100 கோடி ரூபாய் திட்டம்.. பேடிஎம் அடுத்த அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் பேடிஎம் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க தொடர்ந்து புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாகக் கூட மியூச்சவல் பண்ட் முதலீடு சேவையும், ஒரு வாரத்திற்கு முன்பு பங்குச்சந்தை முதலீட்டுச் சேவையை அறிமுகம் செய்தது.

 

இது மட்டுமல்லாமல் டிஜிட்டல் பரிமாற்றம் கொண்ட அனைத்து சேவைகளையும் பேடிஎம் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்நிறுவனத்தின் தலைவரான விஜய் சேகர் ஷர்மாவின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது.

இந்தக் கனவை அடையும் பொருட்டுப் பேடிஎம் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவுக்கு மாற்று இந்தியா தான்.. இது கவர்ச்சிகரமான நாடு.. இங்கிலாந்து- இந்திய வர்த்தக கவுன்சில்..!

POS திட்டம்

POS திட்டம்

இந்தியா முழுவதும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிமாற்றங்களைச் செயல்படுத்தும் பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தை, தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஆண்டுராய்டு தளத்தில் இயங்கும் வகையில் பாக்கெட் சைஸ்-ல் சிறிய பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது பேடிஎம்.

இந்தப் பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தில் பில்லிங் சாப்ட்வேர், QR கோடு ஸ்கேனிங் பேமெண்ட், 4ஜி சிம் கார்டு பயன்பாடு வைபை வசதி மற்றும் ப்ளூடூத் இணைப்பு எனப் பல சேவைகளைக் கொண்டுள்ளது பேடிஎம்-ன் இப்புதிய பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரம்.

499 ரூபாய்

499 ரூபாய்

இந்த இயந்திரத்தை அறிமுகச் சேவையாக மாதம் 499 ரூபாய் வாடகை திட்டத்தின் கீழ் பேடிஎம் வழங்க உள்ளது. 'Paytm All-in-One Portable Android Smart POS' என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் அனைத்து விதமான ஆர்டர்களையும், பேமெண்களையும் பெறும் வசதி கொண்டது எனப் பேடிஎம் தெரிவித்துள்ளது.

100 கோடி ரூபாய்
 

100 கோடி ரூபாய்

அடுத்த சில மாதத்தில் சுமார் 2 லட்ச POS இயந்திரங்களை விற்பனை செய்யவும், அதன் மூலம் மாதம் 2 கோடி பரிமாற்றங்களைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை முதலீடு செய்து இந்த இயந்திரத்திற்கான விற்பனை, விநியோகம், மார்கெட்டிங் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது பேடிஎம் நிர்வாகம்.

சிறு குறு கடைகள்

சிறு குறு கடைகள்

இந்த இயந்திரத்தைக் கொண்டு இந்தியாவில் பெரு நகரங்கள் முதல் சிற நகரங்கள் வரையில் இருக்கும் சிறுசிறு கடைகளும் இணையப் பணப் பரிமாற்ற சேவையை அளிக்க முடியும். இது இந்திய பேமெண்ட் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பேடிஎம் நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் ரேனு சாட்டி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பானது

பாதுகாப்பானது

மேலும் இது தற்போது சந்தையில் இருக்கும் பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தை விடவும் பேடிஎம் பாயின்ட் ஆப் சேல்ஸ் பாதுகாப்பானது. மேலும் இந்த இயந்திரத்தில் ஸ்கேன் டூ ஆர்டர் சேவை இருப்பதால் இது பிற எந்த இயந்திரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானதும் லாபகரமானதும்.

பேடிஎம்-ன் பாக்கெட் சைஸ் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவி வெறும் 163 கிராம் மட்டுமே, அதில் 4.5 இன்ச் டச் ஸ்க்ரீன் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pos debit card credit card qr code
English summary

Next Big leap for paytm in digital transactions: new portable POS devices

Next Big leap for Paytm in digital transactions: new portable POS devices
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X