ஒரு கோடி ரூபா சம்பளம்.. ஆனா ஒரு வேலையும் இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாடு மாதிரி வேலை செய்தாலும் 5 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்க மாட்டேங்குது எனப் புலம்பும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்க ஒருவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது, ஆனால் ஒரு வேலையும் இல்லை என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நிறுவனத்தின் செயல்பாடுகளை நீதிமன்றத்தில் கிழித்துத் தொங்க விட்டு உள்ளார்.

 

ஒவ்வொரு நிறுவனத்திலும் சில ஊழியர்கள் அதிகமாக வேலை செய்யாவிட்டாலும் அதிகச் சம்பளத்தை ஜாலியாக வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மத்தியில் வேலை இல்லை என்பதற்காக வழக்குத் தொடுத்துள்ளார் இந்த ஊழியர்.

யார் இவர்..? வழக்கு தொடுக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை..?

அயர்லாந்து

அயர்லாந்து

அயர்லாந்து நாட்டின் ரயில்வே சேவை நிறுவனமான Irish Rail 1987 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டு இன்று வரையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. Irish Rail நிறுவனம் அந்நாட்டின் அரசு ரயில்வே நெட்வொர்க்-ஐ இயக்கும் நிறுவனமாகும்.

டெர்மோட் அலஸ்டர் மில்ஸ்

டெர்மோட் அலஸ்டர் மில்ஸ்

இந்த நிறுவனத்தின் ஊழியர் தான் தற்போது வழக்குத் தொடுத்துள்ளார். Irish Rail நிறுவனத்தில் பைனான்ஸ் மேனேஜர் ஆக இருக்கும் Dermot Alastair Mills -க்கு வருடம் 1,21,000 யூரோ அதாவது 1.03 கோடி ரூபாய்ச் சம்பளமாக அளிக்கப்படுகிறது.

தினசரி வேலை
 

தினசரி வேலை

ஆனால் இவருக்கு எவ்விதமான வேலையும் கொடுக்கப்படாமல் Irish Rail நிர்வாகம் செயல்படுவதால் Dermot Alastair Mills இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளார். Dermot Alastair Mills-ன் தினசரி வேலை என்ன என்று தானே விவரிக்கிறார் பாருங்க, இந்த வேலைக்கு மனுஷன் ஒரு கோடி ரூபாய்ச் சம்பளமாக வாங்குகிறார்.

2 பேப்பர், 1 சான்விச்

2 பேப்பர், 1 சான்விச்

மில்ஸ் தினமும் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருவார், வரும் போதே இரண்டு நியூஸ்பேப்பர் வாங்கி வருவார். 10 மணியில் இருந்து 2 நியூஸ் பேப்பர்-ஐயும் படித்து முடிக்கத் துவங்கி நடுவில் வீட்டில் இருந்து வரும் போது கடையில் வாங்கிய சான்விச்-ஐ சாப்பிட்டு விட்டு, வாக்கிங் செல்வார் இது தான் தினசரி பணியாக இருந்துள்ளது.

ஈமெயில்

ஈமெயில்

இதற்கு நடுவில் 10.30 மணிக்கு ஈமெயில் வந்தால், அதைச் செக் செய்துவிட்டு, அதைச் சார்ந்த பணிகளைச் செய்வார், இல்லையெனில் வாக்கிங் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

9 வருட பிரச்சனை

9 வருட பிரச்சனை

Dermot Alastair Mills 9 வருடத்திற்கு முன்பு Irish Rail நிறுவனத்தின் கணக்கில் மறைக்கப்பட்ட தொகை குறித்துக் கேள்வி கேட்டதற்காக நிர்வாகம் தன்னைத் தண்டித்து வருவதாகவும், நிறுவன கணக்குகளில் இருக்கும் குளறுபடிகளைக் கேள்வி கேட்ட காரணத்திற்காகத் தன்னை whistleblower என முத்திரை குத்தி தொடர்ந்து Irish Rail நிர்வாகம் தன்னைத் தண்டித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குளறுபடி

குளறுபடி

மேலும் நீதிமன்ற விசாரணையில் Irish Rail நிர்வாகம் 9 வருடத்திற்கு முன்பு கணக்கில் இருந்து குளறுபடியை Dermot Alastair Mills கண்டுபிடித்து வெளியிட்டதை ஒப்புக்கொண்டாலும், அதற்காகத் தண்டிக்கும் வகையில் எவ்விதமான தண்டனையும் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வாய்ப்புகள் மறுப்பு

வாய்ப்புகள் மறுப்பு

இதேபோல் Irish Rail நிறுவனத்தின் பைனான்ஸ் மேனேஜர் ஆக இருக்கும் Dermot Alastair Mills இந்நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்புகள், பணி குறித்த மீட்டிங்-ல் சேர்ந்துகொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

irish rail worker Dermot Alastair Mills getting 1 crore salary for doing nothing

irish rail worker Dermot Alastair Mills getting 1 crore salary for doing nothing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X