H1B விசாவுக்கு போட்டியாக O1 விசா.. அமெரிக்காவிற்கு படையெடுக்கும் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று அமெரிக்கக் கனவு இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்தும் தரப்பு மக்களுக்கும் அமெரிக்காவில் ஒரு வேலை, அமெரிக்காவில் ஒரு வீடு, அமெரிக்காவில் குழந்தைகளின் படிப்பு என ஆசைகள் அதிகரித்துக்கொண்ட இருக்கிறது.

 

ஆனால் இந்தக் கனவை அதிகளவில் அடைவோர் ஐடி மற்றும் டெக் ஊழியர்களாகவே இருக்கும் நிலையில், தற்போது பெரும் மாற்றும் உருவாகியுள்ளது.

1 கிலோ ஹைட்ரஜன் 1 டாலர்.. முகேஷ் அம்பானி சொல்வது சாத்தியமா..? உலக நாடுகள் வியப்பு..! 1 கிலோ ஹைட்ரஜன் 1 டாலர்.. முகேஷ் அம்பானி சொல்வது சாத்தியமா..? உலக நாடுகள் வியப்பு..!

அமெரிக்கா அது ஒரு கனவு

அமெரிக்கா அது ஒரு கனவு

பொதுவாக அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் வேலை பார்க்க அதிகம் போட்டிப்போடும் விசா என்றால் ஹெச்1பி விசா. இதை வாங்குவதற்காகவே பல ஆயிரம் ஐடி ஊழியர்கள் வருடக் கணக்கில் தேவுடு காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதே வேளையில் O வகை விசா பெறுவதற்காகத் தற்போது பல ஆயிரம் மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

O விசாவா..? இப்படியொரு விசா இருக்கா..? இது யாருக்குக் கிடைக்கும்..? ஐடி துறைக்கு இது லாபமா..?

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்க அரசு அனைத்துத் தரப்பு மக்களையும், திறமையான ஊழியர்களையும் எப்போதும் ஏற்றுக்கொள்கிறது. இதுதான் அமெரிக்காவை Land of Opportunity எனச் செல்லமாக அழைக்க முக்கியக் காரணம்.

முக்கியத் துறைகளுக்கு மட்டும்
 

முக்கியத் துறைகளுக்கு மட்டும்

O விசா என்பது அமெரிக்க அரசால் அளிக்கப்படும் Non-Immigrant தற்காலிக வேலைவாய்ப்பு விசா. இந்த விசா சயின்ஸ், ஆர்ட்ஸ், கல்வி, வர்த்தகம் மற்றும் தடகள விளையாட்டு, மோஷன் பிக்சர் அல்லது தொலைக்காட்சி துறையில் சிறந்து விளங்கும் அதிகளவிலான திறன் வாய்ந்தவர்களுக்காக அளிக்கப்படும் விசா.

3 வருடம் வேலை செய்ய அனுமதி

3 வருடம் வேலை செய்ய அனுமதி

இந்த O விசா மூலம் ஒருவர் குறைந்தபட்சம் அமெரிக்காவில் எவ்விதமான தடையும் இல்லாமல் தனது திறனை வைத்து வேலை பார்க்க முடியும். O விசா முதற்கட்டமாக ஒருவருக்கு 3 வருடம் வரையில் விசா அளிக்கப்பட்டு, அதன் பின்பு வாய்ப்புகள், தகுதிகள் அடிப்படையில் ஒரு வருடம் அதிகரிக்கப்படும். இந்த ஒரு வருட அதிகரிப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 முதல் நடைமுறையில் உள்ளது

1990 முதல் நடைமுறையில் உள்ளது

இந்த O விசா அமெரிக்காவில் 1990ஆம் ஆண்டு ப்ரூஸ் மோரிசன் என்ற அமைச்சர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்தார். ஹெச்1 விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பது போல ஒவ்வொரு வருடமும் O விசா அதிகரிக்கப்படுகிறது.

4 வகை O விசா

4 வகை O விசா

O விசாவில் சுமார் 4 வகைகள் உள்ளது, ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு கோடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

O-1A : சயின்ஸ், கல்வி, வர்த்தகம் அல்லது தடகள விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோரும், உலகளவில் பதக்கம் மற்றும் விருதுகளைப் பெற்றவர்களும் இப்பிரிவில் விசா பெறலாம்.

O-1B : ஆர்ட் அதாவது கலை, மோஷன் பிக்டர் அல்லது தொலைக்காட்சி துறையில் சிறந்து விளங்குவோரும், உலகளவில் பதக்கம் மற்றும் விருதுகளைப் பெற்றவர்களும் இப்பிரிவில் விசா பெறலாம்.

O-2 : இந்த விசா O-1A மற்றும் O-1B விசா பெறுபவர்களுக்கு உதவி செய்வதற்காகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கும் இந்த O-2 விசா வழங்கப்படுகிறது.

O-3 : O-1 மற்றும் O-2 பிரிவில் விசா பெற்றவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் அவர்களுடன் தங்குவதற்கு அளிக்கப்படும் விசா தான் இந்த O-3 விசா.

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா பெறுவதைப் போலவே O விசா பெறுவதற்கும் பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தது 2 முதல் 3 மாதத்தில் உங்கள் விசா விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டுத் தகுதியானவர்களுக்கு USCIS அமைப்பு அமெரிக்க எம்பசி வாயிலாக விசாவை வழங்கும்.

O விசா கட்டணம்

O விசா கட்டணம்

பொதுவாக இந்த விசாவை விண்ணப்பம் செய்தால் 460 டாலர் செலுத்த வேண்டும், அதுவே ப்ரீமியம் பிராசசிங் முறையில் 15 நாட்களுக்குள் விசா பெற வேண்டும் என்றால் அதற்கு 1,500 டாலர் வரையிலான தொகையைச் செலுத்த வேண்டும்.

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

ஹெ1பி விசாவிற்குப் போட்டியாகத் தற்போது இந்தியாவில் இருந்து O-வகை விசா பெற விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிலும் போட்டி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூலை தரவுகள்

ஜூலை தரவுகள்

அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் 10,000 பேருக்கு O விசா வழங்கப்படுகிறது. இதன் படி ஜூலை மாதம் மட்டும் இந்தியர்களுக்கு அமெரிக்கா அரசு கொடுத்துள்ள விசா எண்ணிக்கையை பாருங்கள்.

O வகை விசா

O1 விசா - 28
O2 விசா - 9
O3 விசா - 19

ஹெச் வகை விசா

H1B விசா - 2,049
H4 விசா - 2,302

மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா

F1 விசா - 31,547
F2 விசா - 228
M1 விசா - 45

பிற விசா வகை தரவுகள்

B1 விசா - 24
B1/B2 விசா - 1,280
B2 விசா - 10
C1 விசா - 17
C1/D விசா - 922
C3 விசா - 17
D விசா - 2
E2 விசா - 1
E3D விசா - 3
G1 விசா - 8
G4 விசா - 82
I விசா - 2
J1 விசா - 465
J2 விசா - 155
K1 விசா - 90
K2 விசா - 3
L1 விசா - 453
L2 விசா - 461
TD விசா - 6

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

O Visa: Who is eligible? Benefits of O Visa? Is this Alternative for H-1B Visa?

O Visa - Is this Alternative for H-1B Visa?: Who is eligible? Benefits of O Visa?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X