உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஜகத் சேத்.. யார் இவர்? இவரது குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது தற்போதைய வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியா பணம் மற்றும் வர்த்தகத்தில் மிகவும் செழிப்புடன் இருந்தது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளது.

 

பிரிட்டிஷ், பிரென்ச், டச் நாட்டினர் இந்தியா வரும்போது உலகிலேயே பணக்கார நாடாக இந்தியா இருந்துள்ளது அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு "Golden Bird" என்று செல்லப்பெயர் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்திய வரலாற்றில் இருக்கும் செல்வந்தர்களின் சொத்துக்களைப் பார்க்கும் போது தற்போது இருக்கும் பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகியோர் சின்னப் பசங்க போல் இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் தான் முர்ஷிதாபாத் மாகாணத்தில் ஜகத் சேத், இவரரை சேத் ஃபதேசந்த் என்று அறியப்படுபவர்.

யார் இந்தச் சேத் ஃபதே சந்த்..?

யார் இந்தச் சேத் ஃபதே சந்த்..?

1723 இல் முகலாயப் பேரரசர் முகமது ஷாவால் ஜகத் சேத் பட்டம் ஃபதே சந்த்-க்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு, ஃபதே சந்தின் முழுக் குடும்பமும் ஜகத் சேத் குடும்பம் என்று அறியப்பட்டது. Seth என்ற பெயருக்குப் பின்னால் பல விஷங்கள் உள்ளது.

உலகின் வங்கியாளர்

உலகின் வங்கியாளர்

ஜகத் சேத் என்றால் "உலகின் வங்கியாளர்" (Banker of the World) என்று பொருள், 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் வங்காளத்தில் மிகவும் பணக்கார வங்கியாளராக ஃபதே சந்த் விளங்கினார்.

மாணிக் சந்த்
 

மாணிக் சந்த்

ஃபதே சந்த் குடும்பத்தின் செல்வத்தில் திழைக்க ஆரம்பமாக இருந்தவர் மாணிக் சந்த் என அறியப்படுகிறது, கி.பி 1495 இக்குடும்பம் மார்வார் என்ற பகுதியில் இருந்ததாகத் தகவல்கள் உள்ளது. கிபி 1652 ஆம் ஆண்டில் இவர்களது குடும்பம் பாட்னாவுக்கு இடம் பெயர்ந்தது.

பாட்னா

பாட்னா

அந்தக் காலக்கட்டத்தில் டெல்லியோ, கொல்கத்தாவோ, சென்னையோ, மும்பையோ முக்கிய வர்த்தக நகரமாக இல்லை. பாட்னா தான் முக்கிய வர்த்தகப் பகுதியாக விளங்கியுள்ளது. இங்கு ஃபதே சந்த் குடும்பத்தின் மூதாதையர் ஹிரானந்த் சாஹு வெடியுப்பு (saltpetre) விற்பனை செய்யத் துவங்கினார்.

வெடியுப்பு

வெடியுப்பு

பட்னாவுக்கு வரும் அனைத்து ஐரோப்பிய வியாபாரிகளும் அதிகளவில் வெடியுப்பு (saltpetre) வாங்குவார்கள், இதைப் பார்த்து தான் ஹிரானந்த் சாஹு இதை அதிகளவில் விற்பனை செய்தார். இதோடு கடன் கொடுக்கும் வர்த்தகத்தையும் செய்யத் துவங்கினார். கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும் இல்லையெனில் சொத்துக்கள், உடமைகளைக் கைப்பற்றும் வழக்கம் அந்தக் காலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தது.

7 மகன்கள்

7 மகன்கள்

ஹிரானந்த் சாஹு-க்கு வெடியுப்பு மற்றும் கடன் வர்த்தகம் பெரிய அளவில் கைகொடுத்த நிலையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். ஹிரானந்த் சாஹு-க்கு 7 மகன்கள் இதில் ஒருவர் தான் மாணிக் சந்த் இவர் வர்த்தகத்திற்காக அப்போது வங்காளத்தின் தலைநகராக இருந்த டாகா-வுக்கு வந்தார்.

50 வருட ஆதிக்கம்

50 வருட ஆதிக்கம்

மாணிக் சந் தனது தந்தையிடம் கற்ற வர்த்தகத் திறனை முழுமையாகப் பயன்படுத்தி வங்காளத்தில் 50 வருட நிதியுலங்கை ஆண்டார் மாணிக் சந்த். வர்த்தகம், அரசியல், பணம், ஆட்கள் பலம் என அனைத்திலும் விவரிக்க முடியாத அளவிற்கு உயர்ந்தார் மாணிக் சந்த்.

