அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை நிறுத்த போகும் ஒமிக்ரான்.. அப்போ இந்தியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனவிலும் கூட நினைத்திடாத வகையில் கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஹெல்த்கேர் கட்டமைப்பை தலைகீழாக புரட்டிப்போட்டது. இந்த பெரும் பாதிப்பில் தட்டுத்தடுமாறி ஒவ்வொரு நாடுகளாக மீண்டு வரும் வேளையில் கொரோனாவை விடவும் மோசமானது என கருதப்படும் ஒமிக்ரான் வைரஸ் தற்போது பரவி வருகிறது.

 

இன்று தொடங்கியுள்ள ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது சரியான சான்ஸ் தான்..!

ஒமிக்ரான் வைரஸ் கண்டு உலக நாடுகள் பயந்து இருக்கும் வேளையில் அமெரிக்காவின் பொருளாதாரம் stagflation நிலைக்கு தள்ளப்படும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவிற்கே இந்த நிலை என்றால் இந்தியாவுக்கு..?!

ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் மிகவும் அதிகப்படியான மியூடேஷன்களை கொண்டு உள்ளது. ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் கோவிட் வேக்சின் ஒமிக்ரான் வைரஸ்-ஐ எதிர்த்து போராடாது எனவும் கருத்து நிலவி வரும் வேளையில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் வைரஸ்-ஐ எதிர்த்து போராடும் மாற்று மருந்து கண்டுப்பிடிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த நிலையில் அமெரிக்காவின் நிதியியல் சந்தை அந்நாட்டு பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் அடையும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மோடசமான நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா
 

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் வேகத்தை பார்க்கும் போதும், 9 நாடுகளில் தற்போது பரவி உள்ளதை பார்க்கும் போதும் கடந்த சில மாதத்தில் உலக நாடுகளில் ஏற்பட்டு உள்ள இயல்பு நிலையை கட்டாயம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரான் வைரஸ் வேக்சின் பாதுகாப்பை தகர்த்து எறியும் எனவும், பரவுவதில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என பல முன்னணி நாடுகள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானத்திற்கு தடை அறிவித்துள்ளனர்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது ஆபத்தான முதலீடுகளை தொடர்ந்து விற்பனை செய்ய துவங்கியுவள்ளனர், இதனால் அமெரிக்க சந்தை துவங்கி ஆசிய சந்தை வரையில் தொடர்ந்து பங்குச்சந்தை சரிவடைந்து வருகிறது.

தங்கம்

தங்கம்

இந்த முதலீட்டு ஆபத்தை தீர்க்க முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கம் மற்றும் அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். மேலும் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரையில் சரிய துவங்கியுள்ளது.

Stagflation

Stagflation

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டது, தற்போது ஒமிக்ரான் வைரஸ் மூலம் பாதிப்பு அளவு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் குறையும் இதனால் Stagflation நிலை உருவாகும் என அலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுனரான

முகமது எல்-எரியன் தெரிவித்துள்ளார்.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

இந்த சூழ்நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பண கொள்கையை கட்டாயம் மாற்ற வேண்டும், தற்போதைய நிலையில் பணவீக்கம் தற்காலிகமானது இல்லை, பெடரல் ரிசர்வ் இதை முக்கியமானதாக கருத வேண்டும் என முகமது எல்-எரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Omicron can lead to stagflation in US, says top economist

Omicron can lead to stagflation in US, says top economist
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X