டிசிஎஸ் அப்படி.. இன்போசிஸ் இப்படி.. குழப்பத்தில் ஐடி ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் இரண்டு முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இரு நிறுவனங்களும் கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டை காட்டிலும் சிறப்பான வளர்ச்சியில் லாபம், வருவாயை பதிவு செய்துள்ள நிலையில் ஊழியர்கள் எண்ணிக்கையில் எதிருபுதிருமாக உள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்த வாரத்தின் துவக்கம் முதலே கடுமையான குழப்பத்தில் உள்ளனர்.

இதேவேளையில் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய பெரும் பொருளாதார நாடுகளில் ரெசிஷன் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல முன்னணி டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகன் ரோஹன் மூர்த்தி-யின் மனைவி யார் தெரியுமா..?!இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகன் ரோஹன் மூர்த்தி-யின் மனைவி யார் தெரியுமா..?!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டுக்கும் செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 2,197 பேர் குறைவாக உள்ளனர். ஆனால் இதேவேளையில் இன்போசிஸ் இக்காலக்கட்டத்தில் பிரஷ்ஷர்கள் பிரிவில் மட்டுமே சுமார் 6000 பேரை பணியில் சேர்த்துள்ளது.

ஐடி ஊழியர்கள்

ஐடி ஊழியர்கள்

ஒருபக்கம் நாட்டின் மிகப்பெரிய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை பணிநீக்கம் நிறைந்த காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிறது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது, ஆனால் 3வது காலாண்டில் 2,197 பேர் குறைந்துள்ளனர். இந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் படி இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.

மிலிந்த் லகாட்

மிலிந்த் லகாட்

இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான மிலிந்த் லகாட் கூறுகையில் புதிய ஊழியர்கள் சேர்ப்பதில் முதலீடுகளைக் குறைக்கப்பட்டு உள்ளதால் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை 10 காலாண்டில் முதல் முறையாகச் சரிந்துள்ளது என மிலிந்த் லகாட் தெரிவித்தார்.

பிரஷ்ஷர்கள்

பிரஷ்ஷர்கள்

இந்த நிலையில் இன்போசிஸ் 2023 ஆம் நிதியாண்டில் 50000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், 40000 பேரை முதல் 6 மாதத்திலேயே தேர்த்துள்ளது. ஆனால் கடந்த 3 மாதத்தில் பிரஷ்ஷர்கள் சேர்ப்பு எண்ணிக்கை வெறும் 6000 ஆக குறைந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

நிலஞ்சன் ராய்

நிலஞ்சன் ராய்

இதற்கிடையில் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான
நிலஞ்சன் ராய் 2023 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் 50000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் இலக்கை அடைவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை

இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை

இந்த நிலையில் இன்போசிஸ் மொத்தமாக முதல் காலாண்டில் 21,171 ஊழியர்களையும், 2வது காலாண்டில் 10,032 ஊழியர்களையும், 3வது காலாண்டில் 1,627 ஊழியர்களையும் சேர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம்

ஹெச்சிஎல் நிறுவனம்

இன்போசிஸ் மட்டுமல்ல 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் நிறுவனம் 2வது காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை 8359 பேர் அதிகரித்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 2,945 பேரை மட்டுமே சேர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் புதிய ஊழியர்கள் எண்ணிக்கை சேர்ப்பதில் அதிகளவில் சரிந்துள்ளது கவனிக்க வேண்டியதாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys employee count increased by 1627, but TCS employee count fall by 2197

Infosys employee count increased by 1627, but TCS employee count fall by 2197
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X