அச்சச்சோ.. இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவும், எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் ஒபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளன.

 

அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒபெக் என்ற எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடோர், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன.

அதிக சப்ளையை தடுக்க திட்டம்

அதிக சப்ளையை தடுக்க திட்டம்

சவுதி அரேபியா கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகளவிலான எண்ணெய் சப்ளையை தடுக்கவும், அதன் ஆதரவு விலையை தடுக்கவும் நோக்கமாகவும் கொண்டுள்ளனர். ஒபெக் நாடுகள், சவுதி உட்பட ஒரு நாளைக்கு 2.1 மில்லியன் பேரல்கள் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் அப்துலஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆயில் விலை 2 சதவிகிதம் உயர்ந்து, பேரலுக்கு 64 டாலராக வர்த்தமாகியது.

உற்பத்தியை குறைக்க திட்டம்

உற்பத்தியை குறைக்க திட்டம்

எனினும் மற்றொரு புள்ளிவிவர அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1.7 மில்லியன் பேரல்கள் இலக்கு என்றும், உலகளாவிய தேவையில் 1.7 சதவிகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் சவுதி மட்டும் ஒரு நாளைக்கு கணிசமான அளவு குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாற்றம் எதுவும் இருக்காது
 

மாற்றம் எதுவும் இருக்காது

எனினும் சவுதியின் இந்த குறைப்பு இலக்கானது எண்ணெய் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஓபெக், உலகளவில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக எண்ணெய் செலுத்துகிறது. எனினும் மிக பெரிய உற்பத்தியாளாரான அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கவும் வாய்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ஒபெக் கூட்டம்

ஒபெக் கூட்டம்

எனினும் இந்த ஒபெக் அமைப்பின் அடுத்த கூட்டம் மார்ச் மாத தொடக்கத்தில் இருக்கலாம் எனவும் அப்துலஜிஸ் ஓபெக் கூறியுள்ளார். மேலும் இந்த 5 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில், ஒபெக் நாடுகள் 3,72,000 பேரல்களும், மீதம் 1,31,000 பேரல்கள் ஒபெக் அல்லாத அல்லாத மற்ற நாடுகளும் உற்பத்தியை குறைக்கலாம் என்றும் ஒபெக் அறிவித்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இதனால் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு இது வழி வகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை பொறுத்தவரையில் அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆக சர்வதேச அளவில் விலையேற்றம் காணும் போது, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

OPEC oil producers plan to cut 5 lakh barrel per day productions

OPEC oil producers plan to cut 5 lakh barrel per day productions. it may supported crude oil prices in futures.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X