சீன அதிபர் ஜி ஜீன்பிங் கைது..? சீனா-வில் நடப்பது என்ன..? இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக விளங்கும் சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டதாகவும், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், ராணுவம் ஆட்சியையும் நாட்டையும் கைப்பற்றியுள்ளதாகவும் சமூகவலைத்தளத்தில் ட்வீட் பறந்து வருகிறது.

 

ஜி ஜின்பிங் கைது என்பது சீனாவுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்பது தான் உண்மை.

வெறும் கையை காட்டுனதுக்கு 6 கோடி வருமானம்.. சொத்து மதிப்பு 700 கோடி..! வெறும் கையை காட்டுனதுக்கு 6 கோடி வருமானம்.. சொத்து மதிப்பு 700 கோடி..!

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீன ராணுவ ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும். உஸ்பெக்கிஸ்தான் SCO மாநாடு முடிந்த பின்பு சீன திரும்பிய ஜின் ஜின்பிங்-ஐ அந்நாட்டு ராணுவம் கைது செய்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

 சீன மக்கள் விடுதலை ராணுவம்

சீன மக்கள் விடுதலை ராணுவம்

சீன மக்கள் விடுதலை ராணுவம் (PLA) ஜென்ரல் லீ கியாமிங் (Li Qiaoming) உத்தரவின் பேரில் ராணுவ சிறப்புப் படைகள் ஷென்யாங் ராணுவ விமான நிலையத்தில் குவிந்துள்ளன. இதே மட்டும் அல்லாமல் சீன மக்கள் விடுதலை ராணுத்தின் ராணுவ வாகனங்கள் பெய்ஜிங்-ஐ நோக்கி செப்டம்பர் 22 முதல் படையெடுக்கத் துவங்கியதாக வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது.

80 கிலோமீட்டர்
 

80 கிலோமீட்டர்

இந்த ராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நகரத்தின் அருகில் இருக்கும் Huanlai முதல் Zhangjiakou வரையில் சுமார் 80 கிலோமீட்டருக்கு வரிசை கட்டி நிற்கிறது. இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மற்றும் உயர் அதிகாரிகள் ஜி ஜின்பிங்-ஐ சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

வாழ்நாள் சிறை தண்டனை

வாழ்நாள் சிறை தண்டனை

இதேபோல் வெள்ளிக்கிழமை மட்டும் ஜி ஜின்பிங்-க்கு எதிரான 3 கம்யூனிஸ்ட் உயர் அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக வாழ்நாள் சிறை தண்டனையும், மேலும் 3 பேருக்கு நீண்ட காலச் சிறை தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரையில் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கான உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை அக்டோபர் 16ஆம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்தப் பிரம்மாண்ட மாநாட்டில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராகப் பதவியேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ சதி

ராணுவ சதி

இப்படியிருக்கும் நிலையில் தான் ராணுவ சதி காரணமாகத் தற்போது ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜி ஜின்பிங் உண்மையிலேயே கைது செய்யப்பட்டால் சீன பொருளாதாரம் தலைகீழாக மாறும்.

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம் ஜி ஜின்பிங் நிர்வாகக் குழுவின் முடிவுகளில் தான் இதுநாள் வரையில் வளர்ச்சி அடைந்து வருகிறது, அப்படியானால் சீனா தொழிற்துறையில் அனைத்து தரப்பினரும் ஜி ஜின்பிங் நிர்வாகக் குழுவிற்கு நெருக்கமானவர்களாகத் தான் இருக்க வேண்டும். தற்போது ஆட்சி மாறினால் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்படும்.

ஜி ஜின்பிங் ஆதிக்கம் சரிவு

ஜி ஜின்பிங் ஆதிக்கம் சரிவு

ஜி ஜின்பிங் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் விதிமுறைகளைக் கடுமையாக்கிய காரணத்தால் சீன பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் இருந்து தான் ஜி ஜின்பிங் ஆதிக்கம் அரசியலிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி தொடர்ந்து குறையத் துவங்கியது.

வர்த்தகம், உற்பத்தி, சப்ளை செயின்

வர்த்தகம், உற்பத்தி, சப்ளை செயின்

சீன அரசை ராணுவம் கைப்பற்றினால் வர்த்தகம், உற்பத்தி, சப்ளை செயின் என அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் கொரோனா, உக்ரைன் போர் மூலம் பாதிக்கப்பட்டு வரும் சீன பொருளாதாரம் மிகவும் மேசமான நிலைக்குச் செல்லும்.

பணவீக்கம்

பணவீக்கம்

இதைத் தாண்டி சீன பொருட்களை நம்பியிருக்கும் இந்தியாவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் 10 சதவீதத்தைத் தாண்டும் அளவிற்கு விலைவாசி உயரும். இதில் இந்தியா மட்டும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என அனைத்து நாடுகளும் பாதிக்கும்.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

ஏற்கனவே உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை, சிப் பற்றாக்குறை போன்றவை உலக நாடுகளின் உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில், ஜி ஜின்பிங் கைது மற்றும் சீனா ஆட்சி மாற்றம் செய்து மட்டும் உறுதியானால் உலகப் பொருளாதாரம் பெரிய பாதிப்பை சந்திக்கும்.

இந்தியாவுக்கு லாபமும் உண்டு

இந்தியாவுக்கு லாபமும் உண்டு

ஜி ஜின்பிங் கைது மற்றும் சீனா ஆட்சி மாற்றம் உறுதியானால் அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து வேகமாக வெளியேறும், இது இந்தியாவுக்கு ஜாக்பாட் என்றால் மிகையில்லை.

வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

ஏற்கனவே சீனாவில் இருந்து பல்வேறு பிரச்சனை காரணமாக நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில், ராணுவ ஆட்சி வந்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டது போட்டப்படி வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது இந்தியாவுக்குப் பெரிய லாபமாக அமையும்.

அல்டிமேட்

அல்டிமேட்

சீனாவில் ஜி ஜின்பிங்-ஐ யாராலும் ஒன்னும் செய்ய முடியாது அவர் தான் அல்டிமேட் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மற்றும் உயர் அதிகாரிகள் ஜி ஜின்பிங்-ஐ சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது முக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது.

தைவான்

தைவான்

சீனாவில் உருவாகியுள்ள இந்தப் பிரச்சனையில் தைவான் நாட்டுக்கு இருக்கும் அச்சுறுத்தல் கணிசமாகக் குறைத்துள்ளது. சொல்லப்போனால் தைவானுக்கு அமெரிக்காவின் நான்சி மற்றும் இதர பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்குப் பின்பு ஜி ஜின்பிங் ஆட்சி தடுமாற்றம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

சீனா வேண்டாம்.. திருப்பதி இருக்கு போதும்..! சீனா வேண்டாம்.. திருப்பதி இருக்கு போதும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How China will affect if Xi jinping arrested and army took control After Military Coup?

How China will affect if Xi jinping is arrested and army took control After Military Coup?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X