ஆதார் கார்டு செல்லாமல் போக வாய்ப்பு உள்ளதா? உங்கள் ஆதார் கார்டை Verify செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசிய தேவை என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த ஆதார் அட்டை ஒரு சில காரணங்களால் செல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.சில மோசடிகள் காரணமாக மத்திய அரசு ஆதார் அட்டையை செயலிழக்கச் செய்து வருகிறது.

அந்த வகையில் உங்களுடைய ஆதார் அட்டை செயல் இழக்கப்பட்டு உள்ளதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

 பிறந்த குழந்தைகளுக்கும் இனி ஆதார்.. ஏன் தெரியுமா? பிறந்த குழந்தைகளுக்கும் இனி ஆதார்.. ஏன் தெரியுமா?

ஆதார் அட்டையின் அவசியம்

ஆதார் அட்டையின் அவசியம்

தற்போது ஆதார் அட்டை என்பது அனைத்து பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரசின் பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் ஆதார் அட்டை அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.

தனிப்பட்ட அடையாள சான்று

தனிப்பட்ட அடையாள சான்று

இந்தியாவில் உள்ள ஒரு நபர் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு அரசு சார்ந்த உதவிகளும் பெற முடியாது என்பதும், ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனின் தனிப்பட்ட அடையாள சான்று என்பதும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த அட்டையை ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாருடன் இணைப்பு
 

ஆதாருடன் இணைப்பு

முகவரி சான்று, வயது சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வங்கி கணக்கு உள்பட அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதார் அட்டையை ரேஷன் கார்டு, பான் கார்டு, வங்கிக்கணக்குகள் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்பதும் அவசியம் என்பதும் இதுகுறித்து மத்திய அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பு சான்றிதழ்

இறப்பு சான்றிதழ்

ஒரு நபரின் ஆதார் அட்டை என்பது அவர் உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி அவர் இறந்துவிட்டாலும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் ஆதார் அட்டை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த ஆதார் அட்டை செல்லாது. இந்த ஆதார் அட்டை ஒருவர் முழுவதும் உயிருடன் இருக்கும் வரை மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆதார் அட்டை செயல் இழப்பு

ஆதார் அட்டை செயல் இழப்பு

இந்த நிலையில் ஆதார் அட்டையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு சில ஆய்வுகள் செய்து நம்பகத்தன்மையற்ற பல ஆதார் அட்டைகளை செயலிழக்க செய்துள்ளது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகளை பெற்றிருந்தால் அவை கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

UIDAI இணையதளம்

UIDAI இணையதளம்

அந்த வகையில் உங்களது ஆதார் அட்டை தவறுதலாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாக செயலிழக்கயப்பட்டிருந்தால் அது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள UIDAI-ன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

எப்படி Verify செய்வது?

எப்படி Verify செய்வது?

முதலில் UIDAI-ன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று 'ஆதார் சர்வீசஸ்' என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் உள்ள Verify Aadhaar என்பதை கிளிக் செய்து உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை குறிப்பிடவும். அதன்பின் செக்யூரிட்டி கோட் எண்ணை குறிப்பிட்டு 'Submit' கொடுத்தால் உங்கள் ஆதார் அட்டை செயலில் உள்ளதா? அல்லது செயலிழக்கப்பட்டு உள்ளதா? என்பது தெரிந்துவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to verify your Aadhar card? Here is the full details!

How to verify your Aadhar card? Here is the full details! | ஆதார் கார்டு செல்லாமால் போக வாய்ப்பு உள்ளதா? உங்கள் ஆதார் கார்டை Verify செய்வது எப்படி?
Story first published: Monday, July 4, 2022, 7:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X