15 நிமிடத்தில் ஒருவரின் வாழ்க்கையை மாற்ற முடியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமுக வலைத்தளத்தில் தினமும் நாம் பல பதிவுகளைப் பார்க்கிறோம், அதில் ஒரு சில பதிவுகள் மட்டுமே நம்மை யோசிக்கவும், மனத்திற்கு நெருக்கமாகவும், நம்பிக்கை அளிக்கும் விதமாக அமையும்.

அப்படிப்பட்ட ஒரு பதிவை தான் தென்காசி மற்றும் சென்னையில் இயங்கி வரும் Fabevy Technologies நிறுவனத்தின் தலைவரான வேல்முருகன் சீனிபாண்டியன் தனது லிங்க்டின் தளத்தில் ஒரு 15 நிமிடத்தில் அப்படி என்ன செய்து விட முடியும்? என்று ஒரு பதிவை போட்டு உள்ளார்.

இந்தப் பதிவு பல இளைஞர்களும், பணியில் இருக்கும் பல கோடி வல்லுனர்களுக்கும் முக்கியமானதாக விளங்குகிறது.

அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேருக்கு ஐடி வேலை..!அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேருக்கு ஐடி வேலை..!

வேல்முருகன் சீனிபாண்டியன்

வேல்முருகன் சீனிபாண்டியன்

Fabevy Technologies நிறுவனத்தின் தலைவரான வேல்முருகன் சீனிபாண்டியன் தனது லின்கிடுன் தளத்தில் செய்த பதிவு இது தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, எனது கான்டெக்ட் லிஸ்ட் -இல் இல்லாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

சார் என்னோட name Alphanse. நேத்து நீங்க நடத்துன இண்டர்வியூவ்-ல பைனல் ரவுண்டில் ரிஜெக்ட் ஆகிவிட்டேன். என Alphanse போனில் கூறியுள்ளார்.

அல்ஃபான்ஸ்

அல்ஃபான்ஸ்

அல்ஃபான்ஸ் கூறியதை கேட்ட வேல்முருகன் சீனிபாண்டியன் அதற்கு மன்னிக்கவும். முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

உடன் அல்ஃபான்ஸ் நன்றி சார். சார், ஒரு உதவி கேக்கலாமா? என்று கூற சொல்லுங்க எனப் பேச துவங்கினார் வேல்முருகன்

ஒரே ஒரு மீட்டிங்

ஒரே ஒரு மீட்டிங்

அல்ஃபான்ஸ் போனில் உங்களை நேர்ல meet பண்ணி பேசணும். நாளைக்கு வந்து உங்களைப் பார்க்கலாமா? என்று கேட்டுள்ளார். ஆனால் வேல்முருகன் அன்று இரவே சென்னைக்குச் செல்வதால் பார்க்க முடியாது என்று, அடுத்தது தென்காசிக்கு வர 2 மாதம் ஆகும் எனக் கூறியுள்ளார்.

அந்த 15 நிமிடம்

அந்த 15 நிமிடம்

மீண்டும் அல்ஃபான்ஸ் இன்று ஆபீஸ் இருக்கா சார் எனக் கேட்க, வேல்முருகன் இல்லை, உங்களுக்கு எந்த ஊரு கேட்டுள்ளார். அருகில் இருக்கும் ஆலங்குளம் என்பதால் மாலை 6.30 க்கு எனக்குப் பஸ். நான் ஒரு 6:15 க்குப் பாவூர்சத்திரம் வந்துடுவேன். அங்கு மீட் பண்ணுவோமா எனக் கேட்க உடனே அல்ஃபான்ஸ் சரி என ஒப்புக்கொண்டார்.

இண்டர்வியூவ்

இண்டர்வியூவ்

பாவூர் சத்திரம் ராஜாஸ் ஜவுளி கடையின் முன் உள்ள டீ கடையில் அல்ஃபான்ஸ் -ஐ சந்தித்தே வேல்முருகன், எதனால் அந்த interview ஐ clear செய்ய முடியவில்லை என்பதையும் IT skill ஐ வளர்த்துக்கொள்வதில் அவர் என்ன என்ன சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை விளக்கி கூறியுள்ளார்.

ஐடியா

ஐடியா

இதற்கு இரண்டு மாதங்களுக்கான self-training idea வை கூறிவிட்டு, இதை follow செய்ய முடியாத பட்சத்தில் என்னை மீண்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் வேல்முருகன்.

Full-stack development பயிற்சி

Full-stack development பயிற்சி

இந்த நிலையில் சில வாரங்களுக்குப் பின் அல்ஃபான்ஸ் வேல்முருகன்-ஐ மீண்டும் தொடர்புகொண்டு எங்கள் Fabevy டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் Full-stack development program இல் சேர்ந்துகொண்டார்.

5 மாதங்கள்

5 மாதங்கள்

அடுத்த ஐந்து மாதங்களில் அல்ஃபான்ஸ் மூன்று IT projects ஐ அவராகவே செய்யும் அளவுக்கு Fabevy அவரைப் பயிற்சி செய்ததுள்ளது. விளைவு? Idea Pattarai மூலமாக எனக்கு அறிமுகமாகி பின் நண்பராக மாறிய Jegan Selvaraj அவர்களின் நிறுவனமான Entrans Technologies இல் இன்று அல்ஃபான்ஸ் வேலை செய்துகொண்டு இருக்கிறார்.

15 நிமிடங்கள் போதும்

15 நிமிடங்கள் போதும்

ஒரு professional இன் 15 நிமிடங்கள் ஒரு aspirant ஐ professional ஆக மாற்ற உதவும் என்பது தான் Fabevy Technologies நிறுவனத்தின் தலைவாரான
வேல்முருகன் சீனிபாண்டியன் நம்பிக்கை.

உதவி

உதவி

இதுபோல் பலரிடம் பல மாணவர்கள் உதவிக்காகக் கேட்டுப்பார்கள், அவர்களுக்கு ஒரு 15 நிமிடம் ஒதுக்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாலே பலரின் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How 15 minutes can changes ones life? Fabevy Technologies Velmurugan post on linkedin

How 15 minutes can changes ones life? Fabevy Technologies Velmurugan post on linkedin
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X