உலகம் சுற்ற விரும்பும் இந்தியர்கள்.. சுற்றுலாவுக்காக இத்தனை கோடி செலவா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் எப்போதுமே உலகம் முழுவதும் சுற்றுலா செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பது கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்ல முடியவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் இந்தியர்கள் தற்போது அதிக அளவில் உலகம் முழுவதும் சுற்றுலா செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து வெளியான அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சர்வதேச சுற்றுலா 2024 ஆம் ஆண்டு $42 பில்லியன் அளவை தாண்டி இரட்டிப்பாகும் என்று தெரிவித்துள்ளது.

இனி ரயிலிலும் வெளிநாடு சுற்றுலா போகலாம்.. சாமானிய மக்களுக்கு செம்ம வாய்ப்பு..! #IRCTCஇனி ரயிலிலும் வெளிநாடு சுற்றுலா போகலாம்.. சாமானிய மக்களுக்கு செம்ம வாய்ப்பு..! #IRCTC

இந்தியர்களின் சுற்றுலா

இந்தியர்களின் சுற்றுலா

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா செல்லும் நபர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு அதிகரிக்கும் என்றும் அந்த ஆண்டில் $42 பில்லியன் அளவுக்கு இந்தியர்களின் சுற்றுலா செலவு இருக்கும் என்றும் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்திய சுற்றுலா பயணிகள்

இந்திய சுற்றுலா பயணிகள்

இந்த அறிக்கையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இது இந்திய பயண சந்தையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் இந்திய சுற்றுலா பயணிகள் தங்களது பயண அனுபவத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பை இது கோடிட்டு காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

$42 பில்லியன்

$42 பில்லியன்

இதுகுறித்து Nangia Andersen LLP தலைவர், அரசு மற்றும் பொதுத்துறை ஆலோசகர் சூரஜ் நங்கியா கூறிய போது, 'இந்தியர்களின் சுற்றுலா செலவு 2024ஆம் ஆண்டு 42 பில்லியன் டாலரை தாண்டும் என்றும், வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஆகியவை காரணமாக இந்திய சுற்றுலாத்துறை வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்.

80 மில்லியன் பாஸ்போர்ட்

80 மில்லியன் பாஸ்போர்ட்

உலக அளவில் வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் இந்தியா முன்னணி இடத்தில் உள்ளது என்றும், சுமார் 80 மில்லியன் பாஸ்போர்ட் வழங்கும் அளவுக்கு இந்தியாவில் திறன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை வளர்ச்சி

சுற்றுலாத்துறை வளர்ச்சி

வளர்ந்துவரும் பொருளாதார வளம், மக்கள் தொகை அதிகம் மற்றும் வளர்ந்து வரும் நடுத்தரவர்க்கம் ஆகியவை காரணமாக இந்தியாவில் சுற்றுலா துறை வளர்ந்து வருகிறது என்றும் சுற்றுலா துறையில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்றும் சூரஜ் நங்கியா மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

ஐரோப்பா

இந்தியர்கள் பொதுவாக ஐரோப்பா நாடுகளுக்கு 20% சுற்றுலா செல்கின்றனர் என்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிற்கு 10 சதவீதமும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு அதிகம் சுற்றுலா செல்கின்றனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பு நாடுகள்

நட்பு நாடுகள்

இதுகுறித்து Nangia Andersen LLP பார்ட்னர் - அரசு மற்றும் பொதுத்துறை ஆலோசகர் பூனம் கவுரா அவர்கள் கூறியபோது, ' இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு அந்தந்த நாடுகளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றும் இந்தியாவின் நட்பு நாடுகளாக பல நாடுகள் இருப்பதால் உலகின் பல நாடுகள் இந்தியர்களின் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் குறைவு

கொரோனா தொற்றால் குறைவு

2021ஆம் ஆண்டில் இந்தியர்கள் வெளியூர் பயணங்களில் சுமார் $12.6 பில்லியன் செலவிட்டுள்ளனர் என்றும், இது 2019ஆம் ஆண்டில் $22.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், அதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் வருங்காலத்தில் இந்தியர்களின் சுற்றுலா மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's International Tourism To Double And Surpass $42 Billion By 2024!

India's International Tourism To Double And Surpass $42 Billion By 2024! | உலகம் சுற்ற விரும்பும் இந்தியர்கள்.. சுற்றுலாவுக்காக இத்தனை கோடி செலவா?
Story first published: Monday, August 8, 2022, 7:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X