ரிலையன்ஸ் குழுமத்தில் இணையும் சவுதி அராம்கோ தலைவர்.. இரு ஜாம்பவான்களின் வெற்றிக் கூட்டணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ரிலையன்ஸ் குழுமத்தின் 44வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்து வருகின்றது.

வழக்கமாகவே இந்த வருடாந்திர கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பல அதிரடியான அறிவிப்புகளை கொடுக்கும். அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் சரவெடியாய் பற்பல அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன.

ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து ஓய்வுபெறும் திரிவேதி

ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து ஓய்வுபெறும் திரிவேதி

ரிலையன்ஸ் குழுமத்தின் மிகப்பெரிய தூணாக இருந்து வரும் ஓய்.பி திரிவேதி, ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றி கூறுவது எங்களின் கடமை. 1992ம் ஆண்டில் திருபாய் அம்பானியின் வேண்டுகோளின் பேரில், அவர் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தார்.

ரிலையன்ஸ் வளர்ச்சியில் முக்கிய பங்கு

ரிலையன்ஸ் வளர்ச்சியில் முக்கிய பங்கு

ஆக ரிலையன்ஸ் மற்றும் பங்குதாரர்கள் சார்பாக மிகப்பெரிய நன்றிகள். கிட்டதட்ட 30 ஆண்டுகளாக அவரது புத்திசாலிதனமான ஆலோசனைகள் மூலமாக ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். ஆக எங்களுடைய இதயத்தில் இருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். YP அங்கிள் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். தற்போது நீங்கள் 92 வயது இளைஞர். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கும் என முகேஷ் அம்பானி மனதார வாழ்த்தியுள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தில் இணையும் யாசி அல் ருமேயான்

ரிலையன்ஸ் குழுமத்தில் இணையும் யாசி அல் ருமேயான்


மற்றொரு முக்கிய அறிவிப்புகளில் ஒன்று ரிலையன்ஸ் குழுமத்தில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைவர் யாசி அல் ருமேயான் இணையவுள்ளது தான். இந்த இரு பெரும் ஜாம்பவான்களின் கூட்டணியானது, இன்னும் பற்பல மாற்றங்களை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து பேசிய முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுவில் சவுதி அராம்கோ தலைவர் இருப்பது சர்வதேசமயமாக்கலின் ஒரு தொடக்கம் என்றும் கூறியுள்ளார்.

ரிலையன்ஸின் அறிவிப்பு

ரிலையன்ஸின் அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோவுக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வணிகத்தில் 20% பங்குகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்குவதாக கடந்த 2019ம் ஆண்டிலேயே முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார். இது குறித்து அப்போது 75 பில்லியன் டாலர் மதிப்பும் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL AGM 2021: mukesh ambani announces Saudi aramco chairman yasir al – rumayyan to join RIL board

RIL AGM 2021 latest updates.. mukesh ambani announces Saudi aramco chairman yasir al – rumayyan to join RIL board
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X