கல்வித் துறையிலும் கலக்க போகும் ஜியோ இன்ஸ்டிட்யூட்.. இந்த ஆண்டில் தொடங்கலாம்.. நீதா அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிக பரபரப்பான அறிவிப்புகளை இன்று ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிவித்தது. இந்த கூட்டத்தில் பேசிய நீதா அம்பானி ஜியோ இன்ஸ்டிட்யூட் பற்றிய அறிவிப்பினையும் கொடுத்துள்ளார்.

 

இது நடப்பு ஆண்டில் தனது நடவடிக்கைகளை தொடங்கலாம் என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி கூறியுள்ளார்.

நாங்க எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா.. சாதனைகளைப் பட்டியலிடும் முகேஷ் அம்பானி..! நாங்க எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா.. சாதனைகளைப் பட்டியலிடும் முகேஷ் அம்பானி..!

கொரோனா பெருந்தொற்று இருந்து வரும் இந்த காலக்கட்டத்திலும் தயாராகி வரும் ஜியோ இன்ஸ்டிட்யூட், இந்த ஆண்டு கல்வி அமர்வுகளை தொடங்க தயாராக உள்ளது.

 ஜியோ இன்ஸ்டிட்யூட் கனவு திட்டம்

ஜியோ இன்ஸ்டிட்யூட் கனவு திட்டம்

இந்த சவாலான நேரத்திலும் எங்களின் கனவு திட்டமான ஜியோ இன்ஸ்டிட்யூட்டினை, உயிர்பிக்க நாங்கள் மிக கடினமாக உழைத்துள்ளோம். உலகத் தரம் வாய்ந்த, முன்மாதிரியான கல்வித் தளமாக ஜியோ இன்ஸ்டிட்யூட் இருக்கும். இது உலகளாவிய தலைவர்களை தயார்படுத்தும் என்றும் தனது உரையில் கூறியுள்ளார்.

முதல் ஆண்டில் திட்டம்

முதல் ஆண்டில் திட்டம்

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்ட ஜியோ இன்ஸ்டிட்யூட், மகராஷ்டிராவின் நவி மும்பையில் 52 ஏக்க நிலத்திலும், 3,60,000 சதுர அடியிலும் பரவியிருக்கும். இந்த அமைப்பு முதல் கல்வியாண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), டேட்டா சயின்ஸ் (data science) மற்றும் டிஜிட்டல் மீடியா (digital media), இளங்கலை பட்டாதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் (integrated marketing communication) உள்ளிட்ட பல திட்டங்களை முன்மொழிந்துள்ளது.

கல்வி உதவித் தொகை
 

கல்வி உதவித் தொகை

ரிலையன்ஸ் அறக்கட்டளையானது இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளுக்கு உதவித்தொகையும் வழங்கும் என தெரிவித்துள்ளார். முந்தைய அறிவிப்பில் 2021ம் ஆண்டு முதல் ஜியோ பல்கலைக்கழகம் செயல்பட ஆரம்பிக்கும். இந்த நிறுவனம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட உலகலாவிய ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 இதெல்லாம் மையமாகக் கொண்டிருக்கும்

இதெல்லாம் மையமாகக் கொண்டிருக்கும்

ஜியோ இன்ஸ்டிடியூட் மருத்துவம், கலைகள் மற்றும் விளையாட்டு மையமாகக் ஜியோ பல்கலைக் இருக்கும். இந்த பல்கலைக் கழகம் செயல்பாட்டிற்கு வராத முன்பே, கடந்த 2018ம் ஆண்டு சிறந்த பல்கலைக் கழகம் என்ற பெயரினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இது உலகளாவிய தரவரிசையில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL AGM 2021: Jio institute to start academic sessions this year

RIL AGM 2021 latest updates: Jio institute to start academic sessions this year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X