வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு குட்நியூஸ்.. 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ்.. இனி நோ டென்ஷன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சில வருடமாக வங்கிகள் தொடர்ந்து நிதிநெருக்கடியிலும், மோசடியிலும் சிக்கி வரும் காரணத்தால் பல வங்கிகள் மீகு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்த வங்கி சொத்து மற்றும் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் சூப்பரான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

<strong>இரவு 12மணி முதல் விலை உயரும் பொருட்கள்.. சூதானமா இருங்க..!</strong>இரவு 12மணி முதல் விலை உயரும் பொருட்கள்.. சூதானமா இருங்க..!

வங்கி திவால்

வங்கி திவால்

ஒரு வங்கி திவால் ஆனாலோ அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் செய்த டெப்பாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனால், தத்தம் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை இன்சூரன்ஸ் ஆக உடனடியாகக் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.

ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ்

ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ்

மத்திய அரசு The Deposit Insurance and Credit Guarantee Corporation Act, 1961' (DICGC சட்டம்) கீழ் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றத்தின் படி வங்கியில் திவாலாகும் பட்சத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே மக்கள் இனி எவ்விதமான பயமும் இல்லாமல் ஒரு வங்கியில் 5 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்கலாம்.

யெஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி

யெஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி

2020ல் யெஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி என 3 பிரபலமான வங்கி மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்து வாடிக்கையாளர்களின் கணக்கை முடக்கியது. இதனால் மக்களுக்கு இந்திய வங்கிகள் மீதுள்ள நம்பிக்கை பெரிய அளவில் குறைந்தது மறுக்க முடியாது.

மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கை

இந்தப் பிரச்சனையைச் சரி செய்யும் விதமாக DICGC சட்டத்தின் கீழ் இருக்கும் வெறும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் அளவை 5 லட்சமாக உயர்த்தி இன்று 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

மேலும் இப்புதிய மாற்றத்தை நடவிருக்கும் பட்ஜெட் கூட்டத்திலேயே அமலாக்கம் செய்ய உள்ளதாகவும் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If bank fails, depositors can get Rs 5 lakh insurance amount immediately under new DICGC Act

If bank fails, depositors can get Rs 5 lakh insurance amount immediately under new DICGC Act
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X