யாருமே வரல.. கடையெல்லாம் காலி.. புலம்பும் விற்பனையாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ரீடைல் வர்த்தகச் சந்தை எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளதோ, அதே வேளையில் பண்டிகை காலத்திற்கு முந்தைய காலமான நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் கடைகளுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக ரீடைல் கடைக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்தியாவில் பண்டிகை காலம் முடிந்த பின்பு சந்தையில் டிமாண்ட் குறைந்த காரணத்தாலும், விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தால் கடைகளுக்கும், உணவகங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக ரீடைல் சந்தை ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் ரெஸ்டாரென்ட் செயின் நிறுவனங்கள் அனைத்தும் வரும் காலத்தில் இப்பிரிவு வர்த்தகத்தை பெரிய அளவில் கணித்திருந்தாலும், தற்காலிகமாக விரிவாக்க திட்டங்கள் அனைத்தையும் முடக்கியுள்ளனர், இது பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் இந்திய ரீடைல் சந்தையில் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மெட்ரோ-வுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆசிய வளர்ச்சி வங்கியின் குட் நியூஸ்..! சென்னை மெட்ரோ-வுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆசிய வளர்ச்சி வங்கியின் குட் நியூஸ்..!

இந்திய ரீடைல் சந்தை

இந்திய ரீடைல் சந்தை

இந்திய ரீடைல் சந்தை ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது, இதற்கு முக்கியக் காரணம் கொரோனா தொற்று பின்பு கட்டுப்பாடுகள் இல்லாத முதல் பண்டிகை காலம் என்பதால் அதிகப்படியான ரீடைல் வர்த்தகம் பதிவானது, இதேபோல் இக்காலகட்ட ரீடைல் விற்பனை கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அக்டோபர் - டிசம்பர் காலாண்டு

அக்டோபர் - டிசம்பர் காலாண்டு

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரீடைல் நிறுவனங்கள் நுழைந்த போது அக்டோபர் மாதம் நவராத்திரி பண்டிகை காரணமாகச் சிறப்பான வர்த்தகச் சூழ்நிலைகள் இருந்தாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் ரீடைல் வர்த்தகம் தொடர்ந்து சரிவாகியுள்ளது என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரீடைலர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா
 

ரீடைலர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா

இதற்கிடையில் ரீடைலர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான குமார் ராஜகோபாலன் கூறுகையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரீடைல் வர்த்தகச் சந்தை 17 சதவீதம் வளர்ச்சி அடைந்தாலும், இதை வியக்க வைக்கும் அளவு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

பணவீக்கத்தால் உருவான விலைவாசி உயர்வு மக்களை அதிகம் ஷாப்பிங் செல்ல தடுக்கிறது, இதேபோல் அத்தியாவசிய பொருட்களைத் தாண்டி பிற பொருட்களை வாங்குவதில் இருந்து தடுக்கிறது.

QSR மற்றும் ஹோட்டல்

QSR மற்றும் ஹோட்டல்

மேலும் QSR மற்றும் ஹோட்டல் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் இந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 100 சதவீத வர்த்தக வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த இலக்கை அடையவில்லை, இதனால் அனைத்து முன்னணி ரெஸ்டாரென்ட் நிறுவனங்களும் வர்த்தக விரிவாக்கத்தை நிறுத்தியுள்ளது.

2023 ஆண்டு

2023 ஆண்டு

2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி, ஏற்றுமதி வாய்ப்புகள் சிறப்பாக இருந்தாலும் உலக நாடுகளில் உருவாகியுள்ள ரெசிஷன் அச்சம் இந்தியாவைப் பாதிக்கிறது. இதனால் இந்த ஆண்டு முழுக்க வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் மந்தநிலை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian retailers, restaurant chains facing serious problem; amid inflation customers footfall reduced

Indian retailers, restaurant chains facing a serious problem; amid inflation customers footfall reduced
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X