இந்திய ஸ்டார்டப்களுக்கு இப்படியும் ஒரு செக் உண்டு.. சீன முதலீடு இல்லாட்டி ஸ்டார்டப்களின் நிலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா சீனா இடையேயான பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இது வர்த்தகத்தினை பாதிக்காது என்று ஒரு சாரர் கூறி வந்தாலும், மறுபுறம் சீன பொருட்கள் வேண்டாம் என பரப்புரையும் அதிகரித்து வருகிறது.

 

அதிலும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் #BoycottcChineseProducts என்ற ஹேஷ்டாக் மூலமே அறிய முடிகிறது,

அது எந்த அளவுக்கு இந்திய சீனா எல்லை பிரச்சனை மக்கள் மனதில் பதிந்துள்ளது என்று.

சீனாவினை தவிர்க்க முடியுமா?

சீனாவினை தவிர்க்க முடியுமா?

இந்த பரப்புரைகள் சொல்வதைனைப் போல் நாம் சீனாவினை தவிர்க்க முடியுமா? இல்லை சீனா தான் இந்தியாவினை தவிர்க்க முடியுமா? உதாரணத்திற்கு இன்று நாம் பார்க்கவிருப்பது முதலீடு. அதிலும் சீன நிறுவனங்கள் இந்திய ஸ்டார்டப் யூனிகார்ன் எனக் கூறப்படும் நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்துள்ளன. ஒரு வேளை சீனாவின் முதலீடுகள் இல்லாவிட்டால் அவை எந்த மாதிரியான பிரச்சனையை எதிர்கொள்ளக் கூடும்.

பிரச்சனை வருமா?

பிரச்சனை வருமா?

இந்தியா ஸ்டார் அப்களை பொறுத்த வரையில் சீன முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்தியா ஸ்டார்அப்களில் செய்யப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீடுகளில், சீன நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது லடாக் பகுதியில் நிலவி வரும் பதற்றத்தினால், சீனா பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இனி இந்த முதலீடுகளின் ஏதேனும் பிரச்சனைகள் வருமா என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

இந்திய ஸ்டார் அப்களுக்கு பின்னடைவு
 

இந்திய ஸ்டார் அப்களுக்கு பின்னடைவு

இந்த பரப்புரைகள் சொல்வது போல் ஒரு வேளை சீனா நிறுவனங்கள் வேண்டாம், சீன முதலீடுகள் வேண்டாம் என தவிர்த்தால்,அது ஒரு வகையில் இந்திய நிறுவனங்களுக்கும் பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும். சொல்லப்போனால் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் அப் நிறுவனங்களில் தான் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

மொத்தம் எவ்வளவு முதலீடு?

மொத்தம் எவ்வளவு முதலீடு?

குறிப்பாக பேடிஎம், பிக்பாஸ்கெட், ஸ்விக்கி, டீரிம்11 உள்ளிட்ட பல ஸ்டார்டப்களில் முதலீடுகள் செய்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் சீன நிறுவனங்கள் 5.8 பில்லியன் டாலர் அளவுள்ள முதலீடுகளை செய்துள்ளது. இது கடந்த 2014ம் வருடத்தில் சுமார் 51 மில்லியன் டாலர்களும், 2015ம் ஆண்டில் 959 மில்லியன் டாலர்களும், இதே 2016ல் 315 மில்லியன் டாலர்களும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

குறைந்து வரும் அன்னிய முதலீடு

குறைந்து வரும் அன்னிய முதலீடு

இதே 2017ல் தான் அதிகபட்சமாக 1,666 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதோடு 2018ல் 1,340 மில்லியன் டாலர்களும், 2019ல் 1,230 மில்லியன் டாலர்களும், 2020ல் வெறும் 263 மில்லியன் டாலர்களும் இந்திய ஸ்டார் அப்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது உத்தேசமாக சொல்லப்பட்ட ஒரு முதலீடு தான் என்றும் மணிகன்ட்ரோல் செய்திகள் கூறுகின்றது.

எந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு?

எந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு?

