காலையிலேயே வந்த செய்தி.. அடிவாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்! காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமேசான் நிறுவனத்துடனான மோதலில் லோசான சரிவு ஏற்பட்ட காரணத்தால் இன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன.

 

இந்தியாவின் சில்லறை வணிகத்தில் சாம்ராஜ்யத்தை பரப்ப விரும்பும் அமேசானுக்கும், அம்பானியின் ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் இடையே வணிக போட்டி ஏற்பட்டுள்ளது.

காலையிலேயே வந்த செய்தி.. அடிவாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்! காரணம் என்ன?

இரு நிறுவனங்களுமே பியூச்சர் கார்ப் சில்லறை வணிக நிறுவனத்தின் பியூச்சர் கூப்பனை வாங்க திட்டமிட்டன. இதில் முதலில் திட்டமிட்டு வாங்கியது அமேசான். அந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை சுமார் 1500 கோடிகள் கொடுத்து வாங்கியது. அதேநேரம் பியூச்சர் கார்ப் நிறுவனம் தனது பங்குகளில் குறிப்பிட்டவற்றை 24,713 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமேசான் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில், பியூச்சர் குழு தனது சில்லறை வணிக்கத்தினை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 3.38 பில்லியன் டாலர் பங்குகளை விற்க தடை விதித்துள்ளது. இந்த தடை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை சரிவை கண்டன.

இஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு?

இன்று காலை அமோசான் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு குறித்த செய்தி வந்ததுமே பங்குகள் விலை சரிவை கண்டன. ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் (பிஎஸ்இ) 20101.00 ஆக ஆரம்பித்தது. முதல் நாள் 2113.55 ஆக முடிந்திருந்தது. இந்நிலையில் இன்று காலை பங்கு விற்பனை தொட்ங்கியதுமே சரசரவென சரிந்தது. ஒருமுறை கூட மேலே ஏறவில்லை.2028 வரை சரிந்ததது. அதன்பிறகு இறுதியில் 2028.70 ஆக நிறைவு பெற்றது. அதாவது சுமார் 3.97 சதவீதம் சரிந்தது. இன்று மட்டும் பிஎஸ்இயில் 83.85 ரூபாய் அளவுக்கு சரிந்தது.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டியிலும் இதேபோன்றே சரிந்தது.இறுதியில் 2029.10 ஆக முடிந்தது. இன்று மட்டும் 83.95 ரூபாய் சரிந்தது. கடந்த 10 நாளில் 282 ரூபாய் அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை சரிந்துள்ளது,

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance industries ltd share price falls 4 present today

Shares of Reliance Industries NSE -3.97 % (RIL) dropped in Monday's session as clouds of doubts emerged over its deal to acquire Future Group’s businesses.
Story first published: Monday, October 26, 2020, 16:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X