முர்ஷித் குலி கான் சுபேதார்

முர்ஷித் குலி கான் சுபேதார்

இந்த மாணிக் சந் தான் "உலகின் வங்கியாளர்" எனப் போற்றப்படும் ஜகத் சேத்-ன் தந்தை. மேலும் பிகார், வங்காளம், ஓரிசா பகுதியின் மன்னராக இருந்த முர்ஷித் குலி கான் சுபேதார்-ம் மாணிக் சந்த் -ம் நெருங்கிய நண்பர்கள். இதனாலேயே முர்ஷித் குலி கானின் பண நிர்வாகம் செய்யும் அதிகாரியாக இருந்தது மட்டும் அல்லாமல் பணத்தை டெபாசிட் செய்யும் நபராகவும் இருந்தார்.

2 கோடி ரூபாய் கப்பம்

2 கோடி ரூபாய் கப்பம்

இவரது நட்பு மூலம் வங்காளத்திற்கு முர்ஷிதாபாத் என்னும் புதிய தலைநகரை உருவாக்கி ஔரங்கசீப் மன்னருக்கு 1.30 கோடி ரூபாய் வரிக்கு 2 கோடி ரூபாய் கூடுதல் வரி செலுத்தும் அளவிற்கு உயர்ந்தனர். இப்போது தான் முகலாயப் பேரரசர் ஃபருக்சியார் 1715 இல் மாணிக் சந்துக்குச் சேத் பட்டத்தை வழங்கி சேத் மாணிக் சந்த் ஆனார்.

ஃபதே சந்த்

ஃபதே சந்த்

சந்துக்குச் சேத் மறைவிற்குப் பின்பு மொத்த சாம்ராஜ்ஜியமும் ஃபதே சந்த்-க்கு வந்தது. இவருடைய காலக்கட்டத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டு வந்தது. 1720களில் ஃபதே சந்த்-ன் சொத்து மதிப்பு பிரிட்டன் பொருளாதாரத்தை விடவும் குறைவு என்ற தரவுகளும் உள்ளது.

உலகின் வங்கியாளர் பட்டம்

உலகின் வங்கியாளர் பட்டம்

18ஆம் நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வந்த ஃபதே சந்த் குடும்பம் மற்றும் வர்த்தகம் நாடு முழுவதும் விரிவாக்கம் அடைந்து "உலகின் வங்கியாளர்" (Banker of the World) என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் ஃபதே சந்த் குடும்பம் ராபர்ட் கிளைவ்-ன் கிழக்கு இந்திய கம்பெனி உடன் இணைந்து வங்காளத்தின் நவாப் சிர்ஜ்-உத்-தௌலா-வுக்கு எதிராகப் போரிட்டது.

பிலாசி போர்

பிலாசி போர்

பிலாசி போரின் முடிவில் மிர் ஜாபர் புதிய நவாப் ஆகப் பெங்காள் பகுதியில் உருவானார். மிர் ஜாபர் தலைமையில் ஃபதே சந்த் குடும்பத்தைக் கொன்று குவித்தது, பலர் அடுத்தடுத்து உயிரிழக்க சொத்து, நிலம், பணம் என அனைத்தையும் இழந்தது.

ஜெகத் சேத் குடும்பம்

ஜெகத் சேத் குடும்பம்

சொல்லப்போனால் கிழக்கு இந்திய கம்பெனிக்கு ஃபதே சந்த் குடும்பத்திற்கு அப்போதைய காலக்கட்டத்தில் அளிக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் கடனை திருப்பி அளிக்கவே இல்லை. இப்படிப் படிப்படியாக ஃபதே சந்த் குடும்பம் உடைந்தும், அழிந்தும் போனது. தற்போது ஃபதே சந்த் என்பதும் ஜெகத் சேத்-ன் வீடு மீயூசியம் ஆக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jagat Seth man who called as Banker of the World; british East India company took loan from Fateh Chand aka Jagat Seth

Jagat Seth of Murshidabad, well known as Seth Fatehchand. Jagat Seth man who called as Banker of the World's a very rich banker in Bengal in the first half of the 18th century. East India company took loan from Fateh Chand aka Jagat Seth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X