இந்தியாவுக்கு இது மிக மிக நல்ல விஷயமே.. காரணங்கள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஒத்த வார்த்தையில் உலகத்தையே என்ன சேதி என்று கேட்க வைத்தது சவுதி அரேபியாவின் அறிக்கை.

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் வெறும் அறிக்கைக்கே ஒரே நாளில் 30% அதிகமாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

இது 1991 களில் நடந்த ஈராக் போரின் போது வீழ்ச்சி கண்ட விலை நிலவரத்தினை மக்கள் கண் முன்னே கொண்டு வந்தது. அந்தளவுக்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டது.

 சவுதியின் அதிரடி முடிவு

சவுதியின் அதிரடி முடிவு

உலகளவில் கச்சா எண்ணெய் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் மீண்டும் உற்பத்தியைக் குறைக்கலாம் என்ற ஓபெக் நாடுகளின் ஒப்பந்தத்திற்கு முடியவே முடியாது என மறுத்தது ரஷ்யா. இதனால் கொதித்து எழுந்த சவுதி சற்றும் யோசிக்காமல் இப்படி ஒரு அறிக்கையினை கொடுத்தது. சரி அப்போது தான் அவசரப்பட்டு கோபத்தில் கொடுத்தது எனில், சவுதி அராம்கோ நிறுவனம் அதனை உறுதி செய்யும் விதமான ஏப்ரல் 1 லிருந்து 12.5 மில்லியன் பேரல்கள் தினசரி சப்ளை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

விலை யுத்ததினை கொண்டு வரலாம்

விலை யுத்ததினை கொண்டு வரலாம்

இது சர்வதேச அளவில் எண்ணெய் விலையில் ஒரு பெரிய யுத்ததினை கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டது. ஏன் இந்த அறிவிப்பானது மற்ற உற்பத்தி நாடுகளில் பெரும் பிரச்சனையை கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் அன்று சர்வதேச சந்தைகளும் சரி, இந்திய சந்தையும் பலத்த அடி வாங்கின. எனினும் இது பெரியளவிலான விலை யுத்ததினை கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

அதென்ன விலை யுத்தம்

அதென்ன விலை யுத்தம்

அது சரி அதென்ன விலைபோர் (Price war) வாருங்கள் பார்க்கலாம். விலை யுத்தம் என்பது இழந்த சந்தை பங்கை மீண்டும் பெற பெரிய வீரர்கள் பயன்படுத்தும் பொருளாதார தந்திரமாகும். இதற்கான முதல் யோசனையே விலைக் குறைப்பு தான். இது குறிப்பிட்ட நிறுவனங்களின் போட்டியாளர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டும். இறுதியில் சிறிய நிறுவனமாகட்டும், அல்லது பெரிய நிறுவனமாகட்டும் குறைந்த விலையில் உயிர்வாழ போராடும். இதனால் சந்தையிலிருந்து பலரும் வெளியேறும் அளவுக்கு தள்ளப்படுவார்கள். இதனால் பெரிய நிறுவனங்கள் காலியாக உள்ள இடத்தினை நிரப்ப வய்ப்பாக அமையும். தர்போது இந்த விலை யுத்தம் என்னும் ஆயுதத்தினை கையில் எடுத்துள்ளது சவுதி.

சவுதி இதனை கையில் எடுக்க காரணம் என்ன?

சவுதி இதனை கையில் எடுக்க காரணம் என்ன?

அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் ஒரு தசாப்தத்திற்கு முன்பு நீராவியை முன்பு எடுத்தது. எனினும் நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் விரைவான வளர்ச்சிக்கு இது வழிவகுத்தது. இந்த வளர்ச்சியானது சவுதி மற்றும் பிற எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள், தங்கள் சந்தை பங்கு படிப்படியாகக் குறைந்து வருவதைக் கண்டன.

