ஊழியர்களை உற்சாகபடுத்தும் முகேஷ் அம்பானி.. ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தடுப்பூசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பில்லியனரான முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கு தடுப்பூசி திட்டத்தினை அறிவித்துள்ளார்.

 

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலானது தனது உக்கிரத்தினை காட்டி வருகின்றது. இதன் காரணமாக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

80,000 ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு..!

ஊழியர்களுக்கு தடுப்பூசி

ஊழியர்களுக்கு தடுப்பூசி

இதற்கிடையில் மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசியை நேரடியாக வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இந்தநிலையில் தான் பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளது.

சுரக்ஷா திட்டம்

சுரக்ஷா திட்டம்

மே ஒன்றாம் தேதி முதல் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சுய தடுப்பூசி திட்டத்திற்கு ரிலையன்ஸ் சுரக்ஷா என பெயரிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
 

பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

இது குறித்த கடித்தத்தினை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீதா அம்பானியும் வெளியிட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் மறைவதற்கு முன்னர், அடுத்த சில வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இதில் எந்த சமரசம் இருக்கக்கூடாது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சுரக்ஷா திட்டம் எப்போது?

சுரக்ஷா திட்டம் எப்போது?

ஊழியர்களுக்கான இந்த தடுப்பூசி திட்டம் மே1 முதல் தொடங்கவுள்ளது. ஆக ஊழியர்கள் தாமதமின்றி தடுப்பூசியினை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்கள் குடும்பத்தில் தகுதிவாய்ந்த உறுப்பினர்களும் போட்டுக் கொள்ள ஊக்குவிக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். எங்களின் முன்னுரிமை மக்களின் பாதுகாப்பும் ஆரோக்கியம் தான். ஆக இந்த கொள்கையை நிலை நிறுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்றும் அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL to roll out its own covid-19 vaccination programme for its employees from may 1

Reliance industries latest updates.. RIL to roll out its own covid-19 vaccination programme for its employees from may 1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X