையில் மத்திய அரசு இப்பிரச்சனைகளை குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது.

புதிய திட்டங்கள் தொடக்கம்
குறிப்பாக சோலார் எனர்ஜி, எத்தனால் உற்பத்தி போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது என்றும் பிரதான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று ONGC-யின் இரு திட்டங்களை தொடங்கி வைத்தவர் இவ்வாறு கூறியுள்ளார். புதுபிக்கதக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பரிப்பதற்கும், இந்தியாவின் ஆத்மா நிர்பார் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களையும் ஊக்குவிக்கும் விதமாகவும் இரண்டு திட்டங்களை பிரதான் தொடங்கி வைத்துள்ளார்.

இதுவும் ஒரு காரணம்
ஒரு புறம் மேற்கூறியவாறு உற்பத்தி குறைப்பு ஒரு காரணமாக இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரிகள் மிக அதிகம். ஆக இதுவும் எரிபொருள் விலையில் எதிரொலிக்கின்றன, உண்மையில் இது நாளுக்கு நாள்
அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிக தொகையை இந்த எரிபொருளுக்காக செலவிட வேண்டியிருக்கும். ஆக அரசு இந்த வரி விகிதத்தினை குறைக்கலாம் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பும்.