2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழும பங்குகள் கடந்த இரண்டு அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு பலத்த இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறம் எனில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான எல்ஐசி உள்ளது.

அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி-யின் மொத்த முதலீட்டு மதிப்பு ஜனவரி 24, 2022 அன்று 81,268 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 27, 2022 அன்று 62,621 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் 18,647 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டது.

அதானி-யை புலம்பவிட்ட Hindenburg.. 88 கேள்விக்கு வரிக்கு வரி விளக்கம்..! அதானி-யை புலம்பவிட்ட Hindenburg.. 88 கேள்விக்கு வரிக்கு வரி விளக்கம்..!

எல்.ஐ.சி வசம் உள்ள பங்குகள்

எல்.ஐ.சி வசம் உள்ள பங்குகள்

அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்களான சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 1% பங்குகளை டிசம்பர் 31, 2022 நிலவரப்படி இருக்கலாம் என முக்கிய முதலீட்டாளரான ஏஸ் ஈக்விட்டி தரவானது சுட்டிக் காட்டுகின்றது.

இவ்வளவு சரிவா?

இவ்வளவு சரிவா?

கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் 19% முதல் 27% வரையில் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்று எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலையானது, 3.40% சரிவினைக் கண்டுள்ளது.

இரண்டாவது நாளாக கடும் சரிவு
 

இரண்டாவது நாளாக கடும் சரிவு

அதானி குழும பங்குகள் அனைத்தும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையானது வெளியான நிலையில், பெரும் சரிவினைக் கண்டுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன.

அதானி குழுமத்தின் நிதி அதிகாரியான ஜுகேந்தர் சிங், ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அதானி குழுமத்தின் எஃப்.பி.ஓ-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி. அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டால், அதன் மூலம் பலனடைய திட்டமிட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியிருந்தார்.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

மேலும் இது ஆதாரமற்ற குற்றசாட்டு என கூறியிருந்த அதானி குழுமம், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தது. அதானி சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. நாங்கள் எங்கள் அறிவிப்பில் இருந்து பின் வாங்க போவதில்லை என அறிவித்துள்ளது. மேலும் நாங்கள் அதானி குழுமத்திடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளோம். ஆனால் அவை எவற்றிற்கும் அதானி பதில் கூறவில்லை.

எஃப்.பி.ஓ

எஃப்.பி.ஓ

எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதனால் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நீதிமன்றத்தில் சரியான ஆவணத்தை கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளது.

இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடு இன்று தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.

எல்.ஐ.சி வசம்?

எல்.ஐ.சி வசம்?

அதானி டோட்டல் கேஸின் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 6,55,88,170 அல்லது 5.96% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 25,454 கோடி ரூபாயில் இருந்து, 19,247 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதில் 6,237 கோடி ரூபாய் எல்ஐசிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸின் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 4,81,74,654 அல்லது 4.23% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 16,585 கோடி ரூபாயில் இருந்து, 13,307 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 3279 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி போர்ட்ஸ்

அதானி போர்ட்ஸ்

அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 4,06,76,207 அல்லது 4.23% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 11,211 கோடி ரூபாயில் இருந்து, 8175 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 3.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி போர்ட்ஸ் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 19,75,26,194 அல்லது 9.14% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 15,029 கோடி ரூபாயில் இருந்து, 11,824கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 3205 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அம்புஜா சிமெண்ட்ஸ்

அம்புஜா சிமெண்ட்ஸ்

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விகிதம் எல்ஐசி வசம் 12,55,89,263 அல்லது 6.33% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 6261 கோடி ரூபாயில் இருந்து, 4787 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 1474 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி பங்கு விகிதம் எல்ஐசி வசம் 2,03,09,080 அல்லது 1.28% பங்குகள் உள்ளது. ஜனவரி 24 அன்று 3886 கோடி ரூபாயில் இருந்து, 3015 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 871 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏசிசி சிமெண்ட்

ஏசிசி சிமெண்ட்

இதே ஏசிசி நிறுவனத்தில் எல்ஐசி வசம் 1,20,33,271 பங்குகள் அல்லது 6.41% உள்ளது. ஜனவரி 24 அன்று 2811 கோடி ரூபாயில் இருந்து, 2267 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐசிக்கு 544 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC loses Rs 18,000 crore due to Adani Group stock fall: check here full details

LIC loses Rs 18,000 crore due to Adani Group stock fall: check here full details
Story first published: Friday, January 27, 2023, 19:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X