ஐடி ஊழியர்களுக்கு இனி ராஜ வாழ்க்கை.. ஏகப்பட்ட சம்பளம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தக் கொரோனா காலத்தில் பெரும்பாலான துறைகளின் வர்த்தகம் மற்றும் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு துறை மட்டும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும், ஏற்கனவே இத்துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வும், ஊழியர்களுக்குப் பல பதவி உயர்வு, பென்ஸ் கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் பரிசு என வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது இந்திய ஐடி துறை.

 

இந்திய ஐடி துறையில் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் வெளிநாடுகளில் இருக்கும் கிடைக்கும் அதிகப்படியான வர்த்தகம் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேக் இன் இந்தியா என்பது போல மேட் இன் தமிழ்நாடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு...!

அடுத்த 5 வருடத்திற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை வெளிநாட்டில் இருந்து பெரும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது ஊழியர்களின் நிலை குறித்து ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் தான் ஊழியர்கள் தட்டுப்பாடு அதிகரித்து ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பள உயர்வும், பதவி உயர்வும், போனஸ் தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பது தான் தற்போது பல கோடி ஐடி ஊழியர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் குடும்பங்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

2020 ஜூன்- ஜூலை

2020 ஜூன்- ஜூலை

2020 ஜூன்- ஜூலை மாத அளவில் இருந்து இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற துவங்கியது, டிசம்பர் வரையில் நிறுவனங்களின் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பென்ச் ஊழியர்களை வைத்துச் சமாளிக்க முயற்சி செய்தது இந்திய ஐடி நிறுவனங்கள்.

ஊழியர்கள் தட்டுப்பாடு ஆரம்பம்
 

ஊழியர்கள் தட்டுப்பாடு ஆரம்பம்

ஆனால் ஊழியர்கள் தட்டுப்பாடு மார்ச் மாதத்தில் உச்சத்தைத் தொட்ட காரணத்தால் எப்படியாவது திறன் வாய்ந்த ஊழியர்களைக் கைப்பற்ற வேண்டும் என இலக்குடன் நிர்ணயம் செய்து சம்பளத்தை வாரி வழங்கத் துவங்கியது.

அதீத சம்பள உயர்வை

அதீத சம்பள உயர்வை

இந்தக் காலகட்டத்தில் தான் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அதிகளவிலான சம்பள உயர்வைப் பெற்றனர். ஐடி ஊழியர்களுக்குக் கட்டாயம் தெரியும் இது தற்காலிகமானது தான் என்று இதனால் ஐடி ஊழியர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மிகவும் ஆர்வமுடன் புதிய வேலைக்கு மாறினார்.

முக்கியக் கேள்வி

முக்கியக் கேள்வி

ஆனால் இது எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக இருக்கும் நிலையில் நாஸ்காம் உயர் அதிகாரி முக்கியமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

நாஸ்காம் உயர் அதிகாரி

நாஸ்காம் உயர் அதிகாரி

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள், MNC டெக் நிறுவனங்கள், டெக் ஸ்டார்ட்அ போன்ற அனைத்து துறைகளிலும் அதிகளவிலான ஊழியர்கள் தேவை மற்றும் அதிகப்படியான சம்பள உயர்வு அடுத்த சில காலாண்டுகளுக்கு இருக்கும் என நாஸ்காம் அமைப்பின் தலைமை திட்ட அதிகாரியான சங்கீதா குப்தாவும், 3 வருடங்களுக்கு இருக்கும் என டெக் மஹிந்திகா தலைமை திட்ட அதிகாரியான ஜெகதீஷ் மித்ரா தெரிவித்துள்ளது.

வாழ்நாள் கனவு

வாழ்நாள் கனவு

டெக் ஊழியர்களுக்கு இது வாழ்நாள் கனவாக இருந்தாலும், நிறுவனங்களுக்கு இது பெரும் பிரச்சனையாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள வாக்கைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காகவும், குறித்த நாளில் வர்த்தகத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியே இல்லாமல் ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளத்தையும் போன்ஸ் தொகையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

இதனால் நிதியுதவி இல்லாத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான பதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர் என நாஸ்காம் பிராடெக்ட் கவுன்சில் தலைவர் அதுல் பத்ரா தெரிவித்துள்ளார். இதேபோல் சிறிய டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனத்திலும் அதிகளவிலான பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்த துவங்கியுள்ளது.

சங்கீதா குப்தா

சங்கீதா குப்தா

மேலும் சங்கீதா குப்தா கூறுகையில் ஐடி நிறுவனங்களுக்குக் குறுகிய காலகட்டத்தில் எவ்விதமான வழியும் இல்லை, ஆனால் அதிகளவிலான பிரஷ்ஷர்களைத் தேர்வு செய்து வேகமாகப் பயிற்சி கொடுத்துப் பணியில் அமர்த்தினால் இந்தப் பிரச்சனையை வேகமாகச் சமாளிக்க முடியும். ஆனாலும் அதற்குப் பல காலாண்டுகள் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜ வாழ்க்கை

ராஜ வாழ்க்கை

இனி மேல் என்ன பிரச்சனை.. அடுத்த 1 முதல் 2 வருடத்திற்கு ஐடி ஊழியர்களுக்கு ராஜ வாழ்க்கை தான், இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை நிறுவனத்தில் வேலை மாற்ற முடியுமோ மாறுவோருக்கு அதிகச் சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது.

ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்

ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்

ஆனால் இந்த 2 வருடத்திற்குப் பின்பு அதிகளவிலான பயிற்சி பெற்ற பிரஷ்ஷர்கள் பணிகளுக்கு வரும் நிலையில் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதிக வர்த்தகம்

அதிக வர்த்தகம்

ஆனால் அடுத்த 5 வருடத்திற்கு உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து வர்த்தகம் கிடைக்கும் காரணத்தால் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படும் நிலை இருக்காது என்றும் கூறப்படுக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT job market and massive salary hike will remain for 1-2 years red hot

IT job market and massive salary hike will remain for 1-2 years red hot
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X