எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

உலகளாவிய அரசியல் பதற்றம் தற்போது இந்திய மக்களையும், இந்திய மக்களுக்கு எளிதாக கிடைக்க கூடிய சேவைகளும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போர் காரணமாக இந்தியாவில் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இப்போது எரிவாயு மூலம் எரியூட்டு மையங்களை (crematorium) மூடியுள்ளது.

புனே மாநகராட்சி தனது எரிவாயு மூலம் எரியூட்டு மயானங்களை தற்காலிகமாக மூடியுள்ளது. இந்த முடிவு மார்ச் 5-ம் தேதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவால் ஏற்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற எல்பிஜி பொருட்களை வீட்டு சமையலுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டது.

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

இந்த உத்தரவால் வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே எல்பிஜி வழங்கப்படுகிறது. வணிக ரீதியான மற்றும் தொழில்சார் பயன்பாடுகளுக்கு விநியோகம் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக புனே மாநகராட்சி எரிவாயு மூலம் எரியூட்டு மையங்களை மூட முடிவு செய்தது. மார்ச் 8 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மையங்கள் மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல் படி புனே மாநகராட்சி சுமார் 22 எரிவாயு மூலம் எரியூட்டு மையங்களை (crematorium) மூடியுள்ளது.

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

குறிப்பாக புனே நகரின் முக்கியமான வைகுண்ட எரியூட்டு மையத்தில் மூன்று எரிவாயு அடுப்புகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஐந்து மின்சார அடுப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாற்று வசதிகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் Air Pollution Control (APC) அமைப்புகளுடன் கூடிய மரவிறகு அடிப்படையிலான மயானங்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்திருக்கும். புனே நகரில் கேஸ் மயானங்கள் மூடப்பட்டிருப்பது, உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் அன்றாட சேவைகளையும் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை தெளிவாக காட்டுகிறது.

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

இந்த நெருக்கடி ஈரான் போரால் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் எல்பிஜி போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டது உள்ளது. கத்தார் எனர்ஜி நிறுவனம் எரிவாயு உற்பத்தியை ஈரான் டிரோன் தாக்குதல் அச்சம் காரணமாக மூடப்பட்டு உள்ளது.

இதனால் உற்பத்தி, விநியோகம் பாதித்து இந்தியாவுக்கு மொத்த இறக்குமதியை பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் எரிவாயு வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது உணவகங்கள், ஹோட்டல்கள், மற்றும் பிற தொழில்களை பாதிக்கிறது.

மொத்தத்தில், ஈரான் போர் இந்தியாவின் எல்பிஜி விநியோகத்தை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+