கணவருக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கும் மனைவி.. வியக்க வைக்கும் பூனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் வர்த்தகத் துறையில் பெண்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள், குறிப்பாக வல்லரசு நாடுகளில் பெண்கள் உயர் பதவிகளில் மட்டும் அல்லாமல், தலைவர் பதவிகளிலும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஸ்டார்ட்அப் துறையில் பெண்கள் அதிகப்படியான நிறுவனங்களை நிறுவி அசத்தி வருகிறார்கள்.

இதில் ஒருவர் தான் பூனம் குப்தா, வர்த்தக உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்குப் பூனம் குப்தா ஒரு சிறப்பான இன்ஸ்பிரேஷன் என்றால் மிகையில்லை.

Gleeden: திருமணத்திற்குப் பின் டேட்டிங்.. அலைமோதும் இந்தியர்கள்..! Gleeden: திருமணத்திற்குப் பின் டேட்டிங்.. அலைமோதும் இந்தியர்கள்..!

பூனம் குப்தா

பூனம் குப்தா

பூனம் குப்தா 2002 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஸ்காட்லாந்து நாட்டுக்குக் குடிபெயர்ந்தார், பின்னர் இந்தியாவுக்கு வரவே இல்லை. ஸ்காட்லாந்து நாட்டில் தற்போது 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வியக்க வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

பெண் தொழில்முனைவோர்

பெண் தொழில்முனைவோர்

இந்த நிலையில் தான் பூனம் குப்தா இங்கிலாந்தின் சிறந்த பெண் தொழில்முனைவோர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் NRI தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பூனம் குப்தா சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இந்தச் சந்திப்பில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

கணவருக்கு அழைப்பு
 

கணவருக்கு அழைப்பு

பூனம் குப்தா ஒருமுறை தன் கணவனிடம் தன்னுடைய பிஸ்னஸ்-ல் சேரும்படி கேட்டாள், அதற்கு அவருடைய கணவர், தான் ஈட்டும் சம்பளத்தை உன்னால் கொடுக்க முடியாது என்று தன்னிடம் கூறியதாக இந்த NRI நிகழ்ச்சியில் கூறினார்.

1.5 கோடி ரூபாய் சம்பளம்

1.5 கோடி ரூபாய் சம்பளம்

மேலும் பூனம் குப்தா பேசுகையில் அவரது கணவரின் அப்போதைய சம்பளம் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய். பூனம் குப்தா தனது பிஸ்னஸ்-ஐ மேம்படுத்திக் கொண்டு பெரிய அளவில் வளர்ந்த நிலையில் தற்போது அவரது கணவருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளத்தில் அவருடைய நிறுவனத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

2002ல் திருமணம்

2002ல் திருமணம்

2002 ஆம் ஆண்டில் பூனம் குப்தா, ஸ்காட்லாந்தில் பணிபுரிந்து வந்த புனித் குப்தா-வை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தார். பூனம் குப்தா எம்பிஏ பட்டம் பெற்றிருந்தார், ஆனால் அவருக்கு அனுபவம் இல்லாததால் அவருக்கான வேலைவாய்ப்பு ஸ்காட்லாந்தில் கிடைக்கவில்லை.

சொந்த தொழில்

சொந்த தொழில்

பின்னர் பூனம் குப்தா சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆராய்ச்சியின் போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் சிறந்த தயாரிப்புகளை விற்க வேண்டும் என்பதற்காக டன் கணக்கில் ஸ்கிராப் பேப்பரை தூக்கி எறிவதைக் கண்டார். இந்தக் காகிதங்களை அப்புறப்படுத்த இந்த நிறுவனங்கள் பல கோடிகளை ஒவ்வொரு வருடமும் செலவழிக்கிறது.

ஸ்கிராப் காகிதம்

ஸ்கிராப் காகிதம்

இந்த ஸ்கிராப் காகிதத்தை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை 10 மாத தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு பூனம் குப்தா தெரிந்துகொண்டால். பின்னர் இத்தாலி, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடமிருந்து பழைய காகிதங்களை வாங்கத் தொடங்கினார்.

இத்தாலிய நிறுவனம்

இத்தாலிய நிறுவனம்

பூனம் குப்தா-வின் முதல் வாடிக்கையாளர் ஒரு இத்தாலிய நிறுவனம், தான் வாங்கிய ஸ்கிராப் பேப்பருக்கு பின்பு பணம் தருவதாக நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்தப் பேப்பர் அந்த நிறுவனத்திற்குத் தலைவலி என்பதால் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவுக்கு ஏற்றுமதி

இந்தியாவுக்கு ஏற்றுமதி

இதற்கிடையில் பூனம் குப்தா ஏற்கனவே இந்தியாவில் இந்த ஸ்கிராப் பேப்பரை வாங்குபவரைக் கண்டுபிடித்தார். தனது முதல் ஒப்பந்தத்தில் இரண்டு கன்டெய்னர் மதிப்புள்ள காகிதங்களுக்கு ஈடாக 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினார்.

