ஏப்ரல் 1 முதல்.. ATM சேவை, பான் கார்டு, 2FA, பாஸ்டேக்.. எக்கசக்க மாற்றங்கள்..!!

2026-27 நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1ஆம் தேதி முதல், இந்தியாவில் பல முக்கிய நிதி மற்றும் வங்கி விதிமுறை மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

இந்த மாற்றங்கள் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையில் நேரடியாக பாதிக்கிறது என்பதால் முழுமையாக தெரிந்துக்கொண்டு உங்களுடைய நிதி பரிமாற்றங்களை மேற்கொள்வது அவசியம்.

ஏப்ரல் 1 முதல்.. ATM சேவை, பான் கார்டு, 2FA, பாஸ்டேக்.. எக்கசக்க மாற்றங்கள்..!!

புதிய வருமான வரி சட்டம் 2025
இந்த நிதியாண்டின் மிக முக்கியமான மாற்றமாக, புதிய வருமான வரி சட்டம் 2025 அமலுக்கு வருகிறது. பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த 1961 வருமான வரி சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வரி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மட்டும் அல்லாமல் வரி கணக்கீடு முறைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 2FA கட்டாயம்
இந்திய ரிசர்வ் வங்கியின் 2025 அறிவுறுத்தலின்படி, ஏப்ரல் 1 முதல் அனைத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் இரு அடுக்கு அங்கீகாரம் (Two Factor Authentication - 2FA) கட்டாயமாகிறது. OTP அடிப்படையிலான பாதுகாப்பு முறை பரவலாக பயன்படுத்தப்படுவதால் இதில் பல மோசடிகளும் திருட்டு வேலைகளும் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் மக்களின் பண பரிவர்த்தனைகளிள் கூடுதல் அடுக்கு பாதுகாப்பு செயல்முறை மூலம் பாதுகாக்கபட உள்ளது. இந்த புதிய அடுக்கிள் பின் அல்லது பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட உள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டண அமைப்புகளும் இந்த விதியை கடைப்பிடிக்க வேண்டும் என ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் திருட்டு பெரிய அளவில் குறைக்கப்படும்.

ATM வித்டிரா
புதிய விதிகளின்படி, ATM பணம் எடுப்பதில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹெச்டிஎப்சி வங்கி, யூபிஐ மூலம் ATM-இல் பணம் எடுப்பதை சாதாரண ATM பரிவர்த்தனையாகக் கணக்கிடும். இலவச வரம்பை தாண்டிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் வரி வசூலிக்கப்படும்.

மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி சில டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை குறைத்துள்ளது. Platinum, Gold மற்றும் Business கார்டுகளுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.50,000 ஆகவும், Select மற்றும் Signature கார்டுகளுக்கு ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ,75,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பந்தன் வங்கி ATM பரிவர்த்தனைகளில் இலவச வரம்புகளை மாற்றியுள்ளது. மற்ற வங்கிகளின் ATM-களில் மெட்ரோ நகரங்களில் 3 மற்றும் பிற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் வழங்கப்படும்.

FASTag ஆண்டு கட்டணம் உயர்வு
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள மாற்றத்தின் படி, FASTag ஆண்டு பாஸ் கட்டணம் ரூ.3,000 இலிருந்து ரூ.3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

உணவு கூப்பன்களுக்கு அதிக வரி விலக்கு
ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கூப்பன்கள் மற்றும் meal cards-க்கு வரி விலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.50 இருந்த வரம்பு, தற்போது ஒரு உணவிற்கு ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வரி சலுகை பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த சலுகை பழைய வரி முறையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PAN கார்டு விதிகளில் மாற்றம்
PAN கார்டு பெறுவதற்கான விதிகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனி ஆதார் மட்டும் பயன்படுத்தி PAN விண்ணப்பிக்க முடியாது. தனிநபர்கள் (Form 93), நிறுவனங்கள் (Form 94) மற்றும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் (Form 95) தகுந்த படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்தத்தில், 2026-27 நிதியாண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரும் இந்த புதிய நிதி விதிகள், இந்தியாவின் நிதி அமைப்பை மேலும் பாதுகாப்பான திசையில் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+