ஓலா, ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அரசின் சூப்பர் சலுகை.. இனி வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாப்ட்பேங்க் குழுமத்தின் ஆதரவுடைய ஓலா நிறுவனமும், இந்திய அரசின் பேட்டரி திட்டத்தின் மூலம் சலுகையை பெற ஏலத்தில் வென்றுள்ளதாக கூறப்படுகின்றது. .

 

2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த சலுகை திட்டத்தின் கீழ் ஓலா , ரிலையன்ஸ் மட்டும் அல்ல, இன்னும் பல நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.

அரசின் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு தேவையான பேட்டரி உற்பத்தியைக் கொண்டு, இந்தியாவின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அரசு திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் - அமேசான்: பேச்சுவார்த்தை தோல்வி.. மீண்டும் வழக்கு..!ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் - அமேசான்: பேச்சுவார்த்தை தோல்வி.. மீண்டும் வழக்கு..!

பிஎல்ஐ திட்டம்

பிஎல்ஐ திட்டம்

கடந்த 2015ம் ஆண்டிலேயே மின்சார வாகன உற்பத்தியினை ஊக்குவிக்க அரசு FAME என்ற திட்டத்தினை கொண்டு வந்தது. அதன் பிறகு உற்பத்தியினை மேம்படுத்தும் விதமாக பிஎல்ஐ திட்டத்தினையும் அறிவித்தது. இந்த திட்டத்தின் மீலம் ,மின்சார வாகன பேட்டரி உற்பத்தி செய்ய முதலீடு செய்யும், நிறுவனங்களுக்காக 18,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

உற்பத்தி தொடங்க அவகாசம்

உற்பத்தி தொடங்க அவகாசம்

அரசின் இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களுக்கு 5 ஆண்டுகால அவகாசம் கிடைக்கும். அதற்குள் அவர்கள் பேட்டரி உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்தியினை தொடங்க வேண்டும். இந்த உற்பத்தியானது எந்தளவுக்கு செய்யப்படுகிறதோ? அந்தளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இரண்டு நிறுவனங்கள் தேர்வு
 

இரண்டு நிறுவனங்கள் தேர்வு

இந்த திட்டத்தில் தான் 10 நிறுவனங்கள் மொத்தம் சுமார் 130 Gwh ஏலத்தினை சமர்ப்பித்துள்ளன. இந்த 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் வென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பேட்டரி திட்டத்தின் கீழ் ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா, அமாரா ராஜா, லார்சன் & டூப்ரோ, எல் & டி உள்ளிட்ட நிறுவனங்களும் இடம் பெற்றிருந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

அரசின் இலக்கு

அரசின் இலக்கு

அரசு 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா தன்னுடைய மொத்த ஆற்றல் உற்பத்தியில் 40% ஆற்றலை புதுபிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் மொத்த வாகனங்களில் 30 - 40% மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாகவும் இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஓலா, ரிலையன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ola Electric, reliance to get incentives under $2.4 billion battery scheme

Ola Electric, reliance to get incentives under $2.4 billion battery scheme/ஓலா, ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அரசின் சூப்பர் சலுகை.. இனி வேற லெவல்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X