உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உக்ரைன் - ரஷ்யா மட்டும் அல்லாமல் ஈரானும் மிக முக்கியக் காரணமாக உள்ளது என்பது தான் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
எப்படித் தெரியுமா வாங்க பார்ப்போம்

கச்சா எண்ணெய்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த ஒரு வார வர்த்தகத்தில் இதன் விலை கடுமையான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து உள்ளது. இந்தத் தடுமாற்றத்தில் ஐரோப்பியா நாடுகளின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 115 டாலராகவும் உயர்ந்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை
தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் பெரிய அளவில் குறைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு அதிகப்படியான தட்டுப்பாடு உருவாகி விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை மூலம் கச்சா எண்ணெய் விலை கட்டாயம் 145 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான்
இந்நிலையில் ஈரான் நாட்டு உடனான மேற்கத்திய நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகும் காகரனத்தால் ஈரானிய கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைகளுக்குள் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துள்ளது. இதனால் இந்த வாரம் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா, சீனா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட ஈரான் உடன் ரஷ்யா இணைந்து பணியாற்றுவதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்று ரஷ்யா கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல் சீனாவுடம் சில முக்கியமான கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை
WTI கச்சா எண்ணெய் - 115.68 டாலர்
பிரெண்ட் கச்சா எண்ணெய் - 118.11 டாலர்
இயற்கை எரிவாயு - 5.016 டாலர்
OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் - 117.06 டாலர்
இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் - 117.39 டாலர்