ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு, ஈரான் கொடுத்து வரும் பதிலடி தாக்குதல்கள் உலகளாவிய விநியோக சங்கிலியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் நேரடி விளைவாக, ஹீலியம் (Helium) என்ற முக்கிய வாயுவுக்கு கடுமையான பற்றாக்குறை உருவாகி, இந்தியா உட்பட உலக நாடுகளில் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகள் பாதிக்கள்ளது.

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

ஹீலியம் ஏன் முக்கியம்?
ஹீலியம் என்பது சாதாரண வாயு அல்ல; இது MRI ஸ்கேன் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் superconducting magnets-ஐ செயல்பாட்டில் வைத்திருக்க அவசியமானது. இதற்கு மாற்று வாயு எதுவும் இல்லை. எனவே, ஹீலியம் கிடைக்காத நிலை ஏற்பட்டால், மருத்துவமனைகளில் MRI சேவைகள் பாதிக்கப்படலாம்.

இதற்கு மேலாக, ஹீலியம் semiconductor சிப் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலிகான் வேஃபர்களை குளிர்விக்கவும், சிப் தயாரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படுவதால், இந்த ஒரு வாயு இல்லாமல் மொபைல், லேப்டாப், AI சர்வர்கள் போன்ற அனைத்து டெக் சாதனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

கத்தார் உற்பத்தி நிறுத்தம்
உலகில் ஹீலியம் உற்பத்தியின் சுமார் 33% பங்கீட்டை கொண்ட QatarEnergy நிறுவனத்தின் Ras Laffan உற்பத்தி தளம், ஈரான் தாக்குதல் காரணமாக மார்ச் 2 முதல் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியின் போது துணை தயாரிப்பாக கிடைக்கும் ஒரு வாயு தான் ஹீலியம்.

இந்த நிலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டால் ஹீலியம் விநியோகம் தானாக துண்டிக்கப்படும். இந்த நிலையால், உலகளாவிய ஹீலியம் விலை ஈரான் போருக்கு பின்பு இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

மாற்று உற்பத்தி ஆதாரம்
உலகளவில் ஹீலியம் உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களில் அமெரிக்காவின் Federal Helium Reserve மற்றும் ரஷ்யாவின் Amur 2 plant ஆகியவை உள்ளன. ஆனால், இவை இரண்டும் சேர்ந்து கத்தாரின் இழப்பில் சுமார் 50% மட்டுமே ஈடு செய்ய முடியும் திறன் கொண்டு உள்ளது.

இதனால் மீதமுள்ள 50% உற்பத்திக்கு மாற்று வழி இல்லாததால், ஹீலியம் விலையும் உயர்ந்துள்ளது, தட்டுப்பாடும் உருவாகியுள்ளது.

ஹீலியம் தன்மை
ஹீலியம் மற்ற வளங்களைப் போல நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாது. இதனால், உலகளாவிய விநியோக சங்கிலி சுமார் 45 நாட்கள் மட்டுமே இருப்பு வைத்திருக்கிறது. இந்த காலத்திற்குப் பிறகு, இருப்பு முற்றிலும் குறைந்து விடும் அபாயம் உள்ளது.

போர் துவங்கி சுமார் 22 நாட்கள் ஆனது, கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தி 18 நாட்கள் ஆனது.

சிப் துறை மற்றும் AI கட்டமைப்பு
உலகளவில் சிப் உற்பத்தியின் 70% வழங்கும் தென் கொரியா, தனது ஹீலியம் தேவையின் 65% கத்தாரிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. அங்குள்ள சிப் தொழிற்சாலைகளில் 2 முதல் 4 வாரங்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது.

இதனால், சிப் உற்பத்தி தடைப்பட்டால், உலகளாவிய டெக் துறையும், குறிப்பாக AI கட்டமைப்பும் பாதிக்கப்படும்.

இந்த ஒரே போரின் பாதிப்பு சுகாதாரம், உணவு, தொழில்நுட்பம் என மூன்று முக்கிய துறைகளின் விநியோக சங்கிலியையும் பாதித்துள்ளது. உரங்கள் பாதிக்கப்பட்டதால் உணவு உற்பத்தி சவாலுக்கு உள்ளாகியுள்ளது. ஹீலியம் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவைகள் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தி தடம் புரளும் அபாயம் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+