பிஜி பேப்பர்

பிஜி பேப்பர்

இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் தொடர்ந்து பணம் சம்பாதித்து வந்த பூனம் குப்தா 2004 ஆம் ஆண்டில், அவர் ஸ்காட்லாந்தில் பிஜி பேப்பர் என்ற நிறுவனத்தைப் பதிவு செய்தார். இந்த வர்த்தகத்தில் லாபம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டு இருந்தது.

பார்ட்னர் தேவை

பார்ட்னர் தேவை

இந்தப் பயணத்தில் பங்கு கொள்ள ஒரு பார்ட்னர் தேவைப்பட்ட நிலையில் அவருடைய கணவர் புனீத்-தை பிஸ்னஸ்-ல் சேர சொல்லி கேட்டார் பூனம் குப்தா. அப்போதுதான் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அந்தப் பணத்தைப் பூனம் வர்த்தகத்தால் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

6 மாதம்

6 மாதம்

ஆறு மாதங்களுக்குப் பகுதி நேரமாக நிறுவனத்தில் சேரச் சொன்னாள். புனித் 6 மாதங்கள் பணிபுரிந்தார், பின்னர் அவருடன் முழுநேர பணியில் சேர ஒப்புக்கொண்டார். பூனம் குப்தா தனது கணவருக்கு 1.50 கோடி ரூபாயை சம்பளமாக வழங்கியுள்ளார்.

வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

பின்னர் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து தங்கள் தொழிலை விரிவுபடுத்தினர். இந்தக் கூட்டணியில் ஸ்கிராப் பேப்பர் தாண்டி அவர்கள் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி வணிகங்களிலும் வர்த்தகத்தைத் துவங்கினர்.

1,000 கோடி ரூபாய்

1,000 கோடி ரூபாய்

இந்தத் தடாலடி வளர்ச்சி மூலம் அவர்களது நிறுவனத்தின் நிகர மதிப்பு 1,000 கோடி ரூபாயை தாண்டியது. தற்போது இருவரும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

9 நிறுவனங்கள்

9 நிறுவனங்கள்

பூனம் குப்தா மற்றும் புனித் குப்தா தற்போது 9 நிறுவனங்களைச் சொந்தமாக வைத்துள்ளனர், 7 நாடுகளில் அலுவலகங்களைக் வைத்து பல துறையில் வர்த்தகம் செய்து வருகின்றனர். பூனம் குப்தா தனது வீட்டில் இருந்து தான் தொழிலைத் தொடங்கினார். 2015 முதல் பூனம் குப்தா நிறுவனத்தின் தலைமையகம் ஸ்காட்லாந்தின் கிரீனாக்-ல் உள்ளது.

நிறுவன பட்டியல்

நிறுவன பட்டியல்

இப்போது அவர் பூனம் குப்தா நிர்வாகத்தின் கீழ் PG வேர்ல்ட், SAPP ஹோல்டிங்ஸ், SAPP இன்டர்நேஷனல், SAPP பிராப்பர்ட்டி, EnVisage டெண்டல் ஹெல்த், புனவ் போன்ற நிறுவனங்கள் உள்ளது.

60 மில்லியன் பவுண்டு வருவாய்

60 மில்லியன் பவுண்டு வருவாய்

பூனம் குப்தா-வின் நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 60 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டி வருகிறது. அவர் 60 நாடுகளில் வர்த்தகம் செ்து வருவது மட்டும் அல்லாமல் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஸ்வீடன், துருக்கி ஆகிய நாடுகளில் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன.

பூனம் குப்தா கல்வி

பூனம் குப்தா கல்வி

பூனம் குப்தா டெல்லியில் உள்ள SRCC-யில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார், பின்னர் Holland-ல் உள்ள மாஸ்ட்ரிக்ட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் MBA பட்டம் பெற்றார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

 விராட் கோலி-யின் ரூ.13 கோடி ஆடம்பர வீடு.. பயங்கரமா இருக்கே..! விராட் கோலி-யின் ரூ.13 கோடி ஆடம்பர வீடு.. பயங்கரமா இருக்கே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Poonam Gupta: NRI businesswoman gives 1.5 crore salary to her husband

Poonam Gupta: NRI businesswoman gives 1.5 crore salary to her husband
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X