IPO 2021: ரூ.1.31 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிய 65 நிறுவனத்தில் டாப் 10 இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குசந்தை 2021ல் சர்வதேச சந்தை பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், தாக்குப் பிடிக்கவும் மிக முக்கியமான காரணங்களில் ஐபிஓ-வும் ஒன்று.

 

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்த காரணத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீடுகளைச் செய்து பங்குகளை அள்ளியுள்ளனர்.

 இந்திய ஐடி நிறுவனங்களின் புதிய திட்டம்.. விப்ரோ-வை தொடர்ந்து Mphasis..! இந்திய ஐடி நிறுவனங்களின் புதிய திட்டம்.. விப்ரோ-வை தொடர்ந்து Mphasis..!

 65 நிறுவனங்கள்

65 நிறுவனங்கள்

2021ஆம் ஆண்டில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 65 நிறுவனங்கள் வெளியிட்டு அசத்தியுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த வரும் ஐபிஓ வெளியிட்டு நிறுவனங்களில் அதிகம் எதிர்பார்த்த பல நிறுவனங்கள் தோல்வியில் முடிந்தது தான் ரீடைல் முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

 1.31 லட்சம் கோடி ரூபாய்

1.31 லட்சம் கோடி ரூபாய்

2021ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்ட 65 நிறுவனங்கள் சுமார் 1.31 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது. இந்திய வரலாற்றில் ஒரு வருடத்தில் ஐபிஓ மூலம் அதிக முதலீட்டைத் திரட்டப்பட்ட வருடமும் இந்த 2021ஆம் ஆண்டு தான்.

இந்த 65 நிறுவனத்தில் அதிகம் முதலீட்டைத் திரட்டிய டாப் 10 நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

 பேடிஎம் நிறுவனம்
 

பேடிஎம் நிறுவனம்

இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பது விஜய் சேகர் சர்மா தலைமை வகிக்கும் பேடிஎம் நிறுவனம் தான். இந்த வரலாற்றிலேயே இதுவரையில் யாரும் வெளியிடாத பிரம்மாண்டமான ஐபிஓ-வை பேடிஎம் வெளியிட்டது மறக்க முடியாத நிகழ்வு.

 ரூ.18,300 கோடி ஐபிஓ

ரூ.18,300 கோடி ஐபிஓ

பேடிஎம் சுமார் 18,300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ-வை வெளியிட்ட பேடிஎம் நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மந்தமான வரவேற்பு கிடைத்தது, இதற்கு முக்கியக் காரணம் பேடிஎம் நிர்வாகம் செய்த 2,150 ரூபாய் என்ற பங்கு விலை தான்.

 மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

இதைத் தொடர்ந்து சோமேட்டோ 9,375 கோடி ரூபாய், பவர் கிரிட் 7,735 கோடி ரூபாய், ஸ்டார் ஹெல்த் 7,249.2 கோடி ரூபாய், PB பின்டெக் 5,625 கோடி ரூபாய், Sona BLW பிரிசிஷன் பார்ஜிங்க்ஸ் 5,550 கோடி ரூபாய், நைகா 5,352 கோடி ரூபாய், Nuvoco விஸ்டாஸ் கார்ப் 5000 கோடி ரூபாய், IRFC நிறுவனம் 4,633 கோடி ரூபாய், Chemplast Sanmar 3850 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ வெளியிட்டு முதலீட்டைத் திரட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPO 2021: 65 companies collectively raised Rs 1.31 lakh crore; Check out Top 10 cos

IPO 2021: 65 companies collectively raised Rs 1.31 lakh crore; Check out Top 10 cos IPO 2021: ரூ.1.31 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிய 65 நிறுவனத்தில் டாப் 10 இது தான்..!
Story first published: Monday, December 27, 2021, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X