ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எடுத்த அதிரடி முடிவு.. நாளை உரிமைப் பங்கு வெளியீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெரிய அளவிலான முதலீடுகளை திரட்டி வருகிறது.

 

இது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு துறை வரை, தனித்துவ இடத்தினை பிடித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் மே 20 முதல் உரிமை பங்கு வெளியீட்டினை தொடங்க உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எடுத்த அதிரடி முடிவு.. நாளை உரிமைப் பங்கு வெளியீடு..!

இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் மே 15ல் நடைபெற்றது. இதில் இந்த நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டை மே 20ம் தேதியிலிருந்து ஜூன் 3 வரையில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் படி நாளை தொடங்கி ஜூன் 3 வரையில் முடிவடையவுள்ள உரிமை பங்கு வெளியீடு மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 53,125 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு 1:15 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இந்த உரிமைப் பங்குகள் வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

அதோடு ஏப்ரல் 30ல் நிறைவடைந்த விலையில் 14 சதவீத தள்ளுபடியுடன் 1,257 ரூபாய் என்ற விலையில், ஒவ்வொரு 15 பங்குகளுக்கும், ஒரு உரிமைப் பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த உரிமை பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக இந்த நிறுவனம் அதன் பங்கு விற்பனை மூலம் 67,194.75 கோடி ரூபாய் நிதி திரட்டியது. ரிலையன்ஸ் ஜியோவில் 14% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம், சில்வர் லேக் பாட்னர்ஸ், விஸ்டா நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஒரு மாத காலத்துக்குள் முதலீடு செய்துள்ளன.

ஆஹா.. சீனாவுக்கு இப்படி ஒரு புதிய சிக்கலா! அமெரிக்காவின் புதிய திட்டம்!

இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 9.99% பங்குகளை 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதே ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34% பங்குகளுக்கு 6,598.38 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே சில்வர் லேக் நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்திற்கு சுமார் 5,656 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

இதே விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது. இதன் மூலம் 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்யதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rights issue of mukesh ambani RIL to open on may 20

Mukesh Ambani’ s Reliance Industries fundraising spree despite the covid-19 pandemic, is set to open its massive Rs.53,215 crore rights issue on Wednesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X