ரூ.1 லட்சம் கோடி முதலீடு; JSW குரூப் பிரம்மாண்ட அறிவிப்பு.. எந்த மாநிலத்தில் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2030-க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகளையும், திட்டங்களையும் தீட்டி வருகிறது.

இதேவேளையில் தமிழ்நாட்டுக்குப் போட்டியாக இந்தியாவின் பிற மாநிலங்களும் முதலீட்டாளர்களையும், நிறுவனங்களையும் ஈர்க்க சிறப்பான திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு மத்தியிலான போட்டி பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் வேதாந்தா, பாக்ஸ்கான் உடன் ரூ.2 லட்சம் கோடி முதலீடு.. யாருக்கு ஜாக்பாட்தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் வேதாந்தா, பாக்ஸ்கான் உடன் ரூ.2 லட்சம் கோடி முதலீடு.. யாருக்கு ஜாக்பாட்

பெங்களூர்

பெங்களூர்

இன்று பெங்களூரில் நடந்த குளோபல் இன்வெஸ்டார்ஸ் கூட்டத்தில் பேசிய JSW குரூப் தவைவர் சஜ்ஜன் ஜிண்டால், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து உள்ள தங்களது அனைத்து வர்த்தகத்திலும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

 கர்நாடகா

கர்நாடகா

JSW குரூப் கர்நாடகா-வில் ஸ்டீல், கிரீன் எனர்ஜி, சிமெண்ட், பெயிண்ட்ஸ் மற்றும் நியூ கிரீன் பீல்டு துறைமுகம் ஆகியவற்றில் ஏற்கனவே 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் செய்ய முடிவு செய்துள்ளதாக JSW குரூப் தவைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

JSW குரூப்

JSW குரூப்

JSW குரூப் 2023ஆம் நிதியாண்டில் கர்நாடகா மாவட்டம் பெல்லாரியில் நடந்தி வரும் ஸ்டீல் ஆலையையும், விஜயநகரில் உற்பத்திப் பிரிவில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுக்கு 12 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட விஜயநகரில் உள்ள உற்பத்தி ஆலை தான் இந்தியாவின் மிகப்பெரிய ஓரே இடத்தில் ஒருங்கிணைந்த ஸ்டீல் தயாரிப்புத் தளமாகும்.

சஜ்ஜன் ஜிண்டால்

சஜ்ஜன் ஜிண்டால்

"ஒரே மாநிலம், பல வாய்ப்புகள்" என்ற மந்திரத்தை உண்மையிலேயே பிரதிநிதித்து வருகிறது கர்நாடக மாநிலம். இந்தியாவின் மிகவும் விருப்பமான முதலீட்டு இடங்களில் ஒன்றாகக் கர்நாடகா தனது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் சஜ்ஜன் ஜிண்டால் கூறினார்.

பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் நடைபெறும் மூன்று நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டம்

உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டம்

நவம்பர் 2ம் தேதி முதல் பெங்களூருவில் மூன்று நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த 2 வருடத்தில் 2.5 அரசு பணிகளில் இருக்கும் காலியிடத்தை நிரப்ப திட்டமிட்டு உள்ளோம், அடுத்த ஒரு வருடத்தில் 1 லட்சம் அரசு பணிகளை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JSW Group investing Rs.1 lakh crore additionally in Karnataka next years; Sajjan Jindal said in Global Investors Meet

JSW Group investing Rs.1 lakh crore additionally in Karnataka next years; Sajjan Jindal said in Global Investors Meet
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X