Citiustech நிறுவனத்தில் - baring asia நிறுவனம் 880 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஓலா நிறுவனத்தில் டென்சென்ட், சாயிலிங் கேப்பிட்டல் நிறுவனங்கள் 451 மில்லியன் டால்ர் முதலீடு செய்துள்ளன. ஸ்விக்கியில் டென்சென்ட் மற்றும் ஹில் ஹவுஸ் கேப்பிட்டல் நிறுவனங்கள் 328 மில்லியன் டாலர்களும் முதலீடு செய்துள்ளன. பேடிஎம் மாலில் அலிபாபா நிறுவனம் 222 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

பாலிசிபஜார் & பைஜூஷில் முதலீடு எவ்வளவு?

பாலிசிபஜார் & பைஜூஷில் முதலீடு எவ்வளவு?

பாலிசிபஜார் நிறுவனத்தில் டென்சென்ட் நிறுவனம் 150 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இதே ட்ரீம் 11 நிறுவனத்தின் டென்சென்ட் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதே போல் Delhivery நிறுவனத்தில் fousun group 49 மில்லியன் டாலர்களும் முதலீடு செய்துள்ளன. பைஜூஸ் நிறுவனத்தில் டென்சென்ட் 40 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

பிளிப்கார்டு & பேடிஎம்மில் முதலீடு

பிளிப்கார்டு & பேடிஎம்மில் முதலீடு

பிளிப்கார்ட் நிறுவனத்தில் டென்சென்ட் மற்றும் டிஆர் கேப்பிட்டல் நிறுவனங்கள் மொத்தம் 7,126 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்துள்ளன. இதே பேடிஎம்மில் அலிபாபா நிறுவனம் மொத்தம் 4,106 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதே போல ஸ்னாப்டீலில் அலிபாபா மற்றும் tybourne capital நிறுவனம் 2,089 மில்லியன் டாலர்கள் மொத்தம் முதலீடு செய்துள்ளன.

சோமேட்டோ மற்றும் உடான் நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு

சோமேட்டோ மற்றும் உடான் நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு

சோமேட்டோ நிறுவனத்தில் அலிபாபா மற்றும் sunwei capital நிறுவனங்கள் இணைந்து 912 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன. இது போல உடான் நிறுவனத்தில் டென்சென்ட் மற்றும் ஹில் ஹவுஸ் கேப்பிட்டல் நிறுவனங்கள் இணைந்து 871 மில்லியன் டாலர்கள் முதலீடுகள் செய்துள்ளன.

பிக்பாஸ்கெட் & லென்ஸ்கார்ட்டில் முதலீடு

பிக்பாஸ்கெட் & லென்ஸ்கார்ட்டில் முதலீடு

பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா மற்றும் டி ஆர் கேப்பிட்டல் நிறுவனம் 730 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன. இதே லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் டிஆர் கேப்பிட்டல் நிறுவனம் 668 மில்லியன் டாலர் முதலீட்டினை செய்துள்ளது. இதே போல் ஹைக் நிறுவனத்தில் பாக்ஸ்கான் மற்றும் டென்சென்ட் நிறுவனம் 240 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ளன.

சீனா இல்லாமல் இருக்க முடியாது

சீனா இல்லாமல் இருக்க முடியாது

மேற்கண்ட இந்த நிறுவனங்கள் மட்டும் அல்ல, இன்னும் பல நிறுவனங்களில் ஸ்டார்களில் சீன நிறுவனங்களின் முதலீடுகள் உள்ளன. சில முதலீடுகள் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்க் வழியாகவும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆக இப்படி ஒரு நிலையில் இந்த முதலீடுகள் வெளியேறும் பட்சத்தில், இந்திய நிறுவனங்களின் நிலை என்ன? இதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆயிரணக்கான வேலைகள் என்ன ஆவது? இப்படி சாமானியர்களின் வாழ்வுடன் ஒன்றி போயுள்ள சீனாவினை அகற்றுவது எளிதல்ல. அது இந்தியாவுக்கு எவ்வளவு நல்லதாக அமையும் என்று தெரியவில்லை. ஆக பல இந்தியா ஸ்டார் அப்களின் நிலை சீனாவினை நம்பியுள்ளது உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much Chinese money in Indian unicorns,startups?

You know how much money in Indian start-ups, unicorns
Story first published: Friday, June 19, 2020, 10:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X