களத்தில் இறங்கினார் நிர்மலா சீதாராமன்.. பிப்ரவரி 1 முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளை மத்திய நிதியமைச்சகம் இன்று முதல் துவங்க உள்ளது.

 

சர்வதேச பொருளாதார வளர்ச்சி மோசமாக இருக்கும் நிலையில், அனைத்து முன்னணி நிதி அமைப்புகளும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து குறைத்து வரும் நிலையில், பல நாடுகள் ரெசிஷனுக்குள் மூழ்கும் என அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை உருவாக்கும் பணிகளை இன்று துவங்க உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இந்த பட்ஜெட் அறிக்கை மூலம் இந்திய பொருளாதாரத்தை எப்படி வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது போல் சவால்களும் அதிகமாக உள்ளது.

பட்ஜெட் அறிக்கை 2023-24

பட்ஜெட் அறிக்கை 2023-24

2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்க, இன்று அனைத்து அமைச்சகம், துறைகள் மத்தியில் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான செலவினத்தின் மறுமதிப்பீட்டு அளவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இது நரேந்திர மோடி-யின் 2வது ஆட்சியின் 5வது பட்ஜெட் அறிக்கையாகும், இதேபோல் 2024 ஏப்ரல் - மே மாதம் பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த 2.0 ஆட்சியின் கடைசிப் பட்ஜெட் ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் நலன் சார்ந்து அதிகப்படியான திட்டங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் 5வது பட்ஜெட் அறிக்கையாகும்.

5 அமைச்சகம்
 

5 அமைச்சகம்

முதல் நாள் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியவை இடம்பெற உள்ளது.

செலவின மறு மதிப்பீடுகள்

செலவின மறு மதிப்பீடுகள்

இந்த 5 முக்கிய அமைச்சகங்களும் நிதி செயலாளர் மற்றும் செலவின செயலாளர்-களுடன் நடப்பு நிதியாண்டுக்கான செலவினங்களையும், அடுத்த நிதியாண்டுக்கான செலவின திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற அமைச்சகங்கள் உடனான விவாதம் நவம்பர் 10ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சியை ஆர்பிஐ, உலக வங்கி மற்றும் பல்வேறு நிதி அமைப்புகள் 7 சதவீதத்தில் இருந்து சராசரியாக 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்துத் தான் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் கணக்கிடப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi 2.0 Govt 5th budget making process starts today; Nirmala Sitharaman may give importance to general elections 2024

Modi 2.0 Govt 5th budget-making process starts today; Nirmala Sitharaman may give importance to general elections 2024
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X