பேடிஎம் முதலீட்டாளர்களுக்குக் குட்நியூஸ்.. 850 கோடி ரூபாய் பைபேக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேடிஎம்-ன் இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை சுமார் 850 கோடி ரூபாய் மதிப்பிலான பேடிஎம் பைபேக் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் பேடிஎம் பங்குகள் 538.40 ரூபாய்க்கு முடிந்த நிலையில், இந்தப் பேடிஎம் பைபேக் திட்டத்தில் சுமார் 50 சதவீத பிரீமியம் விலையில் சந்தையில் இருக்கும் பேடிஎம் பங்குகளைப் பேடிஎம் நிர்வாகம் பங்குகளை வாங்க உள்ளது.

இதன் மூலம் பேடிஎம் பைபேக் திட்டத்தில் ஒரு பங்கை அதிகபட்ச விலையாக 810 ரூபாய்க்குப் பேடிஎம் நிர்வாகம் வாங்க உள்ளது.

5 லட்சம் வரை வருமான வரி ரத்து.. பட்ஜெட் 2023ல் இதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்..! 5 லட்சம் வரை வருமான வரி ரத்து.. பட்ஜெட் 2023ல் இதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

One97 கம்யூனிகேஷன்ஸ்

One97 கம்யூனிகேஷன்ஸ்

One97 கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை பேடிஎம் பங்குகளை அதிகப்படியாக 810 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்த நிலையில் சுமார் 850 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்க உள்ளது. பைபேக் வரிகள் உடன் சேர்த்தால் மொத்தச் செலவு சுமார் 1,048 கோடி ரூபாய் மேல் செலவு செய்து பேடிஎம் இந்த மாபெரும் பைபேக் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

பேடிஎம்

பேடிஎம்

பேடிஎம் நிறுவனத்தின் பைபே காலம் முடியும் வரை, நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் பங்குகளை விற்க கூடாது. இதனால் பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ-வா விஜய் சேகர் ஷர்மா, நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் குழு CFO மதுர் தியோரா ஆகியோர் பங்கு விற்பனை செய்யமாட்டார்கள் என்று பேடிஎம் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விஜய் சேகர் ஷர்மா

விஜய் சேகர் ஷர்மா

பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா கூறுகையில், இந்தக் காலகட்டத்தில் பேடிஎம் பங்குகளைத் திரும்பப் பெறுவது எங்கள் பங்குதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நீண்டகாலப் பங்குதாரர் மதிப்பை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பைபேக் அளவு

பைபேக் அளவு

31 மார்ச் 2022 நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனம் மற்றும் இலவச இருப்புகளில் 10% க்கும் குறைவாகவே பைபேக் அளவு உள்ளது என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பைபேக் அளவு மற்றும் அதிகபட்ச பைபேக் விலையின் அடிப்படையில், பேடிம் நிறுவனம் குறைந்தபட்சம் 5,246,913 பங்குகளைச் சந்தையில் இருந்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.

பேடிஎம் ஐபிஓ

பேடிஎம் ஐபிஓ

பேடிஎம் நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புடன் மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு வரலாற்றுச் சாதனை படைக்கத் தயாரானது, ஆனால் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்தது மூலம் முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டனர்.

பேடிஎம் பங்கு விலை

பேடிஎம் பங்கு விலை

இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம்-ன் இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 1.83 சதவீதம் அதிகரித்து 538.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டில் மட்டும் 60 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து சுமார் 65.50 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. உங்க கணக்கில் 147.5 ரூபாய் கழிக்கப்பட்டு உள்ளதா..? எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. உங்க கணக்கில் 147.5 ரூபாய் கழிக்கப்பட்டு உள்ளதா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm board approves buyback plan worth of 850 crore

Paytm board approves buyback plan worth of 850 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X