சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. கைகொடுக்காது.. மறு ஆய்வு தேவை.. எச்சரிக்கும் அறிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றம் ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சீனாவுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதி தான் FDI விதிகளில் புதிய கடுமையான கட்டுப்பாடுகள்.

இதற்கு காரணம் வைரஸினால் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் இந்திய நிறுவனங்களை, சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது நல்லதல்ல என்றும் கூறப்பட்டது.

இந்தியா மட்டும் அல்ல, அந்த சமயத்தில் இந்தியா உள்பட பல நாடுகள் அவரவர் FDI விதிகளை கடுமையாக்கினர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, கொரோனாவினால் பின்னடைவை சந்தித்த நிறுவனங்களை, யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விடக்கூடாது என்பது தான்.

 பின்னடைவு தான்
 

பின்னடைவு தான்

ஆனால் சீனாவின் முதலீடு இல்லாவிட்டாலும் இந்தியா சற்று பிரச்சனையை சந்திக்க நேரிடுமே என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்த கட்டுப்பாடுகள் வந்த போதே, எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றில், இப்படி பயத்தினால் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறுகிய காலத்திற்கு சரி வரலாம். ஆனால் நீண்டகாலத்திற்கு கேலிகுரியவையாக இருக்கும் என்று கூறியது.

 இந்தியா இன்னும் மாறவில்லை

இந்தியா இன்னும் மாறவில்லை

ஏனெனில் ஆசிய நாடுகளின் சில பொருளாதாரங்கள் மேற்கத்திய முதலீட்டினை பெற்று, கைப்பாவைகளாக மாறாமல் முன்னேறின. ஆனால் இந்தியா மட்டும் அப்போதிலிருந்து ஏழையாகவே இருந்து வருகிறது. ஆனால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கும் பிரிட்டனை விட தனி நபர் வருமானத்தில் பணக்காரர்களாக மாறியுள்ளனர். இந்தியாவில் இந்த ஆழமான கருத்துகள் வேரூன்றி இன்னும் மாறமல் உள்ளது என்ற பலதரப்பட்ட கருத்துகளும் அப்போதிலிருந்து இருந்து வருகிறது.

சூப்பர் வளர்ச்சி

சூப்பர் வளர்ச்சி

கொரோனா என்னும் பெருந்தொற்று நோயினால் தான் இப்படி ஒரு நிலை உருவாகியுள்ளது. ஆனால் 2000- களில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. சொல்லப்போனால் ஆண்டு தோறும் 8% வளர்ச்சியினைக் அப்போது கண்டது. ஏனெனில் அந்த நேரங்களில் அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகளை பெற அனுமதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சில நிறுவனங்களின் மதிப்பும் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் அதனால் இன்று பல நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது.

எதுவும் பிரச்சனையாக மாறவில்லையே
 

எதுவும் பிரச்சனையாக மாறவில்லையே

மைக்ரோசாப்ட், அமேசான். வோடபோன், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, ஷெல், ஜெனரல் எலக்ட்ரிக், ஹூண்டாய், வோல்க்ஸ்வேகன், சுசூகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஜில்லட் மற்றும் நெஸ்லே உள்ளிட்ட அனைத்து உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் சில இப்போது இந்தியாவிலும் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ளன. மேலும் பல நுகர்வோர் பொருட்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து பிரச்சனையாக மாறியுள்ளதா என்ன?

ஸ்டார்டப்களின் நிலை என்ன?

ஸ்டார்டப்களின் நிலை என்ன?

சீனா நிறுவனங்கள் பல இந்தியாவின் ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. தற்போது கொரோனாவின் காரணமாக மீண்டும் அந்த நிறுவனங்களுக்கு நிதி தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது அரசின் இந்த கொள்கையால் மீண்டும் முதலீடு கிடைக்குமா? அப்படி கிடைக்காவிட்டால் அத்தகைய நிறுவனங்களின் நிலை தான் என்ன?

சீனா நிறுவனங்கள் முதலீடு

சீனா நிறுவனங்கள் முதலீடு

குறிப்பாக ஒயோ, பேடிஎம், பைஜூ, மேக்மைடிரிப், ஸ்விக்கி என பல முன்னனி ஸ்டாடர்டப்களில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆக இவர்களை காப்பாற்ற யாரால் முடியும். மந்தமான பங்கு சந்தையில் சந்தர்ப்பவாத கையகப்படுத்தல்களை பொறுத்தவரை எப்படி தெரிந்துகொள்ள முடியும்.

இந்தியா மிக நெருக்கடியில் உள்ளது.

இந்தியா மிக நெருக்கடியில் உள்ளது.

இந்தியா இன்று மிக நெருக்கடியில் உள்ளது. சாத்தியமான ஒவ்வொரு மூலத்தில் இருந்தும் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. ஆக சீனா உள்பட பல வெளிநாட்டு முதலீடுகளையும் நாம் கவர்ந்திழுக்க வேண்டும். இதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது ஒரு தரப்பு. நிச்சயம் மேற்கூறிய காரணங்களும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றாகத்தான் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை

இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஆராச்சியாளர்கள் அரசின் இந்த அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையால், இந்தியாவுக்கு பலன் இல்லை என்று கூறியுள்ளனர். மாறாக உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தடைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

பின்னணியில் பல அம்சங்கள்

பின்னணியில் பல அம்சங்கள்

அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் வர்த்தகம் நிதி, விநியோக சங்கிலி, டெக்னாலஜி, தொழில் முனைவோர் என பல அம்சங்கள் உள்ளன. இதனால் முதலீடுகளை கட்டுப்படுத்துவது என்பது உதவாது. துறை சார்ந்த நேர்மறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். ஆக அரசு இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கண்டுகொள்ள வேண்டிய ஒரு விஷயமே

கண்டுகொள்ள வேண்டிய ஒரு விஷயமே

அதோடு உள்நாட்டு எம்எஸ்எம்இ-க்களின் நலன்களைப் பொறுத்தவரையில், பெரிய நிறுவனங்கள் பயிரிட வேண்டும். அதாவது முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் அவைகள் வளர்ச்சி காணும். ஆக FDI முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

உண்மையில் இன்று இந்தியா இருக்கும் நிலையில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முதலீடுகள் தேவை. அன்னிய முதலீடுகள் கிடைத்தால் மட்டுமே இன்னும் பல ஸ்டார்டப்கள் உயிர்பெறும். இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகும். பொருளாதாரமும் வளர்ச்சி காணும் என்பது கண்டுகொள்ள வேண்டிய ஒரு விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s new FDI rules won’t help, need wider review of FDI

According to the sources, India must woo all foreign investors, including the China and other countries, India’s FDI rules won’t help.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X