இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இலங்கையை விட இந்தியா மோசம்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வல்லரசு நாடு என்ற தகுதியை பெறுவதில் யாருக்கு தான் விருப்பம் இருக்காது, இந்தியா பல துறையில் வளர்ச்சி அடைந்தாலும், ஆண், பெண் சமத்துவத்தில் பெரிய அளவில் பின் தங்கியுள்ளது.

 

பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்குமான சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்தாலும், வேலைவாய்ப்பு சந்தைக்குள் வரும் பெண்கள் எண்ணிக்கையே குறைவாக இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

கடந்த 20 வருடத்தில் வேலைவாய்ப்பு சந்தைக்குள் பெண்கள் அதிகம் வந்தாலும், இன்னும் ஆண்களுக்கு இணையாக வரவில்லை என்பதை தாண்டி உலகளவில் மோசமான நிலையில் இருக்கிறோம் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கும் 10 பொருட்கள்.. ஆண்கள் அதிர்ஷ்டகாரர்கள் தான்! அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கும் 10 பொருட்கள்.. ஆண்கள் அதிர்ஷ்டகாரர்கள் தான்!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் டாக்டர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா கூறுகையில் இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு உலகிலேயே மிகக் குறைவாகவும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானை விட இந்திய பெண் பணியாளர்களின் பங்களிப்பு விகிதத்தில் குறைவாக உள்ளது. அதிலும் COVID-19 தொற்றுக்கு பின்பு இந்த நிலை மேலும் மோசமாகிவிட்டது என்று மைக்கேல் தேபப்ரதா பத்ரா வருத்தத்துடன் கூறுகிறார். தொற்றுநோய்க்கு முன், தொழிலாளர் பங்கேற்பு நிலை விகிதம் 42% ஆக இருந்தது, அது இப்போது 39.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொருளாதாரம்
 

பொருளாதாரம்

இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், நிலைமையை மேம்படுத்த கட்டாயம் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். "இந்திய பெண்களுக்கு, பணிபுரியும் இடத்தில் நாம் நட்புரீதியான சமூகத்தை உருவாக்க தவறிவிட்டோம், இதனால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் 2022 தரவுகள் படி, இந்தியாவில் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 20.3% ஆகும், இதில் 18.2% தற்போது நகர்ப்புற இந்தியாவில் உள்ளது. 2022 இல், பெண்களின் வேலைவாய்ப்பு சேர்ப்பு விகிதம் (employability) 2022 இல் 51.44 சதவீதமாக உள்ளது, இது 2021 இல் 41.25 சதவீதமாக இருந்தது.

உலக வங்கி

உலக வங்கி

உலக வங்கியின் தரவுகள் படி, மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு சந்தையிவ் இருக்கும் வேளையில் , உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு கொண்ட நாடாக விளங்குகிறது. பெண்கள் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், வேலை செய்ய தகுதியானவர்களாக கணக்கிடப்படுகிறது.

 பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2005 இல் 26% க்கும் அதிகமாக இருந்த நிலையில் 2020 இல் 19 சதவீதமாக ஆக குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இது பங்களாதேஷ் நாட்டில் 35 சதவீதமாக உள்ளது. சமீபத்தில் தனிநபர் வருமான பிரிவில் இந்தியா-வை முந்தையது பங்களாதேஷ். இதை தொடர்ந்து இலங்கையில் 31 சதவீதமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is far Behind Than Bangladesh, Srilanka and pakistan in Women workforce participation

India is far Behind Than Bangladesh, Srilanka and pakistan in Women workforce participation இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இலங்கையை விட இந்தியா மோசம்.!
Story first published: Monday, July 18, 2022, 13:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X