உலகளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் மத்தியில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கும் வேளையில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தை முக்கியமானதாக விளங்குகிறது. இதனாலேயே இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது.
இப்படியிருக்கையில் இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய பங்குச்சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அதில் முக்கியமானவர்கள் சிலர் மட்டுமே. இப்படி இந்திய பங்குச்சந்தையில் அசத்தும் டாப் 10 முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் முதலீட்டு மதிப்பு குறித்து தரவுகள் வெளியாகியுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் அசத்தும் டாப் 10 முதலீட்டாளர்கள் பட்டியலில் டிமார்ட் ராதாகிஷன் தமானி, மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் குடும்பத்தினர், ஹேமேந்திர கோத்தாரி, ஆகாஷ் பன்ஷாலி, முகுல் அகர்வால், ஆஷிஷ் தவான் மற்றும் நெமிஷ் ஷா ஆகியோர் உள்ளனர்.
இதில் முதல் இடத்தில் 1.54 லட்சம் கோடி போர்ட்ஃபோலியோவுடன் டிமார்ட் ராதாகிஷன் தமனி உள்ளார். இவரை தொடர்ந்து , ஜுன்ஜுன்வாலா குடும்பம் இரண்டாவது இடத்திலும் உள்ளது, 3வது இடத்தில் ஹேமேந்திர கோத்தாரி உள்ளார்.
இந்த டாப் 10 முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு மதிப்பு மட்டும் 2.3 லட்சம் கோடி ரூாபாய், இது பிஎஸ்இயின் மொத்த சந்தை மூலதனத்தில் 0.7% ஆகும்.
ராதாகிஷன் தமனி டிமார்ட் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகளை தாண்டி VST இண்டஸ்ட்ரீஸ், இந்தியா சிமெண்ட்ஸ், ட்ரெண்ட் மற்றும் சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து மார்ச் 31 ஆம் தேதி முடிவில் இவரின் மொத்த முதலீட்டு மதிப்பு 1,54,007 கோடி ரூபாயாகும்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் குடும்பம் ஸ்டார் ஹெல்த் மற்றும் அதனுடன் இணைந்த காப்பீடு, மெட்ரோ பிராண்டுகள், டாடா மோட்டார்ஸ் மற்றும் கிரிசில் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதி முடிவில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் குடும்பத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு 32,296 கோடி ரூபாயாகும்.
ஹேமேந்திர கோத்தாரி சொனாட்டா மென்பொருள் மற்றும் EIH அசோசியேட்டட் ஹோட்டல்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி முடிவில் ஹேமேந்திர கோத்தாரி-யின் மொத்த முதலீட்டு மதிப்பு 7,978 கோடி ரூபாயாகும்.
ஆகாஷ் பன்ஷாலி ராமகிருஷ்ணா ஃபோர்கிங்ஸ், ஐடிஎஃப்சி, சுதர்சன் கெமிக்கல் மற்றும் லாரஸ் லேப்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி முடிவில் ஆகாஷ் பன்ஷாலி-யின் மொத்த முதலீட்டு மதிப்பு 3,616 கோடி ரூபாயாகும்.

முகுல் அகர்வால் ரேமண்ட், ராடிகோ கைதான், இன்டலெக்ட் டிசைன் மற்றும் பிடிஎஸ் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி முடிவில் முகுல் அகர்வால்-யின் மொத்த முதலீட்டு மதிப்பு 2,638 கோடி ரூபாயாகும்.
ஆஷிஷ் தவான் M&M நிதி சேவைகள் க்ளென்மார்க் பார்மா, ஈக்விடாஸ் SFB மற்றும் கிரீன்லாம் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி முடிவில் ஆஷிஷ் தவான்-யின் மொத்த முதலீட்டு மதிப்பு 2,313 கோடி ரூபாயாகும்.
இவர்களை தொடர்ந்து நீமிஷ் ஷா 2,323 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடனும், ஆஷிஷ் கச்சோலியா 1,390 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடனும், அனில் குமார் கோயல் 1,660 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடனும், யூசப் அலி எம்ஏ 1,238 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடனும் உள்ளனர்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications