2020ல் முகேஷ் அம்பானி பேஸ்புக், கூகிள் போன்ற பெரும் நிறுவனங்களிடம் முதலீட்டை ஈர்ப்பதற்கும், அமேசான், வால்மார்ட் போன்ற முன்னணி நிறுவனத்துடன் வர்த்தகத்தைக் கைப்பற்றவும் பெரும் பகுதி காலகட்டத்தைச் செலவு செய்தால்.
இந்நிலையில் டெலிகாம் நிறுவன பங்குகள் மூலம் 1.5 லட்சம் கோடி ரூபாய், ரீடைல் வர்த்தகப் பங்குகள் மூலம் 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைப் பெற்றுச் செழிப்புடன் உள்ளார் முகேஷ் அம்பானி.
இதனால் தற்போது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் அறிமுகமாகும் டெஸ்லா கார் விலை என்ன தெரியுமா..?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டுமே இருந்த நிலையில் ஜியோ அறிமுகத்திற்குப் பின்பும், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்ட பிறகும் ஒரு முழு டெக்னாலஜி மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றம் சாதாரணமாக நடக்கக் கூடியது இல்லை என்பதே தற்போது பிரச்சனை.

முக்கியத் திட்டங்கள்
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் லோக்கல் 5ஜி நெட்வொர்க், பேஸ்புக்-ன் வாட்ஸ்அப் பேமெண்ட் தளத்தைத் தனது ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவை தளத்துடன் இணைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள மளிகை மற்றும் ரீடைல் கடைகளுடன் தனது ஈகாமர்ஸ் நிறுவனத்துடன் இணைக்க வேண்டும்.
இப்படி அடுத்தடுத்து முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி.

இன்போசிஸ் நந்தன்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்ற முதலீடு, அதன் திட்டங்கள், இலக்குகள் குறித்து நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி, ரிலையன்ஸ் தனது இலக்குகளை அடைய அதிகளவிலான பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனத் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் பிரிவு பங்குகள்
முகேஷ் அம்பானியின் முதல் திட்டம் தனது எண்ணெய் வர்த்தகத்தின் 20 சதவீத பங்குகளைச் சவுதி ஆராம்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்து சுமார் 15 பில்லியன் டாலர் திரட்ட வேண்டியது தான்.
ஆனால் கச்சா எண்ணெய் விலை நிலை, சவுதி அரேபிய அரசின் நிதிநிலை, எண்ணெய் வர்த்தகத்திற்கான எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து காலந்தாழ்த்தப்பட்டது.

முகேஷ் அம்பானி முடிவு
இதனால் பொறுமையை இழந்த முகேஷ் அம்பானி, கொரோனா எதிரொலியால் ஏற்பட்ட பங்கு மதிப்பில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர டெலிகாம் மற்றும் ரீடைல் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈர்த்தது. முகேஷ் அம்பானியின் முடிவுக்கு எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவிலான லாபத்தைக் கிடைத்தது.

ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி
இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஜியோ மற்றும் ரீடைல் பிரிவின் தலைவரான ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் பல அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை அறிவித்தனர். இதில் முக்கியமாக 5ஜி சேவை மற்றும் video-streaming சேவை.

video-streaming சேவை
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் video-streaming சேவையில் ஜியோ வாயிலாக நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் உடன் பல்வேறு டிவி சேனல் என அனைத்தையும் ஒற்றைச் சேவை தளமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப் புதிய திட்டத்தை அறிவித்தனர்.

MSME நிறுவனங்கள்
இதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலும் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு டெக் உதவிகளும், செயலிகளும் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக ஈஷா மற்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தனர்.

54 டாலர் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் ஜியோ டிஜிட்டல் மற்றும் டெலிகாம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகக் கூகிள் முதலீட்டின் மூலம் ஏற்பட்ட கூட்டணியில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயக்கும் 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் 54 டாலர் விலையில் விற்பனை சந்தைக்குக் கொண்டு வர திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியானது.

நெருக்கடியில் முகேஷ் அம்பானி
இதனால் இந்த வருடம் திட்டமிடப்பட்ட அனைத்து திட்டங்களையும் அறிமுகம் செய்ய வேண்டும், அதேபோல் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை அள்ளிக் கொடுத்த முதலீட்டாளர்களுக்குக் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் முகேஷ் அம்பானி.
சொன்னதைச் செய்வாரா முகேஷ் அம்பானி..? உங்கள் கருத்து என்ன.. பதிலை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.