1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது இந்தப் பணிநீக்கம் பிற துறைகளையும் கடுமையாகப் பாதிக்கத் துவங்கியுள்ளது.

இதன் முதல் கட்டமாக மருத்துவ உபகரணத் தயாரிப்பில் முன்னோடியாக, லைப்ஸ்டைல் மற்றும் அப்லையன்சஸ் ஆகிய பிரிவில் வர்த்தகம் செய்யும் Philips நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை மட்டும் அல்லாமல் பணிநீக்க அறிவிப்புகளையும் வெளியிட உள்ளது.

பிலிப்ஸ் நிறுவனம் அடுத்த சில நாட்களில் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில் இந்தச் செய்து இந்நிறுவன ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

600 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO போட்ட குண்டு.. ஊழியர்கள் அதிர்ச்சி..! 600 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO போட்ட குண்டு.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

பிலிப்ஸ்

பிலிப்ஸ்

மருத்துவ உபகரணத் தயாரிப்பு நிறுவனமான Philips இதற்கு முன்பே சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், நிறுவனத்தில் புதிதாகச் செயல்படுத்த உள்ள மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக அதன் நான்காவது காலாண்டு முடிவுகளை ஜனவரி 30 அன்று அறிவிக்கப்படும் நிலையில், இதில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிலிப்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் அதே நகரத்தில் இயங்கி வரும் Eindhovens Dagblad என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பிலிப்ஸ் நெதர்லாந்து நாட்டில் மட்டும் சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

பணிநீக்கம்
 

பணிநீக்கம்

இந்தப் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை ஜனவரி 30ஆம் தேதி காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுவதால் பிலிப்ஸ் இதுகுறித்து எவ்விதான அதிகாரப்பூர்வ விளக்கத்தைக் கொடுக்கவில்லை.

பங்கு விலை

பங்கு விலை

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து பிலிப்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் 70% குறைந்துள்ளது. இந்தப் பெரும் சரிவுக்கு முக்கியமான காரணம் பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாச சாதனங்களைக் கோளாறு காரணமாகத் திரும்பப் பற்றுவதாக அறிவித்த நிலையில் பங்கு விலை சரிந்துள்ளது.

4000 ஊழியர்கள்

4000 ஊழியர்கள்

பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தனது மொத்த உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதம் அல்லது 4000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததிருந்தது. இதைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.

புதிய சிஇஓ

புதிய சிஇஓ

பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான ராய் ஜேக்கப்ஸ் திங்களன்று வருவாய் மற்றும் லாப அளவுகளை வெளியிடும் வேளையில் நிறுவனத்திற்கான தனது மூலோபாயத் திட்டத்தை வகுக்க உள்ளார்.

பிலிப்ஸ் நிறுவன லாபம்

பிலிப்ஸ் நிறுவன லாபம்

2021 ஆம் ஆண்டின் டிசம்பர் காலாண்டில் பிலிப்ஸ் நிறுவனம் 507 மில்லியன் யூரோ லாபத்தைப் பதிவு செய்த நிலையில் தற்போது 140 மில்லியன் யூரோ வரையிலான லாபத்தை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Philips plans to layoff 1000 employees in Netherlands

Philips plans to layoff 1000 employees in the Netherlands
Story first published: Saturday, January 28, 2023, 18:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X