ஆர்பிஐ கடிதத்தில் இருந்தது 'இது'தான்.. 3 முக்கிய பாயின்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.90 சதவீதமாக அறிவித்தார்.

 

இதைத் தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி அமெரிக்கப் பெடரல் வங்கி 0.75 சதவீத வட்டியை உயர்த்தியது. இவை அனைத்திற்கும் முக்கியமான காரணம் பணவீக்கம்.

இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 3 ஆம் தேதி கூட்டத்தை ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் நடக்கிறது. 9 மாதங்களாகப் பணவீக்கத்தைக் குறைக்க முடியாமல் தோல்வி அடைந்த காரணத்தால் ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் இக்கூட்டம் நடந்தது.

மீண்டும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயருமா? ஆர்பிஐ நாணய கொள்கை அறிவிப்பு இன்று! மீண்டும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயருமா? ஆர்பிஐ நாணய கொள்கை அறிவிப்பு இன்று!

MPC குழு உறுப்பினர்கள்

MPC குழு உறுப்பினர்கள்

இன்று நடந்த கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் MPC குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மைக்கேல் தேபப்ரதா பத்ரா, ராஜீவ் ரஞ்சன், ஷஷாங்கா பிடே, அஷிமா கோயல் மற்றும் ஜெயந்த் ஆர். வர்மா ஆகியோர் கலந்து கொண்டதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி-யின் நாணய கொள்கை குழு இன்று முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு, ஏன் பணவீக்க இலக்கை அடையவில்லை என்பதை விளக்கும் கடிதத்தை அனுப்புவதற்காகவே கூடியுள்ளது. மாலை இக்கூட்டம் முடிந்த பின்பு ஆர்பிஐ எதற்காக இக்கூட்டம் கூடியது என்பதை விளக்கியுள்ளது.

 3 பாயின்ட்
 

3 பாயின்ட்

இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கடந்த 9 மாதத்தில் ஏன் நாட்டின் ரீடைல் பணவீக்கத்தை அதன் 2 - 6 சதவீத இலக்கில் வைக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையும், இதைச் சரி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் பட்டியலையும், எப்போது பணவீக்க இலக்கை அடைய முடியும் என்பதற்கான கால அளவீட்டையும் விளக்கம் அடங்கிய அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த 3 பாயின்ட் தான் இன்றையக் கூட்டத்தின் முக்கியமான விஷயமாக உள்ளது.

ஒரு மாதம்

ஒரு மாதம்

பணவீக்க இலக்கை ரிசர்வ் வங்கி அடையத் தவறிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் விளக்க அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே, செப்டம்பர் மாத பணவீக்கம் அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டதால் நவம்பர் 12ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2016-க்குப் பின் முதல் முறை

2016-க்குப் பின் முதல் முறை

பணவீக்க இலக்கை 9 மாதமாக மிஸ் செய்யக் காரணத்திற்காக 45ZN பிரிவின் கீழ் விளக்க அறிக்கை ஆர்பிஐ மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது. இந்தியாவில் flexible inflation-targeting regime 2016ல் கொண்டு வந்த பின் முதல் முறையாக இப்படி விளக்க அறிக்கை அளிக்கிறது ஆர்பிஐ.

செப்டம்பர் மாதம் பணவீக்கம்

செப்டம்பர் மாதம் பணவீக்கம்

2022ல் சுமார் 9 மாதம் அதாவது 3 காலாண்டில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஆர்பிஐ-யின் 6 சதவீத இலக்கிற்கு அதிகமாகவே உள்ளது. செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.4 சதவீதமாக இருந்தது. ஆர்பிஐ பணவீக்க இலக்கு 4-6 சதவீதமாகும், கொரோனாவுக்கு முன்பு சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்குக் கீழ் இருந்தது.

மக்களுக்கு அறிக்கை

மக்களுக்கு அறிக்கை

இன்றைய கூட்டத்தில் சில்லறை பணவீக்கத்தை 6 சதவீதத்திற்குக் கீழ் கொண்டு வருவதற்கான ப்ளூபிரின்ட் தான் இன்று மத்திய அரசுக்கு அளித்து உள்ளது. 45ZN பிரிவின் கீழ் ஆர்பிஐ கூட்டம் மத்திய அரசுக்கு விளக்க அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே, மத்திய அரசுக்குக் கொடுத்த விளக்க அறிக்கையை வெளியிடுவது கட்டாயம் இல்லை. ஆனால் சக்திகாந்த தாஸ் சிறிது காலத்தில் மக்களுக்கு வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI MPC meet: Draft of inflation miss report submitted to government, says RBI

RBI Monetary Policy Committee meet ends evening, RBI draft of inflation miss report submitted to Modi government says RBI in report. A separate meeting of the Monetary Policy Committee (MPC) was held on November 3, 2022 to discuss and draft the report to be sent to the Government by the Reserve Bank of India (RBI) under the provisions of Section 45ZN of the RBI Act, 1934 and Regulation 7 of RBI MPC and Monetary Policy Process Regulations, 2016.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X