உற்பத்தியை குறைக்க திட்டம்

உற்பத்தியை குறைக்க திட்டம்

இந்த நிலையில் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தேவையை மோசமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ். இதனால் குறைந்து வரும் தேவையை கட்டுப்படுத்தவும், விலை குறைவை கட்டுப்படுத்தவும் ஒபெக் நாடுகள் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டன. இதனால் அதிக விலை சரிவை தடுக்க முடியும் எனவும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் எத்தனித்தன. ஆனால் ரஷ்யா அதற்கு ஒப்புக் கொள்ள வில்லை. இந்த நிலையிலேயே ரஷ்யா ஒரு விலை யுத்ததினை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது தான் சரியான பதிலடி

இது தான் சரியான பதிலடி

கடந்த 2016ம் ஆண்டு முதலே எண்ணெய் விலையை உயர்த்தும் முயற்சியில் சவுதியும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த முறையை ரஷ்யா சவுதியின் உற்பத்தி குறைப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் எண்ணெய் போரினை உருவாக்க சவுதி முடிவு செய்துள்ளது. இது குறிப்பாக அதன் கூட்டாளர்களுக்கும் ரஷ்யாவுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

மற்ற உற்பத்தியாளர்களை பதம் பார்க்கும்

மற்ற உற்பத்தியாளர்களை பதம் பார்க்கும்

இந்த விலை யுத்தமானது அமெரிக்கா ஷெல் மற்றும் அதிக விலை உற்பத்தியாளர்களையும் பதம் பார்க்கும் என்றும் கூறப்படுகிறது. சவுதியின் இந்த அதிரடி நடவடிக்கையானது முதல் முறை அல்ல. இது கடந்த 2014லியே இப்படி ஒரு விலை யுத்ததினை கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால் அப்போது அது நடைமுறை படுத்த வில்லை.

அடுத்தடுத்த பிரச்சனைகள்

அடுத்தடுத்த பிரச்சனைகள்

ஆனால் தற்போது கொரோனாவால் ஏற்கனவே சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள நிலையில், தேவையும் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக எண்ணெய் தேவையும் குறைந்து வருகிறது. ஆக இது வினியோக சங்கிலியையும் பாதித்துள்ளது. ஆக இது சவுதிக்கு மேலும் அடுத்தடுத்த அடியாகவே இருந்து வருகிறது.

இந்தியா பெரிய இறக்குமதியாளர்

இந்தியா பெரிய இறக்குமதியாளர்

இந்தியாவினை பொறுத்தவரை மொத்த எண்ணெய் நுகர்வில் 82% இறக்குமதி செய்து வருகிறது. சொல்லப்போனால் இந்தியா தற்போதுள்ள நிலையில், இந்தியாவுக்கு தற்போது கொஞ்சம் உயிர் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2018 -19ல் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்காக 87 பில்லியன் டாலரினை இந்தியா செலவு செய்துள்ளது.

செலவு குறையும்

செலவு குறையும்

ஆக எண்ணெய் விலை தொடர்ந்து குறையும் போது இந்தியா அதற்காக செலவிடும் தொகையில் சற்று குறையலாம். சுமார் இதனால் இந்தியாவுக்கு 3,000 கோடி ரூபாய் வரை கூட செலவுகள் மிச்சமாகலாம். சில ஆய்வாளர்கள் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பேரலுக்கு 30 டாலர்களில் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இது இந்தியாவின் இறக்குமதி செலவில் பாதியைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கு பாதிப்பு தான்

இந்தியாவுக்கு பாதிப்பு தான்

வரலாற்று ரீதியாக பார்க்கும் போது எண்ணெய் விலையால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. 1991 வாக்கில் வளைகுடாப் போரின் காரணமாக எண்ணெய் விலை 17 டாலரிலிருந்து 37 டாலராக உயர்ந்தது. இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரித்தது.

பொருளாதாரத்தினை மேம்படுத்த கைகொடுக்கும்

பொருளாதாரத்தினை மேம்படுத்த கைகொடுக்கும்

இந்த காலத்தில் குறைந்த எண்ணெய் விலை இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும், ரூபாயை பலப்படுத்தவும் உதவும். அதிலும் இந்தியா தற்போது சரிந்துள்ள நிலையில் இது நன்றாகவே கைகொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How lowest Crude oil prices impact Indian economy

Low crude oil prices at this stage will help India control its current account deficit and make the rupee stronger.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X