Infosys-ல் சேர்ந்தால் 7 வருடத்தில் மேனேஜர் பதவி.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா உட்பட அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

அதிலும் முக்கியமாக இன்போசிஸ் 28.4 சதவீத அட்ரிஷன் விகிதத்தைக் கொண்டு இருக்கும் காரணத்தால் இதைக் கட்டுப்படுத்த முக்கியமான முடிவை இன்போசிஸ் கொடுத்துள்ளது.

கேரளாவில் IBM, கனடாவில் இன்போசிஸ்..! ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..! கேரளாவில் IBM, கனடாவில் இன்போசிஸ்..! ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் அனுபவத்தையும், வாய்ப்புகளையும் மேம்படுத்துவதன் மூலம் ஊழியர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தைக் கொடுக்க முடியும் என இன்போசிஸ் உணர்ந்துள்ளது.

பதவி உயர்வு

பதவி உயர்வு

இன்போசிஸ் நிறுவனத்தில் 5 வருடத்திற்கு முன்பு 8000-10000 ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்படும், இதேவேளையில் 2021-22 வரையிலான காலகட்டத்தில் 40000 பேருக்கு ப்ரோமோஷன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என இன்போசிஸ் நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் குரூப் HR தலைவர் கிரிஷ் சங்கர் தெரிவித்தார்.

மேனேஜர் பதவி
 

மேனேஜர் பதவி

இன்போசிஸ் நிறுவனத்தில் பிரஷ்ஷராகச் சேரும் ஒருவர் தொடர்ந்து சிறப்பான பணியாற்றினால் மேனேஜர் பதவியைப் பெரும் பயணத்தின் காலம் குறைய உள்ளது. தற்போது ஒரு இன்போசிஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேண்டுமெனில் 12-13 வருடம் தேவை, ஆனால் தற்போது செய்யப்பட்டு உள்ள மாற்றம் மூலம் 9 வருடத்தில் ஒருவர் மேனேஜர் ஆக முடியும்.

7 வருடத்தில் மேனேஜர்

7 வருடத்தில் மேனேஜர்

இதுமட்டும் அல்லாமல் இன்போசிஸ் தற்போது பிளாட்டினம் கிளப் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது, இந்தக் கிளப் top performers-க்கானது இந்தக் கிளப்பில் இருப்பவர்கள் கவனிப்புடன், திறம்படச் செயல்பட்டு, நிர்வாகம் கொடுகும் டெஸ்ட்-களைத் தொடர்ந்து சிறப்பாக முடிப்பது மூலம் 7 வருடத்தில் கூட ஒரு பிரஷ்ஷர் மேனேஜர் ஆக முடியும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக கிரிஷ் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

பிளாட்டினம் கிளப்

பிளாட்டினம் கிளப்

மேலும் இந்தப் பிளாட்டினம் கிளப்-ல் தற்போது மொத்த ஊழியர்களில் 1-2 சதவீத ஊழியர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் கிரிஷ் ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த முறையின் கீழ் 12-13 வருட காலத்தில் மேனேஜர் ஆவதை விட வெறும் 7 வருட பணி அனுபவத்தில் மேனேஜர் ஆகும் வாய்ப்பு பெற முடியும்.

ஸ்கில் டேக்

ஸ்கில் டேக்

இதேபோல் ஊழியர்களின் திறனைக் கௌரவிக்கும் வகையில் அவர்கள் பயிற்சியை முடிக்கும் போது ஸ்கில் டேக் அளிக்கப்படுகிறது. ஸ்கில் டேக் பெற்று 6 மாதம் அனுபவம் பெற்றால் ஊழியர்களுக்கு டிஜிட்டல் ஸ்கோர் அளிக்கப்படுகிறது.

பணி மாற்றம்

பணி மாற்றம்

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது BIRDGE என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது, இத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு பணியில் இருந்து மற்றொரு தொழில்நுட்ப பணிக்கு எளிதாக மாற முடியும், இதேபோல் இதற்குச் சரியான ஸ்கில் டேக் மற்றும் அனுபவம் தேவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys fresher can become Manager within 7 years of experience; Check What is Platinum Club in infosys

Infosys fresher can become Manager within 7 years of experience; Check What is Platinum Club in infosys
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X