IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் அனைத்து முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பணிநீக்கத்தை அறிவித்தும் வரும் நிலையில் ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் எப்போது என்ன நடக்கும் என்ற பீதியில் உள்ளனர்.

 

இதற்கு ஏற்றார் போல் கடந்த சில வருடங்களாகவே தனது வர்த்தகம், கட்டமைப்பு, ஊழியர்கள் என அனைத்தையும் மறுசீரமைப்புச் செய்து வரும் உலகின் மிகப் பழமையான தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஐபிஎம் தற்போது மாபெரும் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

அமேசான், மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் ஐபிஎம்-ன் 3900 ஊழியர்கள் பணிநீக்கம் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Spotify-ஐயும் விட்டு வைக்காத 'ரெசிஷன்' வைரஸ்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..! Spotify-ஐயும் விட்டு வைக்காத 'ரெசிஷன்' வைரஸ்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!

ஐபிஎம் நிறுவனம்

ஐபிஎம் நிறுவனம்

ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ-வாக அரவிந்த் கிருஷ்ணா பதவியேற்ற நாளில் இருந்து நிர்வாகம் முதல் வர்த்தகம் வரையில் பல மாற்றங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது ரெசிஷன் அச்சம் நிறைந்துள்ள வேளையில் தனது சக போட்டி நிறுவனங்கள் எடுத்த அதே முடிவை எடுத்துள்ளது ஐபிஎம்.

3900 ஊழியர்களைப் பணிநீக்கம்

3900 ஊழியர்களைப் பணிநீக்கம்

புதன்கிழமை ஐபிஎம் வெளியிட்ட அறிவிப்பில் நிறுவனத்தின் சில சொத்து விற்பனை மற்றும் மறுசீரமைப்புக் காரணமாக 3900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஐபிஎம் இந்த முக்கியமான டிசம்பர் காலாண்டில் கேஷ் டார்கெட்-ஐ அடைய முடியாமல் போன வேளையிலும், வருமான எதிர்ப்புகள் பெரிய அளவிலும் குறைந்துள்ளது.

 300 மில்லியன் டாலர் செலவு
 

300 மில்லியன் டாலர் செலவு

இந்தப் பணிநீக்கம் மூலம் சுமார் 300 மில்லியன் டாலர் அளவிலான கூடுதல் செலவுகள் ஜனவரி - மார்ச் காலாண்டில் உருவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான வாட்சன் ஹெல்த்-ன் Kyndryl வர்த்தக்தை விற்பனை செய்த காரணத்தால் தற்போது 3900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஐபிஎம் பங்குகளும் 2 சதவீதம் சரிந்துள்ளது.

கேஷ் ப்ளோ டார்கெட்

கேஷ் ப்ளோ டார்கெட்

2022 ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் கேஷ் ப்ளோ 10 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 9.3 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் இலக்கை அடைய முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் ஐபிஎம் நிர்வாகம் Kyndryl வர்த்தகத்தை ஸ்பின்ஆப் செய்வதன் மூலம் ஈடு செய்ய உள்ளது.

டிஜிட்டல் சேவை டிமாண்ட்

டிஜிட்டல் சேவை டிமாண்ட்

இதேபோல் கொரோனாவுக்குப் பின்பு உலகம் முழுவதிலும் டிஜிட்டல் சேவைக்கான டிமாண்ட் அதிகரித்த வேளையில் தற்போது ரெசிஷன் காரணமாக டிஜிட்டல் சேவைகள் மீதான செலவு செய்யும் அளவுகள் மிகவும் எச்சரிக்கையாகச் செய்யப்படும் காரணத்தால் இதன் வர்த்தகம் கணிசமாக மந்தமடைந்துள்ளது.

கிளவுட் சேவை பிரிவு

கிளவுட் சேவை பிரிவு

இதன் மூலம் 4வது காலாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் சாப்ட்வேர் மற்றும் கான்சல்டிங் வர்த்தகத்தின் வளர்ச்சி 4வது காலாண்டில் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஆனால் கிளவுட் சேவை பிரிவில் ஐபிஎம் நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்கு அதிக வர்த்தகத்தைப் பெற்று உள்ளது. குறிப்பாக அமேசான்.காம்-ன் AWS மற்றும் மைக்ரோசாப்ட் AZURE ஆகியவற்றுடன் ஒப்பந்தம் பெரிய அளவில் உதவியுள்ளது.

வருவாய் வளர்ச்சி

வருவாய் வளர்ச்சி

ஆனால் 2022 ஆம் ஆண்டை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 5.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து. இது டிசம்பர் காலாண்டில் வெறும் 2 சதவீத உயர்வுடன் 16.69 பில்லியன் டாலராக இருந்தது. 2022 ஆம் ஆண்டு வருவாய் தான் இந்தத் தசாப்தத்தின் உச்ச அளவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IBM shocking announcement; missed annual cash target to layoff 3900 employees

IBM shocking announcement; missed annual cash target to layoff 3900 employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X