இந்திய மக்களை காப்பாற்ற ரூ500 கோடி.. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், மிக வேகமாக பரவிவரும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிக் கிடக்கிறது.

Recommended Video

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி!

இந்த நிலையில் கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க தீவிர முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இதற்காக தேவையான நிதியினை, தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள், தனிநபர்கள் என பலரும் தங்களால் முடிந்ததை பிஎம் கேருக்கு கொடுத்து உதவுமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..!அப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உதவி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உதவி

இதையடுத்து பலரும் தங்களால் முடிந்தளவு நிதியினை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஏற்கனவே தான் ஒரு சிறந்த பிசினஸ் மேன் மட்டும் அல்ல, சிறந்த மனிதர் என்பதையும் நிரூபித்திருந்தார். எப்படி எனில் கொரோனா வைரஸ் தொற்றினை சமாளிக்க உதவும் வகையில், மும்பையில் கொரோனா வைரஸூக்கு என பிரத்யேக மருத்துவமனையை மும்பை நிறுவியது. இது மாசு பாட்டை குறைக்க உதவுவதோடு தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா மருத்துவமனை

கொரோனா மருத்துவமனை

உலக பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, Sir HN Reliance Foundation Hospital என்ற மருத்துவமனையை, கொரோனா வைரஸூக்காக 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டாக அமைத்துள்ளது. இது மும்பை பிரஹன் மும்பை மாநகராட்சியுடன் இணைந்து (Brihan mumbai Municipal Corporation) உருவாக்கப்பட்டதாகும்.

ரிலையன்ஸ் பவுன்டேஷன் தான் நிதி

ரிலையன்ஸ் பவுன்டேஷன் தான் நிதி

Reliance Foundation Hospital மருத்துவமனை முழுமையாக ரிலையன்ஸ் பவுன்டேஷன் மூலம் நிதியளிக்கப்படுவதாகவும், இது தவிர இந்த மருத்துவனையில் முறையான வென்டிலேட்டர்கள், மற்ற உயிரியல் மருத்துவ உபகரணங்கள் என பல வகையான உபகரணங்கள் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் அவசரகால வாகனங்களுக்கு இலவச எரிபொருளும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இரு முறை சம்பளம்

இரு முறை சம்பளம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த நெருக்கடியின் மத்தியிலும் கூட பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், 30,000க்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு, அதிகமான நிதித் சுமையை குறைக்க மாதம் இருமுறை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.

மகாராஷ்டிராவுக்கு நிதி

மகாராஷ்டிராவுக்கு நிதி

இப்படி ஒரு நிலையில் இந்தியாவில் அதிகளவு கொரோனா தாக்கத்திற்கு ஆளான மகாராஷ்டிராவுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய் ஆரம்பகால நிதியினை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. மேலும் பேஸ் மாஸ்க்குகள் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.

பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு உபகரணங்கள்

நாட்டில் கொரோனாவுடன் எதிர்த்து போராடி வரும் சுகாதார ஊழியர்களுக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல மக்களின் பயன்பாட்டிற்காக திறந்தே இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குஜராத்துக்கும் நிவாரண நிதி

குஜராத்துக்கும் நிவாரண நிதி

மகாராஷ்டிராவுக்கு அளித்தது போல குஜராத் மாநிலத்துக்கும் நிவராண நிதியாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது பிரதமரின் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் நிதியினை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இது தவிர ஏராளமான மக்களுக்கு 50 லட்சத்துக்கு அதிகமான உணவு மற்றும் பிற உதவிகளையும் செய்து வருவதாகவும், அடுத்து வரும் நாட்களுக்கும் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு உதவிகள்

பல்வேறு உதவிகள்

இது தவிர சுகாதார ஊழியர்களுக்கு தினசரி 1 லட்சம் பேஸ் மாஸ்குகள் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர 40 கோடி மக்களை இணைக்கும் விதமாக ஜியோ வீட்டில் இருந்து பணி புரியும் ஓர்க் பிரம் ஹோம் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனம் பல உதவிகளை செய்து வருகிறது.

ரிலையன்ஸின் ஆதரவு

ரிலையன்ஸின் ஆதரவு

இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, நாட்டில் நிலவி வரும் நெருக்கடியை இணைந்து வெல்வோம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் உங்களுடன் உள்ளது. மேலும் தேசம் கொரோனாவுடன் எதிர்த்து போராடி வெற்றி பெற எல்லாவற்றையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு ஆதரவளிப்போம்

மக்களுக்கு ஆதரவளிப்போம்

இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் நீட்டா அம்பானி இது குறித்து கூறுகையில், இந்த தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு தேசம் ஒன்று சேர வேண்டும். ரிலையன்ஸ் அறக்கட்டளை நாட்டு மக்களுடனும், பெண்களுடனும் துணையாக நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆதரவற்றோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை துணை நிற்கும் என்று நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

இது தான் ரிலையன்ஸ் குழுமம்

இது தான் ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மார்ச் 31, 2019ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், 6,22,809 கோடி ரூபாய் வருவாயை கொண்ட ஒரு நிறுவனமாகும். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான இது அதன் நிகரலாம 39,588 கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு, சில்லறை வர்த்தகம், பெட்ரோ கெமிக்கல்ஸ், டிஜிட்டல் சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் என பலவற்றிலும் கொடி கட்டி பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL chairman mukesh ambani announced donation of Rs.500 crore to PM care fund

Reliance industries chairman mukesh ambani Contribution of Rs. 500 crore to the PM-CARES Fund. Also Contribution of Rs.5 crore to the Chief Minister’s Relief Fund of Maharashtra and Contribution of Rs. 5 crore to the Chief Minister’s Relief Fund of Gujarat.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X