பாசுமதி அரிசி ஏற்றுமதியும் வீழ்ச்சி.. பணம் கொடுப்பதும் தாமதம்.. கவலையில் வர்த்தகர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு எது தெரியுமா? அது இந்தியா தான். இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக இந்தியா தான் முன்னணி வகித்து வருகிறது.

சொல்லபோனால் கடந்த 2018 - 19ம் ஆண்டில் மட்டும் 1.25 கோடி டன் அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 7.75 பில்லியன் டாலர் மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாசுமதி அரிசி ஏற்றுமதியும் வீழ்ச்சி.. பணம் கொடுப்பதும் தாமதம்.. கவலையில் வர்த்தகர்கள்..!

அதிலும் இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யும் ஈரானில், தற்போது பதற்றமான நிலை நிலவி வருகிறது. அதிலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் செலுத்தும் திறனைக் கொண்டிருப்பதால் ஈரானுக்கு பிரிமியம் பாசுமதி அரிசியை அனுப்ப இந்திய வர்த்தகர்கள் இடையே தயக்கமான நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு தானிய ஏற்றுமதியாளரின் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கூர்மையான வீழ்ச்சிக்கு பங்களித்ததாக வர்த்தக மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் அரிசி ஏற்றுமதி ஏப்ரல் - நவம்பர் 2019 வரை 5.5 மில்லியன் டன்னாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதே முதல் எட்டு மாதங்களில் முந்தைய ஆண்டில் 7.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு 19% வீழ்ச்சி கண்டு 3.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 4.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் பாசுமதி அரிசி கடந்த எட்டு மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் 6,00,000 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டு இதே காலங்களில் 9,00,000 டன்னாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்றுமதி ஓரளவுக்கு இருந்தாலும், ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு பணம் தாமதமாக கொடுப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்திய வர்த்தகர்கள் இடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இனி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பணம் செலுத்துவதும் கடினமாக உள்ளதால், இது எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆக நாங்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று அகில இந்தியா நெல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நாத்தி ராம் குப்தா ராய்ட்டர்ஸிடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s Basmati rice export down as sanctions delay payments from Iran

India’s rice export fall down as sanctions delay payments from iran. Basmati rice exports to Iran, dropped to 6 lak tonnes in the eight months from 9 lak tonnes a year earlier, but traders worried about delayed payments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X