30 நாளில் 2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரும் அசைக்க முடியாத வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா பாதிப்பால் வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 2.05 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது.

Recommended Video

2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..!

ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் பணிநீக்கம், விசா பிரச்சனை, கிரீன் கார்டு பிரச்சனை, நாட்டைவிட்டு வெளியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தகவல்கள் இன்னும் மோசமான நிலையை உருவாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

ஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..!ஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..!

வேலைவாய்ப்பு துறை

வேலைவாய்ப்பு துறை

அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் துறை, அந்நாட்டு வேலைவாய்ப்பு சந்தையை மிகவும் கவனமாகக் கவனித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 14.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது போர் நிறைந்த நவம்பர் 1982ஆம் ஆண்டில் கூட 10.8 சதவீதமாகத் தான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பணிநீக்கம்

பணிநீக்கம்


மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு விதித்தது மட்டும் அல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாகத் தான் நிறுவனங்கள் வர்த்தகத்தை மூடவும், வேலைவாய்ப்புகளை இழக்கவும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இழக்கும் மக்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

மீளும் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை

மீளும் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை

ஆனால் கடந்த ஒரு வாரத்தில் சில வர்த்தகங்கள் இயங்க துவங்கிய நிலையில், வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் மேம்படும் எனத் தெரிகிறது. ஆனால் இந்தப் பிரச்சனை டொனால்டு டிரம்ப்-இன் அடுத்த ஆட்சிக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்க மக்கள் தற்போது சந்தித்திருக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பும், கொரோனா தாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் டிரம்ப் அரசு எடுத்த மெத்தனமான நடவடிக்கையும், கொரோனா குறித்த அவரது பேச்சு அனைத்தும் அமெரிக்க மக்களைக் கடுமையான பாதித்துள்ளது.

இதனால் டொனால்டு டிரம்ப் அடுத்த முறை ஆட்சி பிடிப்பது மிகவும் கடினம் எனக் கருத்து நிலவுகிறது.

 

கொரோனா

கொரோனா

நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் சுமார் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 76,000 பேர் கொரோனா தொற்றின் காரணமாக மரணம் அடைந்துள்ளனர்.

இந்த மோசமான சூழ்நிலையில் டிரம்ப்-க்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்களா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Record 20.5 million American jobs lost in April, unemployment rate rose to 14.7%

The US economy lost 20.5 million jobs in April due to coronavirus pandemic, the steepest plunge since the Great Depression, the Labor Department said. The unemployment rate surged to 14.7% last month, higher than the post-World War II record of 10.8% in November 1982.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X