கொரோனா ரன களத்திலும் மனித நேயம்.. வாரி வழங்கிய முகேஷ் அம்பானி.. கூட பல அதிரடி சலுகைகளும் உண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கொரோனாவின் ரன களமான இந்த நேரத்திலும் கூட, மனித நேயத்துடன் மிக்க மனிதர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது முகேஷ் அம்பானியின் இந்த செயல்.

தான் ஒரு சிறந்த பிசினஸ் மேன் மட்டும் அல்ல, சிறந்த மனிதர் என்பதையும் இதன் மூலம் மக்களுக்கு முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் பரவி வருகிறது. அதன் உக்கிரம் மக்களை ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதார ரீதியிலும் பெரும் பிரச்சனைக்கு கொண்டு சென்றுள்ளது.

கொரோனாவுக்காக பிரத்யேக மருத்துவமனை
 

கொரோனாவுக்காக பிரத்யேக மருத்துவமனை

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், மும்பையில் கொரோனா வைரஸூக்கு என பிரத்யேக மருத்துவமனையை மும்பை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது மாசு பாட்டை குறைக்க உதவுவதோடு தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் பவுன்டேஷன் ஹாஸ்பிட்டல்

ரிலையன்ஸ் பவுன்டேஷன் ஹாஸ்பிட்டல்

மும்பை Sir HN Reliance Foundation Hospital என்ற மருத்துவமனை, மும்பை பிரஹன் மும்பை மாநகராட்சியுடன் இணைந்து (Brihan mumbai Municipal Corporation) உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் 100 படுக்கைகள் வசதி கொண்ட, கொரோனா நோய் சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் பவுன்டேஷன் தான் நிதி

ரிலையன்ஸ் பவுன்டேஷன் தான் நிதி

இந்த மருத்துவமனை முழுமையாக ரிலையன்ஸ் பவுன்டேஷன் மூலம் நிதியளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் இந்த மருத்துவனையில் முறையான வென்டிலேட்டர்கள், மற்ற உயிரியல் மருத்துவ உபகரணங்கள் என பல வகையான உபகரணங்கள் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல சிறப்பம்சங்களைக் கொண்ட மருத்துவமனை
 

பல சிறப்பம்சங்களைக் கொண்ட மருத்துவமனை

மும்பையில் உள்ள உலகத் தரம் வாய்ந்த சுகாதார நிறுவனமான Sir HN Reliance Foundation Hospital, கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளை தனிமைப்படுத்தவும், பல சிறப்பு மருத்துவ வசதிகளையும் உபகரணங்களையும் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் அவசரகால வாகனங்களுக்கு இலவச எரிபொருள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் இரு முறை சம்பளம்

மாதம் இரு முறை சம்பளம்

இது தவிர இந்த நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வரும் வேலை நிறுத்தப்பட்டாலும், தொடர்ந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. மேலும் இந்த நெருக்கடியின் மத்தியிலும் கூட பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், 30,000க்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு, அதிகமான நிதித் சுமையை குறைக்க மாதம் இருமுறை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு நிதி

மகாராஷ்டிராவுக்கு நிதி

மேலும் கொரோனா நோயின் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய் ஆரம்பகால நிதியினை அறிவித்துள்ளது. இது தவிர இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட பேஸ் மாஸ்க்குகள் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான உற்பத்தி திறனை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு உபகரணங்கள்

இது தவிர நாட்டில் கொரோனாவுடன் எதிர்த்து போராடி வரும் சுகாதார ஊழியர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம்போல மக்களின் பயன்பாட்டிற்காக 736 எப்போதும் போல காய்கறிகள், பழங்கள், பிரெட் என அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

எப்படியோங்க இந்த மோசமான சூழ்நிலையில் இப்படி ஒரு மனித நேயம் இருப்பது மிக நல்ல விஷயமே. ஹேட்ஸ் ஆப் யு சார்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance industries sets up India’s first dedicated hospital and many announcement to support coronavirus outbreak

Reliance Industries said that it has set up India's first coronavirus dedicated hospital in Mumbai that includes a negative pressure room that helps in preventing cross-contamination and helps to control infection. also RIL said that it will continue to pay its contract and temporary workers, even if work has halted due to the coronavirus pandemic
Story first published: Tuesday, March 24, 2020, 19:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more